10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 3 - MALAIPADUKADAM

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூலை

வாரம்              :        இரண்டாம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 3

தலைப்பு          :      மலைபடுகடாம்


அறிமுகம்                   :

Ø  பத்தாம் வகுப்பு முடித்தவுடம் உயர்க் கல்வி தொடர யார் யாரிடம் உதவி கேட்பீர்கள்? ஏன்? இவைப் போன்ற அன்றாட வாழ்வில் நடைபெறும் சில நிகழ்வுகளைக் கூறி ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  ஆற்றுப்படுத்துதல் என்பது குறித்து இலக்கியங்கள் மூலமாக அறிதல்

Ø  ஆற்றுப்படுத்துதல், வழிகாட்டுதல் குறித்து அறிதல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø  ஆற்றுபடை இலக்கியங்கள் பெரும்பாலும் ஆற்றுப்படுத்தும் இலக்கியங்களாக உள்ளதை உணர்த்துதல்

Ø  செய்யுளினை சீர்ப் பிரித்து படித்தல்

Ø  கடினச் சொற்களுக்கான பொருள் அறிதல்

Ø  உயிரைக் காக்கும் உணவுவகைகளை கூறல்

கருத்துரு வரைபடம்              :

மலைபடுகடாம்

விளக்கம்    :

            மலைபடுகடாம்

·         கூத்தராற்று படை எனவும் வழங்கப் பெறும்.

·         இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசிகனார்  நன்னன் என்னும் மன்னனைப் பாடியது.

·         கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல்.

·         மலைபடுகடாம் பற்றி அறிதல்

·         ஆற்றுப்படுத்தும் முறைகளை செய்யுள் வழியாக அறிதல்

·         உயிரைக் காக்கும் உணவினைப் பற்றி அறிதல்

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø மலைபடுகடாம் பற்றி அறிதல்

Ø செய்யுளில் புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்

Ø அகராதியைப் பயன்படுத்தல்

Ø ஆற்றுப்படுத்துதல் பற்றி அறிதல்

Ø இலக்கியம் கூறும் வழிகளை நடைமுறை வாழ்வில் பின்பற்றுதல்

Ø ஆற்றுப்படுத்துதல் எவ்வாறு வழிகாட்டுதலாக மாறியுள்ளது என்பதை அறிதல்.

மதிப்பீடு                      :

LOT :

Ø  பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று__________

Ø  மலைபடுகடாம் நூலிற்கு வழங்கப்படும் வேறு பெயர் ________

                MOT :

Ø  ஆற்றுப்படுத்துதல் என்றால் என்ன?

Ø  செய்யுளில் காணப்படும் அளபெடை சொற்கள் யாவை?

                HOT :

Ø   இன்றைய சூழலில் ஆற்றுப்படுத்துதல் எவ்வாறு வழங்கப்படுகிறது?

Ø   நீங்கள் துன்பத்தில் உள்ள ஒருவரை எவ்வாறு ஆற்றுப்படுத்துவீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :         மலைபடுகடாம்

T1013  உணவு ஆக்கும் தன்மை,விருந்தோம்பும் முறை ஆகியவை மொழியில் நயம்படச் சொல்லப்படும் திறம் அறிந்து ஈர்ப்புடன் பேசவும் எழுதவும் பழகுதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post