7TH - TAMIL - TERM 1 - UNIT 1 - MOZHI THIRAN

 

 

அ) கட்டங்களை நிரப்புக:-

 

வேர்ச்சொல்

இறந்த காலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

நட

நடந்தான்

நடக்கிறான்

நடப்பான்

எழுது

எழுதினாள்

எழுதுகின்றாள்

எழுதினாள்

ஓடு

ஓடினர்

ஓடுகின்றனர்

ஓடுவர்

சிரி

சிரித்தான்

சிரிக்கின்றான்

சிரிப்பான்

பிடி

பிடித்தாள்

பிடிக்கின்றாள்

பிடிப்பாள்

இறங்கு

இறங்கினாள்

இறங்குகின்றாள்

இறங்குவாள்

 

ஆ). பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக.

 1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்

அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்.

2. கண்மணி நாளை பாடம் படித்தாள்.

          கண்மணி நாளை பாடம் படிப்பாள்.

3. மாடுகள் இப்பொழுது புல் மேயும்.

          மாடுகள் இப்பொழுது புல் மேய்கின்றன.

 4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.

          ஆசிரியர் நாளை சிறு தேர்வு நடத்துவார்

5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.

          நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.

 

இ) கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

பயணங்கள் பலவகை

 முன்னுரை – பயணத்தின் தேவை – தரைவழிப்பயணம் – கடல்வழிப் பயணம் – வான்வழிப் 

பயணம் – முடிவுரை.

 பயணங்கள் பலவகை

முன்னுரை

          பயணம் செய்வதில் தமிழர்களுக்கு எப்போதும் பெருவிருப்பம் உண்டு. பயணம் தரை 

வழிப் பயணம், நீர்வழிப் பயணம், வான்வழிப் பயணம் என மூன்று வகைப்படும். அவற்றைக் 

குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

 

பயணத்தின் தேவை

          இன்றைய உலகில் பலரும் பலவிதமான தேவைகளுக்காக பயணம்   செய்கின்றனர். 

தினசரி பள்ளி, தினந்தோறும் பயணங்கள்,சிலர் பொழுது போக்கு பயணங்கள், தவிர்க்க 

முடியாத பயணங்கள் என்பதெல்லாம் இயல்பான ஒன்றாக  உள்ளது.

 

தரைவழிப் பயணம் 

o    அனைத்து மக்களும் பின்பற்ற இவ்வழி பயணங்கள் எளிய வகை பயணமாக 

உள்ளது.

·         தரையில் மனிதர்கள் மேற்கொள்ளும் பயணம் தரை பயணம்  என்கிறோம். 

நடை, மிதிவண்டி, இரு சக்கர வாகனம், மகிழுந்து பேருந்த வண்டி போன்றவற்றில் 

மேற்கொள்ளும் பயணங்கள் தரை வழிப் பயணங்கள். 

 கடல்வழிப் பயணம் :

·         வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டு பயணத்திற்கு தவியாக 

            கடல் வழிப் பயணம் இருந்தது

·         இப்பயணம்  சாதாரண மக்கள் பின்பற்ற முடியாததாக உள்ளது.

 

வான்வழிப் பயணம் :

    • விமானம் மூலம் ஆகாயத்தில் பயணம் மேற்கொள்வது வான் வழி பயணம்
    •  ஆகும்.இதில் நாம் மிக குறைந்த நேரத்தில் வெகுதொலைவில் கடக்க முடியும்.
    •  இவ்வகை பயணத்தில் செலவு அதிகமாக இருக்கும்.

முடிவுரை :

பயணங்கள் மனித தேவைகளை நிறைவேற்ற மிகவும் உதவிப்புரிகிறது. பயணத்தில் உள்ள இடர்பாடுகள் மற்று சட்டத்திட்டங்கள் அறிந்து,பாதுகாப்பை உணர்ந்து பயணங்களை நாம் மேற்கொள்வோம்.

மொழியோடு விளையாடு

அ) குறுக்கெழுத்துப் புதிர்

பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிவோம்

இடமிருந்து வலம்

1. அச்சன்            -          தந்தை


2. விஞ்ஞானம்    -          அறிவியல்

4. பரிட்சை         -          தேர்வு

10. லட்சியம்        -          இலக்கு

மேலிருந்து கீழ்

1. அதிபர்             -          தலைவர்

3. ஆச்சரியம்       -          வியப்பு


7. ஆரம்பம்         -          தொடக்கம்

 12. சதம்             -          நூறு

 வலமிருந்து இடம்

6. அபாயம்          -          இடர்

8. தேகம்            -          உடல்

13. சரித்திரம்       -          வரலாறு

14. சத்தம்           -          ஒலி

கீழிருந்து மேல்

5. ஆதி              -          முதல்

 9. உத்தரவு       -          கட்டளை

11. தினம்            -          நாள்

15. சந்தோசம்      -          மகிழ்ச்சி

ஆ) குறிப்புகளைக் கொண்டு ‘மா’ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் 

கண்டறிந்து கட்டங்களை நிரப்புக.

 1. முக்கனிகளுள் ஒன்று                    -        மா

2. கதிரவன் மறையும் நேரம்                -        மாலை

3. பெருந்திரளான மக்கள் கூடும் நிகழ்வு   -        மாநாடு

 4. எழுத்துகளை ஒலிக்க ஆகும் காலஅளவு -        மாத்திரை

5. அளவில் பெரிய நகரம்                    -        மாநகரம்

 

ஈ) கலைச்சொல் அறிவோம்.

கலங்கரை விளக்கம்     - Light house

 துறைமுகம்               - Harbour

பெருங்கடல்               - Ocean

புயல்                       - Storm

கப்பல் தொழில்நுட்பம்    - Marine technology

 மாலுமி                    - Sailor

கடல்வாழ் உயிரினம்     - Marine creature

நங்கூரம்                  - Anchor

நீர்மூழ்கிக்கப்பல்          - Submarine

கப்பல்தளம்                – Shipyar

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

www.tamilvithai.com

www.kalvivithaigal.com


CLICK HERE TO GET PDF THIS FILE 

WAIT FOR 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

  

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post