பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 1
மீத்திற மாணவர்களுக்கான
நெடு வினாக்கள்
1. நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர்
வழிநின்று விளக்குக.
குறிப்புச்சட்டம் செம்மொழி தமிழின் சிறப்பு தமிழ்ச்சொல் வளம் சொல்வளமும்
நாட்டு வளமும் சான்றுகள் முடிவுரை |
செம்மொழி :
“ நாடும் மொழியும் நமதிரு கண்கள் “ என்கிறார் பாரதியார். தமிழானது தொன்மை மிக்க மொழி.
பிறமொழி தாக்கம் இல்லாத மொழி உண்டு என்றால் அது தமிழ் மட்டுமே, திராவிட
மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் விளங்குகிறது தமிழ்மொழி. இயல், இசை,நாடகம்
என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது. அதிக சொல்வளமும் மிக்கது நம் தமிழ் மொழி.
தமிழின் சிறப்பு :
தமிழ் மொழி, உலகின் மூத்த மொழியாகவும், உயர் தனிச் செம்மொழியாகவும்
திகழ்கிறது. காலத்திற்கு ஏற்பத் தன்னை வளர்த்துக் கொண்டே இருப்பதால் சொல்வளம் நிறைந்த,
நிலைத்த மொழியாக விளங்கி வருகிறது. ஒவ்வொன்றையும் தனித்தனியாக சொற்களைக் கொண்டு சொற்பஞ்சம்
இல்லாமல் அழைப்பது தமிழ்மொழியின் தனிச்சிறப்பு.
தமிழ்ச்
சொல்வளம்:
மொழிஞாயிறு என்று
போற்றப்ப்படும் பாவாணரின் தமிழ்ச் சொல்வளம் பற்றிய கருத்துகளும், விளக்கங்களும் தமிழ்மொழி
மீதான பெருமிதத்தை மிகுதிப்படுத்துகின்றன.
நாட்டு
வளமும், சொல்வளமும்:
ஒரு
நாட்டின் வளமும் அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் பாவாணர். நாட்டு
வளம், சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தை உணர்த்துகிறது.
எடுத்துக்காட்டாக இலைக்குத் தரப்பட்டுள்ள
பல பெயர்களைச் சொல்லலாம். இலையின் வன்மை, மென்மை ஆகிய தன்மைகளைக் கொண்டு தாள், ஓலை,
தோகை, இலை எனத் தமிழில் பலவகைப் பெயர்கள் அமைந்திருக்கின்றன.
விளைப்பொருட்களின் மிகுதியாலும் சொல்வளம் பெருகிறது. தமிழ்நாட்டில் பலவகைத் தானியங்கள் விளைகின்றன. நெல்வகைகளில் ஏராளமான நெல்வகைகள் விளைவிக்கப்படுகின்றன. அவற்றுள் சம்பா நெல் வகை சில பெயர்கள். ஆவிரம்பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரைவாலிச்சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா. போன்ற பெயர்கள் சொல்வளத்தை உணர்த்த உதவுகின்றன.
மேலும் பயிர்களின் அடிப்பகுதி, கிளைப்பகுதி,
இலை, காய், கனி, தோல், மணி, இளம் பயிர்வகை முதலானவற்றைக் குறிப்பதற்கு ஏராளமான தமிழ்ச்
சொற்கள் உள்ளன.
அடியின் பெயர் வகை :-
தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.
தாள்,
தண்டு,
கோல்,
தூறு,
தட்டு,
கழி,
கழை,
அடி
கிளைப்பெயர் வகை
:
தாவரங்களின் அடிப்பகுதியிலிருந்து கிளைத்துச் செல்லும் கிளைக்களுக்கு
தனித்தனிப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
கொம்பு,கிளை,சினை,போத்து,குச்சி,இணுக்கு
இலைப்பெயர் வகை
:
ஒவ்வொரு தாவரத்தின் இலைக்கும்
வேறு பெயர் இருப்பதும், காய்ந்த இலைக்கும் கூட பெயர்கள் உள்ளன.
தாவரத்தின் இலைகளின் பெயர்கள்
: இலை, தாள், தோகை, ஓலை
காய்ந்த இலைகளின் பெயர் –
சருகு
காய்ந்த தாள், தோகை – சண்டு
குலைப் பெயர் வகை :
காய்கள், கனிகள் ஆகியன மொத்தமாகத் தொகுதியாகக் காய்த்திருப்பதற்கும்
வேறு வேறு பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கொத்து,
குலை, தாறு, கதிர்
இளம்பயிர்வகை :
தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள்.
நாற்று,
கன்று,
குருத்து,
பிள்ளை,குட்டி,
மடலி,
வடலி,
பைங்கூழ்
முடிவுரை :
சொல்வளம் நிறைந்த மொழியானது அது பயன்படுத்தப்படும் நாட்டின் வளத்தையும் நாகரிகத்தையும் உணர்த்துவதுடன் பொருளைக் கூர்ந்து நோக்கி நுண்பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும் உணர்த்துகிறது. பாவாணரின் தமிழ்ச்சொல்வளம் பற்றிய கருத்துகளை உணர்ந்து மொழியைப் பயன்படுத்துவோம்.
2. . காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை;அறிக! கண்ணதாசன்.
திரண்ட கருத்து :
கவிதையின் ஆசிரியர் தனக்கே உரிய பாணியில் கவிஞன் என்பவனின்
இயல்புகள், கடமைகள், தொழில்கள் ஆகியவற்றை கூறியுள்ளார். காலத்தை கணித்து கவிதைகள் படைப்பதாலும்,
ஆக்கல், அளித்தல், அழித்தல் என கடவுள் செய்யும் பணிகளை தானும் செய்வதாக இறுமாப்புடன்
கூறியுள்ளார்.
