7TH - TAMIL - TERM 1 - UNIT 1 - THAMIZHARIN KAPPAR KALAI

 

இளந்தமிழ்

ஏழாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 1                                                                 இயல் : 1

அறிவியல் ஆக்கம்                                                                                             தமிழரின் கப்பற்கலை 

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்க பயன்படுவது ___________

அ) கலம்             ஆ) வங்கம்         இ) நாவாய்         ஈ) ஓடம்

 

2. தொல்காப்பியம் கடற்பயணத்தை ____________ வழக்கம் என்று கூறுகிறது.

அ) நன்னீர்         ஆ) தண்ணீர்     இ) முந்நீர்         ஈ) கண்ணீர்

 

3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி __________.

அ) சுக்கான்        ஆ) நங்கூரம்      இ) கண்ணடை ஈ) சமுக்கு

 

ஆ) கோடிட்ட இடங்ளை நிரப்புக.

 1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள்  தொகுதி என அழைக்கப்படும்

 

2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது நங்கூரம்.

 

 3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் கண்ணடை எனக் குறிப்பிடப்படும்.

 

இ) பொருத்துக.

1. எரா - திசைகாட்டும் கருவி

 2. பருமல் - அடிமரம்

3. மீகாமன் - குறுக்கு மரம்

4. காந்தஊசி - கப்பலைச் செலுத்துபவர்

விடை

1. எரா - அடிமரம்

2. பருமல் - குறுக்கு மரம்

3. மீகாமன் - கப்பலைச் செலுத்துபவர்

4. காந்தஊசி - திசைகாட்டும் கருவி

 

தொடர்களில் அமைத்து எழுதுக.

1. நீரோட்டம் ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருக்கும்.

 

2. காற்றின் திசை – காற்றின் திசையைப் பயன்படுத்தி கப்பலைச் செலுத்துவர்

 

3. வானியல் அறிவு பழந்தமிழர் வானியல் அறிவு பெற்றவர்களாக இருந்தனர்.

 

4. ஏற்றுமதி – மிகுதியான பொருட்களை தமிழர்கள் ஏற்றுமதி செய்தனர்.

 

ஈ)  குறுவினா

1. தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.

          எடை குறைந்த மிகப்பெரிய மரங்களின் . உட்பகுதி  தோண்டப்பட்டவை என்பதால் தோணி 

எனப்பட்டன.

2. கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ) பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?

        கப்பலின் சேதமடையாமல் நீண்ட நாளுக்கு பாதுகாப்ப இருப்பதற்காக தேங்காய் நார் அல்லது பஞ்சு வைத்து பலகைகளை ஆணி வைத்து அறைந்தனர்

 3. கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

          ஏரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம்

 

உ) சிறுவினா

1. சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை 

எழுதுக.

சிறிய நீர்நிலைகளைக் கடக்க பயன்படுத்தியவை:

            தோணி, ஓடம், படகு, புணை, தெப்பம் மிதவை

கடல்களைக் கடக்கப் பயன்படுத்தியவை :

            கலம் , வங்கம் , நாவாய்

 

2. பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றி எழுதுக.

        கடலில் காற்று வீசும் திசை, கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் தம் பட்டறிவால் 

நன்கு அறிந்து அவற்றுக்கேற்ப உரிய காலத்தில் சரியான திசை யில் கப்பலைச் செலுத்தினர் .

 

3. கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை?

        ரங்களையும் பலகைகளையும் ஒன்றோடுஒனறு இ்ணக்கும் போது அவறறுக்கு இடையே தேங்காய் 

நார், பஞ்சு ஆகியவறறில் ஒன்ற வைத்து நன்றாக இறுக்கி ஆணிகள் அறைந்தனர். சுண்ணாம்பையும் 

சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிபகுதியில் பூசினர். இதனால் 

கப்பல்கள் பழுதாகமல்  நெடுங்காலம் உழைத்தன.

ஊ) சிந்தனை வினா

1. இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது 

ஏன் எனச் சிந்தித்து எழுதுக.

    1. கப்பலில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தால் நீண்டநாட்கள் பயணம் செய்யவேண்டும். அதனால்
    2.  கால விரையம் ஏற்படும்.
    3. அதிவிரைவுக்குக் கடற்பயணம் பயன்படுவதில்லை .
    4. கடல் உயிரினங்கள் மற்றும் புயல் போன்றவை அச்சத்தை ஏற்படுத்தும்.
    5. அதிகபொருட்செலவை ஏற்படுத்தும்.
இலக்கிய வகைச் சொற்கள்
வினா - விடைகளைக் காண

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post