7TH - TAMIL - TERM 1 - UNIT 1 - ILAKKIYA VAGAI SORGAL

 

இளந்தமிழ்

ஏழாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 1                                                                 இயல் : 1

அறிவியல் ஆக்கம்                                                                                           இலக்கிய வகைச் சொற்கள்

 

அ ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ________.

அ) இயற்சொல்   ஆ) திரிசொல்      இ) திசைச் சொல்             ஈ) வடசொல்

 

 2. பலபொருள் தரும் ஒருசொல் என்பது ___________.

 அ) இயற்சொல்   ஆ) திரிசொல்     இ) திசைச் சொல்           ஈ) வடசொல்

 

 3. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி ___________.

 அ) மலையாளம்                         ஆ) கன்னடம்     இ) சமஸ்கிருதம் ஈ) தெலுங்கு

 

பொருத்துக.

1. இயற்சொல் - பெற்றம்

2. திரிசொல் - இரத்தம்

3. திசைச் சொல் – அழுவம்

 4. வடசொல் - சோறு

 

விடை

1. இயற்சொல் - சோறு

2. திரிசொல் - அழுவம்

3. திசைச் சொல் – பெற்றம்  

 4. வடசொல் - இரத்தம்

 

குறுவினா

1. மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?

          மண் , பொன் – பெயர் இயற்சொல்

 

 2. இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?

·         பெயர் இயற்சொல்,

·         வினை இயற்சொல்,

·         இடை இயற்சொல்

·         உரி இயற்சொல்

 

3. குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?

கமலம், குங்குமம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர்.

 

சிறுவினா

 1. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

·         இலக்கியவகைச் சொற்கள் நான்கு வகைப்படும்

·         இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்

 

2. திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.

·         கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று 

வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.

·         திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.

·         திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும், பல பொருள் 

குறித்த ஒரு திரிசொல் எனவும் இருவகைப்படுத்தலாம்.

·         வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு 

பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர்

·         இதழ் என்னும் சொல் பூவின் இதழ் , உதடு, கண்ணிமை, பனையே டு, நாளிதழ் 

ஆகிய பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.

 

3. பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.

          பண்டிகை, கேணி ஆகிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை 

தமிழ்ச்சொற்கள் அன்று. வடமொழி தவிர பிறமொழிகளிலிருந்து வந்த சொற்கள் 

திசைச்சொற்கள் ஆகும்

மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு

வினா - விடைகளைக் காண

CLICK HERE 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post