www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : டிசம்பர்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 7
தலைப்பு : பா – வகை, அலகிடுதல்
அறிமுகம் :
Ø எழுத்துகளின் வகைத் தொகைகளைக் கேட்டறிந்து அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø தமிழின் நான்கு பாவகைகள் குறித்த அறிமுகம் பெற்று மேலும் கற்க ஆர்வம் கொள்ளுதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்.
Ø தமிழ் எழுத்துகளின் வகை தொகைகளைக் கூறல்
Ø குறில்,நெடில்,ஒற்று பற்றிக் கூறல்
Ø எளிய முறையில் அலகிடும் முறையை விளக்குதல்
Ø பா வகைகளைக் கூறல்
Ø வெண்பா, ஆசிரியப்பா இவற்றின் பொது இலக்கணத்தைக் கூறல்
கருத்துரு வரைபடம் :
பா – வகை, அலகிடுதல்
விளக்கம் :
பா- வகை, அலகிடுதல்
o எழுத்து,அசை,சீர்,தளை, அடி, தொடை என்பது யாப்பின் உறுப்புகள்
o எழுத்து : குறில், நெடில், ஒற்று
o அசை : நேர் அசை, நிரை அசை
o சீர் : ஓரசைச்சீர், ஈரசைச் சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்
o பா – நான்கு வகைப்படும்
o வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
o வெண்பா, ஆசிரியப்பா பொது இலக்கணம்
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
செயல்பாடு :
Ø தமிழ் எழுத்துகளின் வகை தொகைகளை அறிந்து யாப்பின் உறுப்புகளை உணர்தல்
Ø குறில், நெடில் மாத்திரை அளவுகளை உணர்தல்
Ø அசை பிரித்தல்
Ø வாய்பாடினைஅறிந்து அசை பிரித்தல்
Ø சீர் வாய்பாடுகளை அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø பா எத்தனை வகைப்படும்?
Ø யாப்பின் உறுப்புகள் யாவை?
MOT :
Ø பாக்கள் எத்தனை ? அதன் ஓசைகளைக் குறிப்பிடுக
Ø வெண்பாவின் பொது இலக்கணம் யாது?
HOT :
Ø சீர் அசை வாய்பாடுகளைக் கூறுக.
Ø உனது புத்தகத்தில் உள்ள ஏதேனும் ஒரு குறளை அலகிடுக
கற்றல் விளைவுகள் : பா – வகை, அலகிடுதல்
T1044 செய்யுளின் யாப்பு அமைப்புகளை அறிந்து படித்தல், அவற்றுள் அமைந்துள்ள யாப்புக்
கூறுகளைப் புரிந்து கொண்டு செய்யுள்கூறுகளைப் பிரித்தல், யாப்புக் கட்டமைப்பின்
நுட்பமறிந்து சுவைத்தல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø மனப்பாடக் குறள் ஐந்திற்கு அலகிட்டு வாய்பாடு தருக.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை