பத்தாம்
வகுப்பு
மாதிரி
திருப்புதல் மற்றும் பொதுத் தேர்வு-8- 2025
மொழிப்பாடம்
– தமிழ்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
அறிவுரைகள்
:
1) அனைத்து
வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில்
குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2)
நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்
பயன்படுத்தவும்.
குறிப்பு : I ) இவ்வினாத்தாள்
ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல்
வேண்டும்.
பகுதி – I ( மதிப்பெண்கள்
: 15 )
i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத்
தேர்ந்தெடுத்துக்
குறியீட்டுடன்
விடையினையும் சேர்த்து எழுதவும்.
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக. (15x1=15)
1. ஒரு விரலைக் காட்டிச் ‘ சிறியதோ? பெரியதோ?’ என்று
கேட்டல் ____________
அ) இட வழு ஆ) கால வழு இ) வினா வழு ஈ) மரபு வழு
2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல்
கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?
அ) உதியன்;சேரலாதன் ஆ)
அதியன்;பெருஞ்சாத்தன்
இ) பேகன்;கிள்ளிவளவன்
ஈ)
நெடுஞ்செழியன்;திருமுடிக்காரி
3. ”தூக்குமேடை
என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர்
வழங்கப்பட்டது. இத்தொடருக்கான வினா எது?
அ) தூக்கு
மேடை நாடகத்தில் நடித்தவர் யார்?
ஆ)
கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ) தூக்கு
மேடை என்பது திரைப்படமா? நாடகமா?
ஈ) யாருக்குப்
பாராட்டு விழா நடத்தப்பட்டது?
4. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக்
குறிக்கும் பயிர்வகை ____
அ) குலைப்பெயர் வகை ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை ஈ) இலைப்பெயர் வகை
அ) விளித்தொடர் ஆ) எழுவாய்த்
தொடர்
இ) வினையெச்சத் தொடர் ஈ) பெயரெச்சத்
தொடர்
6. “ மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து“
என வரிகள் இடம் பெற்ற நூல் ____
அ) முக்கூடற்பள்ளு ஆ) குறுந்தொகை இ) அகநானூறு ஈ) ஐங்குறுநூறு
7. ‘ துளிர் பார்த்தாள்’ என்ற எழுவாய்த் தொடரின் பெயரெச்சத்
தொடரைத் தேர்க___
அ) பார்த்துச் சிரித்தாள் ஆ) பார்த்த துளிர்
இ) துளிரே பார்! ஈ) துளிர் வளர்ந்தது
8.இரவு 2 மணி முதல் காலை 6 வரை உள்ள சிறுபொழுது_________
அ) காலை ஆ) யாமம் இ) வைகறை ஈ) எற்பாடு
9. பாடாண் திணை என்பது _____
அ) பாடு ஆண் மகனின் ஒழுக்கலாறுகள் ஆ)
பொருந்தா காமம்
இ) பொதுவான தகவல்கள் ஈ) ஒரு தலை காமம்
10. வெரீஇ – சொல்லின் இலக்கணக் குறிப்பு______
அ) சொல்லிசை அளபெடை ஆ) இன்னிசை அளபெடை
இ) ஒற்றளபெடை ஈ) உயிரளபெடை
11. புதிருக்கான விடையைக் காண்க. ஓரெழுத்தில் சோலை
– இரண்டெழுத்தில் வனம்_____
அ) நறுமணம் ஆ) காடு இ) விண்மீன் ஈ) புதுமை
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12,
13, 14, 15) விடை தருக.
விதிமுறை கதலி பூகம் கவரிவால் விதானம் தீபம்
புதியதார் நிறைநீர்க் கும்பங் கதலிகை புனைந்த மன்றல்
கதிர்மணி மாடத் தம்பொற் சேக்கைமேற் கற்றோர் சூழ
மதிபுனை காடன் தன்னை மங்கல அணிசெய் தேற்றி
12. இப்பாடல் இடம் பெற்ற நூல்_
அ) கம்பராமாயணம் ஆ) திருவிளையாடற்புராணம்
இ) தேம்பாவணி ஈ) முத்தொள்ளாயிரம்
13. “கதலி”- என்பதன் பொருள்_
அ) வாழை ஆ) முத்து இ) பாக்கு ஈ) சங்கு
14. இப்பாடலில் இடம் பெற்றுள்ள எதுகையைக் காண்க-
அ) விதிமுறை – விதானம் ஆ) கவரிவால் – கதிர்மணி
இ) மாட
– காடன் ஈ) கற்றோர்
- தேற்றி
15.இப்பாடலின் ஆசிரியர் ____
அ)இளங்கோவடிகள் ஆ)பரஞ்சோதி முனிவர் இ)அதிவீரராம
பாண்டியர் ஈ) ஐயூர்
முடவனார்
பகுதி-II
பிரிவு-1 (மதிப்பெண்:18)
குறிப்புகள்:எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடை யளிக்கவும்.
(21 -வது வினாவிற்கு கட்டாயமாக
விடையளிக்கவும்.
(4x2=8)
16. விடைக்கேற்ற வினா அமைக்கவும்.
அ) மேகம் நம்மை வெயிலிருந்து பாதுகாக்கிறது;
மழை தருகிறது.
ஆ) மொழிபெயர்ப்பு என்பது தனிகலை.
17. கரப்பிடும்பை இல்லார் – இத்தொடரின் பொருள் கூறுக.
18. தானியங்களைக் குறிக்கும் சொல்வகைகள் நான்கு எழுதுக.
19. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக
முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் குறிப்பிடுகிறது?
20. உரைப்பாட்டு மடை என்றால் என்ன?
21. “தது” என முடியும் குறளை எழுதுக.
பிரிவு-2
குறிப்புகள்:எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்கவும்.(5x2=10)
22. அன்பின் ஐந்திணைகள் யாவை?
23. கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் என்றால் என்ன?
24. பழமொழிகளை நிறைவு செய்க
அ) உப்பில்லாப் பண்டம் __________
ஆ) அளவுக்கு ________________
25. படிப்போம்; பயன்படுத்துவோம்!.
அ) Discussion ஆ) Gratuity
குறிப்பு: (செவி மாற்றுத்திறனாளருக்கான மாற்று வினா)
தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.
அ) முன்னுக்குப் பின் ஆ) மறக்க நினைக்கிறேன்
26. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருபொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்
முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
27. பகுபத உறுப்பிலக்கணம் தருக. மயங்கிய
28. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பகுதி-III
பிரிவு-1
(மதிப்பெண்:18)
குறிப்புகள்:எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
சுருக்கமாக விடையளிக்கவும்.(2x3=6)
29. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்“ இடம்
சுட்டிப் பொருள் விளக்குக
30. உரைப்பத்தியைப் படித்து விடை தருக.
அ). இந்தியாவின் முதுகெலும்பு எது?
ஆ). வடகிழக்கு பருவக்காற்று வீசும் காலம் எது?
இ). இந்தியாவிற்கு தென்மேற்குப் பருவக்காற்று கொடுக்கும் மழையின் அளவு யாது?
31. ‘ இன்மையிலும் விருந்தோம்பல் ‘ குறித்து புறநானூற்றுப்
பாடல் தரும் செய்தியை எழுதுக
பிரிவு-2
குறிப்புகள்:எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்கவும்.
வினாஎண்: (34- வது வினாவிற்கு
கட்டாயமாக விடையளிக்கவும்.) (2x3=6)
32. எவையெல்லாம்
அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
33. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்பு
செய்தது ஏன்? விளக்கம் தருக.
34.அ) “மாற்றம்” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல்
எழுதுக. (அல்லது)
ஆ) “நவமணி ” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
பிரிவு-3
குறிப்புகள்:எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.(2x3=6)
35. தடித்த எழுத்துகளின் தொகை நிலைத் தொடர்களை வகைப்படுத்துக.
அ) அன்புச்செல்வன் திறன்பேசியின்
தொடுதிரையில் படித்துக் கொண்டிருந்தார்.
