www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஆகஸ்ட்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 6
தலைப்பு : கம்பராமாயணம்
அறிமுகம் :
Ø
இயற்கை
அமைப்பு படங்கள் கொண்டு மாணவர்களுக்கு எழக் கூடிய கற்பனைத் திறனை கூற வைத்து ஆயப்படுத்துதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø
சந்த
நயமும்,தொடை நயமும் கொண்ட பாடல்களை மனனமாக பாடுதல், நா நெகிழ்,நா பிறழ் பயிற்சிகளில்
ஆற்றல் பெறுதல்.
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø செய்யுளினை சீர் பிரித்து
வாசித்தல்.
Ø செய்யுளினை இனிய இராகத்தில்
பாடுதல்.
Ø செய்யுளில் உள்ள கடினச்
சொற்களுக்கு பொருள் கூறல்
Ø செய்யுளுக்கான பொருள்
விளக்குதல், அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்புடன் இருக்கிறது என விளக்குதல்.
Ø செய்யுளில் காணப்படும்
நயங்களைவிளக்குதல்.
கருத்துரு வரைபடம் :
கம்பராமாயணம்
விளக்கம் :
கம்பராமாயணம்
Ø கம்ப ராமாயண குறிப்புகள்
மற்றும் கம்பர் பற்றிய பெருமைகள்
Ø பால காண்டம் – ஆற்றுப்படலம்
– சரயு ஆற்றின் தோற்றத்தை வருணித்தல
Ø பால காண்டம் – நாட்டுப்படலம்
– இயற்கைக் காட்சியினை கலை நிகழ்வாக காணுதல்
Ø நாட்டின் பெருமையினை
மெய்யியல் வாயிலாக அறிதல்.
Ø அயோத்தியா காண்டம் – கங்கை படலம் – இராமனின் அழகை வருணித்தல்
Ø கங்கை காண் படலம் – குகனின் இயலாமையை அழகிய சந்த நயத்துடன் பாடுதல்
Ø யுத்த காண்டம் – கும்ப
கருணன் வதை படுவது
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø சிறு
சிறு வாக்கியங்களை வாசித்தல்
Ø சீர்
பிரித்து வாசித்தல்
Ø செய்யுளினை சீர் பிரித்து படித்தல்
Ø பாடலினை இனிய இராகத்தில் பாடுதல்.
Ø பாடலினை மனனம் செய்யும் திறன் பெறுதல்
Ø பாடலில் உள்ள கடினச் சொற்களுக்கு அகராதியைக் கொண்டு பொருள் காணுதல்.
Ø பாடல் கருத்துகளை நடைமுறை வாழ்வியலுடன் தொடர்புபடுத்தும் திறன்
பெறுதல்.
மதிப்பீடு :
LOT :
Ø கம்பராமாயணத்தை
இயற்றியவர் யார்?
Ø கம்பராமாயணத்திற்கு
கம்பர் இட்ட பெயர்____________
MOT :
Ø நாட்டின்
பெருமையை கம்பர் எவ்வாறு விவரிக்கிறார்?
Ø இராமனின் அழகினை எவ்வாறு வருணிக்கிறார்?
HOT
:
Ø உங்கள்
ஊர் அழகினை எவ்வாறு நீங்கள் வருணிப்பீர்கள்?
Ø கம்பராமாயணத்தில்
வேடன் என அறியப்படுபவர் யார்? அவரைப் பற்றிக் கூறுக
கற்றல் விளைவுகள் : கம்பராமாயணம்
T1030 அழகியலும் கலைநயமும்
இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை அறிந்து செய்யுளைப் படித்தல், அதனுள் பொதிந்துள்ள
பொருள், சொல், ஓசை நயங்களை உணர்ந்து இலக்கியம் பயிலும் ஆர்வம் பெறுல். நா நெகிழ், நா
பிறழ் பயிற்சிகளில் ஆற்றல் பெறுதல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை