10TH-TAMIL-NEW BOOK- CHANGE PORTION-2025-26-UNIT-2


 

அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ் பாடமானது 2025- 2026 ஆம் கல்வி ஆண்டில் பல மாற்றங்களுடன் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு 9 இயல்கள் கொண்ட பாடப்பகுதியானது 2025-26இல் 7 இயல்களாக கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்டப்பட்ட அந்த புதிய பாடப்பகுதியினைக் கொண்ட புத்தகத்தை நமது தமிழ்விதை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த புதிய பாடப்புத்தகத்தில் இயல் வாரியாக என்னென்ன வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது?

எந்தெந்த வினாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது? எந்தெந்த வினாக்கள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது? என்பதை இந்த வலைப்பதிவில் நீங்கள் காணலாம்.

இயல் - 2 இல் 

நீக்கிய வினாக்கள்

மாற்றம் செய்யப்பட்ட வினாக்கள்

புதியதாக சேர்க்கப்பட்ட வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி – 2025-26

பத்தாம் வகுப்பு – தமிழ்

இயல் - 2

நீக்கப்பட்ட வினாக்கள்

சேர்க்கப்பட்ட வினாக்கள்

ஒரு மதிப்பெண் வினாக்கள்

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

   உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

1. பரிபாடல் அடியில் ‘விசும்பில், இசையில்’ ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

2. பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப் பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

2. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல்       -        1. மேற்கு

ஆ) கோடை          -        2. தெற்கு

இ) வாடை             -        3. கிழக்கு

ஈ) தென்றல்           -        4. வடக்கு

3. பெரிய மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

3. ‘ மகிழுந்து வருமா?’ என்பது-

4. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல்       -        1. மேற்கு

ஆ) கோடை          -        2. தெற்கு

இ) வாடை             -        3. கிழக்கு

ஈ) தென்றல்           -        4. வடக்கு

4. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது-

குறுவினா

குறுவினா

1. வசன கவிதை – குறிப்பு வரைக

1. எழுது என்றாள்என்பது விரைவு காரணமாக எழுது எழுது என்றாள்என அடுக்குத் தொடரானது.”சிரித்துப் பேசினார்என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

2. தண்ணீர் குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

 

2. கட்டுரை படித்த – இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக.

3. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

3. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

4. மா அல் – பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

4. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

சிறுவினா

சிறுவினா

1. சோலைக் ( பூங்கா) காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

2. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.

2.வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப்பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து. ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார். – வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக.

3. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

        குறிப்பு :  இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் ‘ சளப் தளப் ‘ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்

-

நெடுவினா

நெடுவினா

1. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக

1. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.

2. புயலிலே ஒரு தோணிகதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும், அடுக்குத் தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

( இயல் – 1 இல் இடம் பெற்றுள்ளது)

பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.

மொழியை ஆள்வோம்

மொழியை ஆள்வோம்

சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்

கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

 

செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

1. மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.

2. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.

3. அரிய மலர் – இலக்கணக் குறிப்புத் தருக.

4. தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளை திருத்துக.

செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்.

1. மலரில் சில எளியவை ஆகக் காரணங்கள் யாவை?

2. பத்தியில் இடம் பெற்றுள்ள தொகா நிலைத் தொடர்கள் நான்கினை எழுதுக.

 

பாரதியின் வசன நடை – சிட்டுக்குருவி

இதில் உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைப் பற்றி வசன நடையில் எழுதுக. என கொடுக்கப்பட்டது ; நீக்கப்பட்டது

பாரதியின் வசன நடை – சிட்டுக்குருவி

பத்தியைத் தொடர்ந்து நிறைவு செய்க என கொடுக்கப்பட்டுள்ளது.

மொழியோடு விளையாடு

மொழியை விளையாடு

எந்த வினாவும் நீக்கப்பட வில்லை.

அகராதியில் காண்க என்பது செயல் திட்ட த்திற்கு பின்பும்

கலைச்சொல் அறிக என்பது படிப்போம்; பயன்படுத்துவோம் எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.,

1. பணிவாய்ப்பு வேண்டி தன் விவரப் படிவம் நிரப்புதல்

2. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் வரைக.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post