10TH-TAMIL-NEW BOOK- CHANGE PORTION-2025-26-UNIT-1

 


அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ் பாடமானது 2025- 2026 ஆம் கல்வி ஆண்டில் பல மாற்றங்களுடன் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு 9 இயல்கள் கொண்ட பாடப்பகுதியானது 2025-26இல் 7 இயல்களாக கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்டப்பட்ட அந்த புதிய பாடப்பகுதியினைக் கொண்ட புத்தகத்தை நமது தமிழ்விதை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த புதிய பாடப்புத்தகத்தில் இயல் வாரியாக என்னென்ன வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது?

எந்தெந்த வினாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது? எந்தெந்த வினாக்கள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது? என்பதை இந்த வலைப்பதிவில் நீங்கள் காணலாம்.

இயல் - 1 இல் 

நீக்கிய வினாக்கள்

மாற்றம் செய்யப்பட்ட வினாக்கள்

புதியதாக சேர்க்கப்பட்ட வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி – 2025-26

பத்தாம் வகுப்பு – தமிழ்

இயல் - 1

நீக்கப்பட்ட வினாக்கள்

சேர்க்கப்பட்ட வினாக்கள்

ஒரு மதிப்பெண் வினாக்கள்

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. ‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது

1. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர் எது?

குறுவினா

குறுவினா

1. வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

1. பலகை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2. ‘ மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடித்தாழ வாழ்த்துவமே!’ -இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

2. ‘ மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடித்தாழ வாழ்த்துவமே!’ -இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

3. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்கான் வற்றாகும் கீழ் – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.

3. ‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’ பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

4. தற்கால உரைநடைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

4. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல்வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

சிறுவினா

சிறுவினா

1. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை எழுதுக.

-

நெடுவினா

நெடுவினா

1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

1. நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழி நின்று விளக்குக.

2. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.

2. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

          கவிஞன் யானோர் காலக் கணிதம்

          கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

          புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

          பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

          இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

          இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

          ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

          அவனும் யானுமே அறிந்தவை;அறிக! -கண்ணதாசன்.

3. ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.

சூழல் – வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும்.ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்

3. புயலிலே ஒரு தோணிகதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும், அடுக்குத் தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

 

மொழியை ஆள்வோம்

மொழியை ஆள்வோம்

எந்த வினாவும் நீக்கப்படவில்லை

நயம் பாராட்டுக

இதில் எழுத வேண்டிய நயங்கள் குறித்து குறிப்பு வழங்கப்பட்டுள்ளது,

மொழியோடு விளையாடு

மொழியை விளையாடு

குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க.

1. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கை – இணைய வழி விண்ணப்பப் பதிவு

2. மாநில அளவில் நடைபெற்ற ‘ கலைத்திருவிழா’போட்டியில் பங்கேற்று ‘கலையரசன் ‘ பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post