பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 1
குறு வினாக்கள்
1. பலகை - என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக்
காட்டுக.
பலகை – மரப்
பலகை – தனிமொழி
பல
+ கை = பல கைகள் – தொடர்மொழி
2. மன்னும்
சிலம்பே!மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
முடிதாழ வாழ்த்துவமே!
– இவ்வடிகளில்
இடம் பெற்றுள்ள காப்பியங்களின்
பெயர்களை எழுது
சிலப்பதிகாரம்
மணிமேகலை
3. ஒரு
தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான
தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
ஒரு
தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன. - சரி
ஒரு
சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. - தவறு
ஒரு
சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. - சரி
காரணம்:
தாறு
என்பது வாழைக்குலை
சீப்பு
என்பது வரிசையான பழங்கள்
4. ‘ கொள்வோர்
கொள்க;குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’
- பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச்
சொற்களைக்
கண்டறிந்து எழுதுக.
மோனை :
கொள்வோர் – கொள்க ; உள்வாய் –
உடம்பு
எதுகை
:
கொள்வோர் – கொள்க ; உடம்பு
– தொடாது
5. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல்வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
சம்பா நெல்வகை :
- ஆவிரம்பூச்சம்பா
- ஆனைக்கொம்பன் சம்பா
- குண்டுச்சம்பா
- சீரகச்சம்பா