9TH - TAMIL - UNIT -6 - SPECIAL GUIDE - PDF

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

 சிறப்பு வழிகாட்டி

WWW.TAMILVITHAI.COM

இயல் – 6                                                  கலை பல வளர்த்தல்              

ஒன்பதாம் வகுப்புதமிழ்

 அ) பலவுள் தெரிக.

 1. பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று ___________

அ) மாமல்லபுரம்      ஆ) பிள்ளையார்பட்டி        இ) திரிபுவனவீரேசுவரம்

ஈ) தாடிக்கொம்பு

2. ’பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்’ நிலப் பகுதி _______

அ) குறிஞ்சி         ஆ) நெய்தல்        இ) முல்லை            ஈ) பாலை

 3. மரவேர் என்பது ________ புணர்ச்சி

அ) இயல்பு         ஆ) திரிதல்         இ) தோன்றல்     ஈ) கெடுதல்

 4. ’அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ -யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?

அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

ஆ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

 இ) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்

 ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

 5) திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை _____

அ) விலங்கு உருவங்கள்              ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்

 இ) தெய்வஉருவங்கள்                ஈ)நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

ஆ) குறுவினா :-

1. செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக.

·         சோழர் கால செப்புத் திருமேனிகள் கலையழகும்,கடவுள் தன்மையும் பொருந்தியவை.

·         சோழர் காலம், செப்புத் திருமேனிகளின் பொற்காலம்.

2. நடுகல் என்றால் என்ன?

·         போரில் விழுப்புண் பட்டு இறந்தவருக்கு நடப்படும் கல், நடுகல்.

·         அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்படும்.

3. இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?

இசைத்தூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன.

 4. கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?

          மத்தளம் முழங்க,சங்குகள் ஊத,மதுசூதனன் எனப் பெயர் பெற்ற கண்ணன் புகுந்த பந்தலில் முத்துகள் உடைய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.

 5. இடிகுரல் , பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.

இடிகுரல் – உவமைத்தொகை

பெருங்கடல் – பண்புத் தொகை

6. பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?

            சிறுவர்கள்  பாலைக்காய்கள் வெடிக்குமாறு கோலினால் அடித்து விளையாடினர்.அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் பறந்தோடின.

இ) சிறுவினா:-

1. முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?

முழு உருவச் சிற்பங்கள் : சிற்ப உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும்.

புடைப்புச் சிற்பங்கள் : உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி  அமைக்கப்பட்ட சிற்பங்கள்

2. நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?

·         ஆயிரம் கால் மண்டபத் தூண்கள் சிற்பக் கலை நயம் மிக்கவை

·         ஆயிரம் கால் மண்டபத் தூண்களில் சிற்பங்களில் ஆடை,ஆபரணங்களும் கலைநயத்தைப் புலப்படுத்துகின்றன.

·         கோவை பேரூர் சிவன் கோவில் சிற்பங்கள், கலை நுட்பத்தின் உச்சநிலையாக விழியோட்டம்,புருவ நெளிவு, நக அமைப்பு ஆகியன படைக்கப்பட்டுள்ளன.

3. இராவண காவியத்தில் இடம்பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.

·         களம் குவித்துக் குன்று எனப் போதுவார்கள் :

o    முல்லை நில மக்கள் முதிரை,சாமை,கேழ்வரகு,குதிரை வாலி,நெல் ஆகியவற்றை அறுத்து கதிரடித்துக் களத்தில் குன்றுபோலக் குவித்து வைப்பர்.

·         மதியம் தன்னைக் கருமுகில் தொடர்ந்து செல்லும் காட்சியோள்

o    தும்பி கடல் அலையினைத் த்டவி, மணலிடை உலவி, காற்றில் சிற்கை உலர்த்தி பெண்களின் முகத்தை நோக்கி செல்வது, வானில் முழுநிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.

 4. ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.

·         விளக்குகளையும், கலசத்தையும் ஏந்தியவாறு கண்ணனை இளம் பெண்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள்.

·         கண்ணன் நடந்து வருகின்றான். இசைக்கருவிகள் முழங்குகின்றன.சங்குகளை ஊதுகின்றனர்.

·         கண்ணன் முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.

·         இக்காட்சிகளை ஆண்டாள் கண்டது.

5. குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.

·         தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகள்,அகில் கட்டை எரிவதால் எழும் மணம், உலையில் இட்ட மலை நெல்லரிசியின் சோற்று மணம், காந்தள் மலரின் மணம் போன்றவற்றால் எல்லாப் பொருள்களிலும் குறிஞ்சி மணம் கமழ்ந்தது.

6. கைபிடி, கைப்பிடி – சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.

