பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 1
சிறு வினாக்கள்
இளந்தமிழ் வழிகாட்டி
______________________________________________________________________________________________________
1. தமிழன்னையை
வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
- * அன்னை மொழியானவள்
- * அழகான செந்தமிழானவள்
- * பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி
- * பாண்டியன் மகள்
- * திருக்குறளின் பெருமைக்கு உரியவள்
- * பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு,
- ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.
2. புளியங்கன்று
ஆழமாக நடப்பட்டுள்ளது.
– இது போல் இளம்
பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.
* பனைவடலி ஆழமாக நடப்பட்டது |
* மாங்கன்று ஆழமாக நடப்பட்டது. |
* சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது |
* கத்தரி நாற்று வளர்ந்து வருகிறது. |
* தென்னம்பிள்ளை நடப்பட்டுள்ளது. |
3. ‘அறிந்தது,அறியாதது,புரிந்தது,புரியாதது,தெரிந்தது,தெரியாதது,பிறந்தது,பிறவாதது’ இவை அனைத்தையும் யாம் அறிவோம்.அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
வினைமுற்று |
தொழிற்பெயர் |
வினைமுற்று |
எதிர்மறை தொழிற்பெயர் |
அறிந்தது |
அறியாதது |
அறியாமை |
|
புரிந்தது |
புரிதல் |
புரியாதது |
புரியாமை |
தெரிந்தது |
தெரிதல் |
தெரியாதது |
தெரியாமை |
பிறந்தது |
பிறத்தல் |
பிறவாதது |
பிறவாமை |