மாதிரி அரசு பொதுத் தேர்வு -வினாத்தாள்-4- 2025
மொழிப்பாடம் – தமிழ்
பத்தாம் வகுப்பு
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )
அ) சரியான விடையைத் தேர்வு செய்க. 15×1=15
1. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்________
அ) தமிழழகனார் ஆ) அப்பாத்துரையார்
இ) தேவ நேய பாவாணர் ஈ) இரா.இளங்குமரனார்
2. வெட்டிய மரங்களுக்கு ஈடாக ____________ நட்டனர்.
அ) கொடிகளை ஆ) நாற்றுகளை இ) மரங்களை ஈ) மரக்கன்றுகளை
அ) ஆறில்லா ஊருக்கு - 1. சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஆ) உப்பில்லாப் பண்டம் - 2. நூறு வயது
இ) நொறுங்கத் தின்றால் - 3. குப்பையிலே
ஈ) ஒரு பானை - 4. அழகு பாழ்
அ) அ-4.ஆ-3,இ-2,ஈ-1 ஆ) அ-3,ஆ-2,இ-4,ஈ-1
இ) அ-2,ஆ-4,இ-1,ஈ-3 ஈ) அ-1,ஆ-2இ-3,ஈ-4
4. “நண்பா எழுது! என்பது ___________
அ) விளித்தொடர் ஆ) வினையெச்சத் தொடர் இ) வினைமுற்றுத் தொடர்
ஈ) எழுவாய்த் தொடர்
5. குலசேகராழ்வார் அவர்களின் காலம்______
அ) பத்தாம் நூற்றாண்டு ஆ) எட்டாம் நூற்றாண்டு
இ) ஏழாம் நூற்றாண்டு ஈ) பதினெட்டாம் நூற்றாண்டு
6. கலைஞரின் கதை,வசனங்களில் பகுத்தறிவு பேசிய படங்கள்
அ. பணம் ஆ. பாசப்பறவைகள் இ. பராசக்தி ஈ. பூம்புகார்
7. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது – இக்குறளில் இன்மை என்ற சொல்லின் பொருள்
அ) வறுமை ஆ) செல்வம் இ) அறிவு ஈ) கல்வி
8. உரை பாட்டு மடை வரும் காப்பியம்
அ) மணிமேகலை ஆ) சிலப்பதிகாரம் இ) வளையாபதி ஈ) குண்டலகேசி
9. உதகமண்டலம் – ஊர்ப்பெயரின் மரூஉவைத் தேர்க
அ) உதகம் ஆ) மண்டலம் இ) உதகை ஈ) உதகை மண்டலம்
10. தமிழர் வாழ்வில் பண்பாட்டின் மகுடமாக கருதப் படுவது___________
அ) விளைச்சல் ஆ) மஞ்சுவிரட்டு இ) பொன் ஏர் பூட்டுதல் ஈ) விருந்தோம்பல்
11. எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் – இவ்வரிகளை எழுதியவர்
அ) கண்ணதாசன் ஆ) நாகூர் ரூமி இ) ஜெயகாந்தன் ஈ) கு.ப.ரா
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
“பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரம யோகி
விண்ணிடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்
புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ
எண்ணிய பெரியோர்க்கு என்னா ஏத்தினான் இறைஞ்சி னானே”
12. பாடலில் இடம்பெற்ற அடி எதுகை சொற்கள் _________
அ. பெண்ணினை - கொண்ட ஆ. விண்ணிடை – மீனவன்
இ. புண்ணிய - எண்ணிய ஈ. சிறியோர் - பெருமை
13.பாடலில் இடம் பெற்றுள்ள சீர் மோனைச் சொற்கள் ______
அ. பெண்ணினை - புண்ணிய ஆ. பெருந்தகை - பெருமை
இ. விண்ணிடை - வானோர்ஈ. புண்ணிய – பரம யோகி
14. ‘ மீனவன் ‘ என்பது யாரைக் குறிக்கிறது?
அ. கபிலன் ஆ. இடைகாடன் இ. இறைவன் ஈ. பாண்டியன்
15. இப்பாடலை இயற்றியவர் _____________
அ. நப்பூதனார் ஆ. பெருங்கெளசிகனார் இ. பரஞ்சோதி முனிவர் ஈ. கா.ப.செய்குதம்பிப் பாவலர்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)
16. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ) ராகுல் சாங்கிருத்யாயன் 1942ம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது ‘ வால்காவிலிருந்து கங்கை வரை ‘ என்ற நூலை இந்தி மொழியில் எழுதினார்.
ஆ) குழந்தையின் தலை 5-6ம் மாதங்களில் மென்மையாக அசையும் இப்பருவத்தை செங்கீரைப் பருவம் என்பர்.
17. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர் குறித்து எழுதுக.
18. உறங்குகின்ற கும்பகன்ன ‘ எழுந்திராய் எழுந்திராய் ‘ கால தூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘ – கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
19. காற்றின் ஆற்றல்,வேகம் இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன?
21. மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப் போரைக் காணும் உவமையைக் கொண்ட திருக்குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக
23. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : மயங்கிய
25. கலைச்சொல் தருக.
அ) MODERN LITERATURE ஆ) IRRIGATION
26. பின் வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.
அ) வரப் போகிறேன் ஆ) மறக்க நினைக்கிறேன்
27. எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.