ஆ)
அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.
இ) வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.
36. சொல்லப் பயன்படுவர் சான்றோர; கரும்புபோல்
கொல்லப்
பயன்படும் கீழ். இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
37. பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்
தாள்வினை
இன்மை பழி - இக்குறட்பாவிற்கு அலகிட்டு
வாய்பாடு தருக.
பகுதி-IV
(மதிப்பெண்:25)
குறிப்புகள்:அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும். (5x5=25)
38.அ) மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும்
விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக
விளைந்த
கலை அன்னமே
நதியில் விளையாடி
கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே
– வளர்
பொதிகை மலைதோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த
தமிழ் மன்றமே
- கவிஞர் கண்ணதாசன்
இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க. (அல்லது)
ஆ) முயற்சி
குறித்து ஆள்வினை உடைமை என்னும் அதிகாரம் வழியாக வள்ளுவர் கூறும் கருத்துகளைத் தொகுத்து
எழுதுக.
39.அ) “பள்ளியைத் தூய்மை வைத்திருத்தல்” என்ற நீ உருவாக்கிய
செயல்திட்டத்தை நடைமுறைப் படுத்த ஒப்புதல் வேண்டி உன் தலைமை ஆசிரியருக்குக் கடிதம்
எழுதுக. (அல்லது)
ஆ) மாநில அளவில் நடைபெற்ற ‘ கலைத்திருவிழா ‘ போட்டியில்
பங்கேற்று ‘ கலையரசன் ‘ பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
40. காட்சியை கண்டு கவினுற எழுதுக.
41.
கதவு
எண் 66, திருவள்ளுவர் தெரு, திருச்சி என்ற முகவரியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின்
மகன் அறிவழகன் என்பவர் கணினியில் டேலி , தட்டச்சுப்பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
மேல்நிலை முடித்து, அங்குள்ள அச்சகத்தில் கணினி தட்டச்சு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கிறார்.
உரிய படிவம் நிரப்புக.
42.மொழிபெயர்க்க.
Translation is an art in itself. No one can do that. A translator should
be neutral and not attached to any language.
Specifically, he should be proficient in both the languages i.e. both the
language and the source language.
They should be familiar with the social and cultural conditions of the both
languages. (அல்லது)
ஆ) மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும்
நன்மைகளையும் பட்டியலிடுக.
குறிப்புகள் : (செவி மாற்றுத்திறனாளருக்கான
மாற்று வினா)
தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.
அண்ணன் : எங்கே செல்கிறாய்? ( தொடர்மொழி )
தம்பி : ______ ( தனிமொழி )
அண்ணன் : _______ _______ வாங்குகிறாய்?( தொடர்மொழி )
தம்பி : ________ ________ ( தொடர்மொழி )
அண்ணன்: __________ ( தனிமொழி )
தம்பி : __________ __________ ( தொடர்மொழி )
அண்ணன் :
பகுதி-V ( மதிப்பெண்கள்:24)
குறிப்புகள்:அனைத்து வினாக்களுக்கும்
விரிவான விடையளிக்கவும்.(3x8=24)
43.அ) காற்று பேசியதுப் போல, நிலம் பேசுவதாக எண்ணிக்
கொண்டு எழுதுக.
(அல்லது)
ஆ) போராட்டக் கலைஞர்
– பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக்
கொண்டு கட்டுரை எழுதுக.
44.அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க. (அல்லது)
ஆ)கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுஜர்
செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.
45.அ) உங்களைக்
கவர்ந்த எவரேனும் ஓர் அறிஞர் அல்லது அரசியல் தலைவர் தம் வாழ்வில் நடந்த
நிகழ்வுகளைத் தாமே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக. (அல்லது)
ஆ) குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக.
பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த
கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக
குறிப்பு – நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள்
– மொழிநடை- வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் – நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு
– நூல் ஆசிரியர்.
முதல் மதிப்பெண் 100/100 பெற்று வெற்றி
பெற வாழ்த்துகள்!
