10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 7 - PURAPPORUL ELAKKANAM

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      அக்டோபர்

வாரம்              :        இரண்டாம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 7

தலைப்பு          :      புறப்பொருள் இலக்கணம்


அறிமுகம்                   :

Ø  அகப்பொருள் பற்றிய பாடப்பகுதியிலிருந்து சில வினாக்களைக் கேட்டு பாடப்பொருளை ஆயத்தப்படுத்துதல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  பொருளிலக்கணத்தில் புறப்பொருள் பொருள் பெறும் இடமறிந்து, அதனைச் செய்யுளில் கண்டறியும் திறன் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø  பொருள் இலக்கணம் பற்றி விளக்குதல்.

Ø  அகப்பொருள் இலக்கணத்தை நினைவூட்டல்.

Ø  ஒவ்வொரு திணையின் செயல்பாடுகலையும், காணொலி வழியே காட்டுதல்.

Ø  ஒவ்வொரு திணையின் செயல்பாடுகளை விளக்குதல்

Ø  எதிர் எதிர் திணைகளை விளக்குதல்

Ø  திணைக்குரிய பூக்களை காட்டி விளக்குதல்.

கருத்துரு வரைபடம்              :

புறப்பொருள் இலக்கணம்

விளக்கம்    :

            புறப்பொருள் இலக்கணம்

o   வெட்சி – ஆநிரை கவர்தல்

o   கரந்தை – ஆநிரை மீட்டல்

o   வஞ்சி – மண்ணாசை காரணமாக போரிடல்

o   காஞ்சி – எதிர்த்து போரிடல்

o   நொச்சி – மதில் காத்தல்

o   உழிஞை – மதிலை கைப்பற்றுதல்

o   தும்பை        - வலிமை நிலைநாட்ட போரிடல்

o   வாகை         - வெற்றிப் பெற்ற மன்னனைப் பாடுதல்

o   பாடாண் – பாடு + ஆண் + திணை = பாடுவதற்கு தகுதி உடைய ஆண்மகனின் ஒழுகலாறுகளைப் பாடுவது

o   பொதுவியல் – வெட்சி முதல் பாடாண் வரை உள்ளவற்றில் சொல்லப்படாதவை மற்றும் பொதுவான தகவல்கள்

o   கைக்கிளை -        ஒரு தலைக்காமம்

o   பெருந்திணை       -        பொருந்தா காமம்

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  திணைகளின் விளக்கம் தெளிதல்

Ø  எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்தி அறிதல்

Ø  திணைக்களுக்கு உரிய பூக்களையும் அதன் செயல்பாடுகளையும் அறிதல்.

மதிப்பீடு                      :

LOT :

Ø  புறத்திணைகள் மொத்தம் எத்தனை?

Ø  மதில் காத்தல் திணை எது?

                MOT :

Ø  புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளைப் பற்றிக் கூறுக.

Ø  திணைக்களுக்குரிய பூக்களைக் கூறுக.

                HOT :

Ø பாடாண் திணைப் பற்றிக் கூறுக

Ø  புறத்திணைகளில் நடைபெற்ற போரும் , இன்றைய நிலையில் நடைபெற்ற போரும் குறித்து கூறுக

கற்றல் விளைவுகள்                  :         புறப்பொருள் இலக்கணம்

T1039 புறப்பொருள் இலக்கணத்தைப் படித்தலின் வாயிலாகச் செய்யுளில்

 காட்சிப்படுத்தப்பட்டுள்ள பண்டைய போர் முறைகளைத் தெரிந்துகொள்ளுதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post