அ) நாற்றிசையும் செல்லாத நாடில்லை
ஆ) நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
அகராதியில் கண்டு பொருள் எழுதுக
அ) ஊண் – ஊன் ஆ) அண்ணம் - அன்னம்
28. பொதுவியல் திணை என்பது யாது?
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. தமிழ்மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்து கொண்ட இரண்டினை எழுதுக.
30. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
அ. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
ஆ. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
இ. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)
32. பயனற்ற செல்வமாக நன்றிஇல் செல்வத்தில் வள்ளுவர் கூறும் கருத்துகள் யாவை?
33. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப் படை எவ்வாறு காட்டுகிறது?.
34. அ ) “ தண்டலை “ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக. (அல்லது)
ஆ) ‘ மாற்றம் ‘ – எனத் தொடங்கும் காலக்கணிதப் பாடல்.
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். - இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
36. கரப்பிடும்பை இல்லாரைக் காணிக் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும் – இக்குறளை அலகிடுக.
37. அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) கயவர்களின் பண்புகளை “ கயமை “ என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளைக் கூறுக. ( அல்லது )
ஆ) காசிக்காண்டம் குறிப்பிடும் இல்லற ஒழுக்கங்களில் எவையேனும் ஐந்தினை எழுதி, உங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினரை எதிர்கொண்டு, நீங்கள் விருந்தளித்த நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதுக.
39. அ) “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “ என்ற செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி அது உங்கள் பள்ளியில் தலைமையாசிரியர் ஒப்புதலுடன் செயல்படுத்திட அனுமதி வேண்டி தலைமையாசிரியருக்கு கடிதம் எழுதுக. ( அல்லது )
ஆ. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.
இடம் – பள்ளிக் கலையரங்கம் நாள் -08.03.2019
கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல் – தலைமையாசிரியரின் வரவேற்பு – இதழாளர் கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின் வாழ்த்துரை – மாணவத் தலைவரின் நன்றியுரை.
40. அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக…..
41. நாமக்கல் மாவட்டம்,கம்பர்.நகர், பாரதித் தெரு,கதவிலக்க எண் 38 இல் வசிக்கும் தமிழன்பன் மகன் இளவேலன் 2021 -2022 ஆம் ஆண்டில் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து அதே பள்ளியில் மேல்நிலை முதல் வகுப்பில் வேதியியல் பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேர விரும்புகிறார். அவரின் மதிப்பெண் விபரங்கள்;- பதிவெண் : 1380269 தமிழ் – 98, ஆங்கிலம் – 95, கணிதம் – 91, அறிவியல் – 93, சமூக அறிவியல் – 93 . தேர்வர் தம்மை இளவேலனாக நினைத்துக் கொண்டு உரியப் படிவத்தை நிரப்புக.
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ? - பாரதியார் ( அல்லது )
ஆ) மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக
குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
கருத்தாழமும் வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமூக அமைப்பின் சமூக முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ஜெயகாந்தன். நேர்முக, எதிர்முக விளைவுகளைப் பெற்ரவர். உள்ளடக்க விரிவால் மனிதாபி – மானத்தை வாசகர் நெஞ்சங்களில் விதைத்தவர். இவருடைய படைப்புகளுக்குக் குடியரசுத் தலைவர் விருது., சாகித்திய அகாதெமி விருது, சோவியத் நாட்டு விருது மற்றும் ஞானபீட விருது,தாமரைத் திரு விருதுகளும் கிடைத்துள்ளன. “ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உணடு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும், எனது தனி முயற்சியின் பயனுமாகும்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். ‘ அர்த்தமே படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது’ என்பது அன்னாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
( I ). ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
( ii ). மனிதாபிமானத்தை வாசகர் நெஞ்சில் விதைத்தவர் யார்?
( iii ) வாசகர் மனதில் ஜெயகாந்தன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினார்?
( iv ) எது படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது?.
( v ) உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..
பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 3×8=24
43.அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக. (அல்லது)
ஆ) ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிபாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
44.அ இராமானுசர் நாடகத்தில் வெளிப்படும் மனித நேயத்தை விவரிக்கவும். (அல்லது)
ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க.
45.அ) முன்னுரை – உழவுத் தொழில் – உழவர் – உழவுத் தொழிலின் இன்றியாமை – உழவர்களை மதித்தல் – உணவினை வீணாக்கமல் உண்ணுதல் – முடிவுரை ( அல்லது )
ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பிடுக.
முன்னுரை – ‘ சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ‘ – சாலை விதிகள் – ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – ‘ விபத்தினைத் தவிர்ப்போம் விழிப்புணர்வு தருவோம் ‘ – முடிவுரை
---------------------------------------------------------------------------
எங்களது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழுவில் இணைந்து பல பயனுள்ள கற்றல் வளங்களை பெற கீழ் உள்ள QR CODE மூலம் வருடி குழுவில் இணையவும்.
வாட்ஸ் அப் சேனல் வாட்ஸ் அப் குரூப் டெலிகிராம் முகநூல்
JOIN NOW JOIN NOW JOIN NOW JOIN NOW
முயற்சி + பயிற்சி = வெற்றி
இளந்தமிழ் – வழிகாட்டி மற்றும் வினாவங்கி வேண்டுவோர் தொடர்புக் கொள்ளவும்.
தொடர்பு கொள்ள : 8072426391
KINDLY WAIT FOR 10 SECONDS