மையக் கருத்து :
கவிஞன் என்பவன் தன்னை இறைவனுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்.
மோனை நயம்:
செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம்.
கவிஞன் கருப்படு
எதுகை நயம்:
செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை
நயம்.
கருப்படு உருப்பட
சந்த நயம்:
இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.
இயைபு நயம்:
இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ
ஒன்றி வருதல் இயைபு நயம்.
தெய்வம் செல்வம்
முரண் நயம்:
முரண்பாடாக அமைவது முரண்.
ஆக்கல்
× அழித்தல்
3. “ புயலிலே ஒரு தோணி
“ கதையில் இடம்
பெற்றுள்ள வருணனைகளும்,
அடுக்குத்
தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில், தோணி
படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
குறிப்புச் சட்டம்
முன்னுரை புயல் வருணனை அடுக்குத் தொடர் ஒலிக் குறிப்பு முடிவுரை |
முன்னுரை :
நூலாசிரியர் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர்
பா.சிங்காரம். அவர் இந்தோனேசியாவில் மெபின் நகரில் இருந்த போது இரண்டாம் உலகப்போர்
நிகழ்ந்தது. ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு
தோணி. பா.சிங்காரம் எழுதியுள்ள இந்த கதையில் இடம் பெற்ற புயல் வருணனை, அடுக்குத்
தொடர், ஒலிக் குறிப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
புயல் வருணனை :
புயலிலே ஒரு தோணி என்னும் கதையில் பா.சிங்காரம் அவர்கள், புயலின்
நிகழ்வை அச்சம் மிகுந்த வருணனை கையாண்டு உள்ளார். இவை போன்ற வருணனைகள் கதையில்
உயிர்ப்பையும், தொடர்ந்து படிக்க வேண்டிய ஆர்வத்தையும் உண்டாக்குகிறது.
கதையில் காணும் வருணனை சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
·
மேகப்பொதிகள்
திரண்டன.
·
மேகங்கள்
கும்மிருட்டு
·
கிடுகிடுக்கும்
இடி முழக்கம் வானத்தைப் பிளந்தது.
·
மலைத்
தொடர் போன்ற அலைகள்
·
வானம்
பிளந்து தீ கக்கியது.
·
வெள்ளத்தால்
உடை உடலை ரம்பமாய் அறுக்கிறது.
·
கிறுகிறுத்துக்
கூத்தாடுகிறது தொங்கான்.
அடுக்குத் தொடர் :
புயலிலே ஒரு தோணி என்னும்
கதையில் பா.சிங்காரம் அவர்கள்,
புயலின் போது அங்கிருந்த மக்களின் அச்சத்தை அடுக்குத் தொடர்கள் வாயிலாக வெளிப்படுத்தி இருப்பது
சிறப்பானது. அந்த அடுக்குத் தொடர் சொற்கள் படிப்பவர்களுக்கு அதே அச்ச உணர்வை வழங்குவது
சிறப்பானது. கதையில் காணும் அடுக்குத் தொடர் சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
·
அருவியருவி
·
நடுநடுங்கி
·
தாவித்
தாவி
·
குதி
குதித்தது
·
இருட்டிருட்டு
·
விழுவிழுந்து
·
கரை!
கரை! கரை!
ஒலிக் குறிப்பு :
புயலிலே ஒரு தோணி என்னும்
கதையில் பா.சிங்காரம் அவர்கள்,
புயலின் போது அந்த இடம் எவ்வாறு இருந்தது என்பதனை
படிப்பவரின் கண்முன்னே காட்டுகிறது அவரின் ஒலிக்குறிப்புச் சொற்கள். நீங்களும்
கதையில் காணும் ஒலிக்குறிப்புச் சொற்களை காணுங்கள்.
·
கும்மிருட்டு
·
குருட்டிருட்டு
·
கடலில்
சிலுசிலு, மரமரப்பு
·
ஙொய்ங், புய்ங்
ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்
தோணி படும்பாடு:
·
கொளுத்திக்
கொண்டிருந்த வெயில் இமை நேரத்தில் மறைந்து விட்டது.
·
அலைகள்
எண்ணெய் பூசியது போல் மொழுமொழுவென நெளிந்தன.
·
இடி
முழக்கத்துடன் மின்னல் கீற்றுகள் வானைப் பிளந்தன.
·
வானம்
உடைந்து கொட்கொட்டென்று வெள்ளம் கொட்டியது.
·
இருளிருட்டு, இருட்டிருட்டு
கப்பித்தான் கத்துகிறான்.
·
மலைத்தொடர்
போன்ற அலைகள் மோதிக் தாக்குகின்றன.
·
தொங்கான்
நடுநடுங்கித் தாவித்தாவிக் குதிகுதித்து விழுவிழுந்து நொறுநொறு என நொறுங்குகிறது.
·
தொங்கான்
சுழல்கிறது. மூழ்கி நீந்துகிறது.
·
புரட்டிப்போட்ட
புயல் நின்றது. பறவைகளும்,
மீன்களும் கூட்டம் கூட்டமாய்ப் பறந்து விளையாடின.
முடிவுரை :
·
பகல்
இரவாகி உப்பக்காற்று உடலை வருடியது
·
அடுத்த
நாள் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள்.
·
இவ்வாறாக
வருணனைகளோடு, அடுக்குத் தொடர்களையும், ஒலிக்
குறிப்புகளையும் கொண்டு தோணி படும் பாட்டை பா.சிங்காரம் விவரிக்கின்றார்