          கைபிடி – கையைப் பிடி – இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி

            கைப்பிடி – கையால் பிடி – மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சி

ஈ) நெடுவினா

1. இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.

குறிஞ்சி :

·         அருவிகள் பறை போல் ஒலி எழுப்பும்.

·         பைங்கிளிகள் தமிழிசை பாடும்.

·         மயில்கள் தோகை விரித்தாடும்.

·         இதனை குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும்.

·         குறிஞ்சி நிலம் எங்கும் மணம் கமழ்ந்து இருக்கும்.

முல்லை :

·         நாகணவாய்ப் பறவைகளும், குயில்களும், வண்டுகளும் பாடும்.

·         ஆயர்கள் முக்குழல் இசையால் மேயும் பசுக்களை ஒன்று சேர்ப்பர்

·         முதிரை,சாமை,குதிரைவாலி,நெல் இவற்றை குன்று போல் குவித்து வைப்பர்.

பாலை :

·         செந்நாய் கடுமையான வெயிலில் நின்று தனது நிழலில் குட்டிகளை இளைப்பாறச் செய்யும்

·         சிறுவர்கள் பாலைக்காயை கோலினால் அடிக்கும் சப்தம் கேட்டு பருந்துகள் அச்சத்தோடு பறந்தோடும்

மருதம் :

·         காஞ்சி,வஞ்சி மலர்கள் பூத்து மணம் பரப்பும்.

·         வைக்கோற் போர் மீது ஏறி சிறுவர்கள் தென்னை இளநீரை பறிப்பர்.

நெய்தல்

·         பவளங்களையும், முத்துகளையும் மலைபோல் கடற்கரையில் குவித்து வைப்பர்.

·         காற்றில் சிறகினை உலர்த்திய தும்பி பெண்ணின் முகத்தை நோக்கிப் பறக்கும். இது முழுநிலவைக் கருமேகம் தொடர்ந்து செல்லும் காட்சி போல் உள்ளது.

2. தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.

சிற்பக்கலை

          கல், உலோகம், செங்கல்,மரம் முதலியவற்றைக் கொண்டு, கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலை சிற்பக் கலை.

பல்லவர் காலச் சிற்பங்கள் :

·         மாமல்லபுர கடற்கரையில் உள்ள பாறைச் சிற்பங்கள் சிற்பக் கலையின் பெருமையை உலகுக்கு உணர்த்துகின்றன.

பாண்டியர் காலச் சிற்பங்கள் :

·         பாண்டியர் காலக் குகைக் கோவில்களை திருமயம், திருப்பரங்குன்றம், பிள்ளையார் பட்டி போன்ற இடங்களில் காணலாம்.

சோழர் காலச் சிற்பங்கள் :

·         தஞ்சைப் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராதீசுவரர், திருவரங்கம்

விஜய நகர மன்னர்கள் காலச் சிற்பங்கள் :

·         கோவில் கோபுரங்களில் சுதையாலான சிற்பங்களைக் காணலாம்.

·         பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அமைத்துள்ளனர்.

நாயக்கர் காலச் சிற்பங்கள் :

·         மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேசுவரம் பெருங்கோவில்,திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆகியவற்றில் கலைநயம் மிக்க சிற்பங்களைக் காணலாம்

3. இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் ‘செய்தி’ கதை யின் மூலமாக விளக்குக

·         இசை மொழியினைக் கடந்தது.

·         ஆங்கில மொழி அறிந்தவர் போல்ஸ்கோ

·         வக்கீல் மணி வீட்டிற்கு நாதசுவர வித்துவான் மாட்டு வண்டியில் வந்து இறங்கினார்.

·         வக்கீல் மணி தன்னுடைய சங்கீத கோஷ்டி 25 பேரையும் அறிமுகம் செய்தார்.

·         நாதசுர வித்வான் ஆலாபனம் செய்து, கீர்த்தனையைத் தொடங்கினார்.

·         போல்ஸ்காவின் முகத்தில் புன் முறுவல். கண்களில் ஆனந்த கண்ணீர்.

·         நாதசுர வித்துவான் அடுத்து ‘ சாமா ராகம் ‘ பாடினார்.

·         போல்ஸ்காவின் உடல் ராகத்தோடு இசைந்து அசைந்து கொண்டிருந்தது.

·         அடுத்து சாந்தமுலேகா என்னும் கீர்த்தனையைத் தொடங்கினார்.

·         இந்த இராகத்தில் போல்ஸ்கா லயித்துப் போய்விட்டான்.

·         போல்ஸ்கா, நாதசுர வித்வான் கையைப் பிடித்துக் கொண்டு, ‘ கடவுள் நர்த்தனமாடுகிற விரலுக்கு முத்தமிடுகிறேன்’ என்றான்.

·         இக்கதையின் மூலம் இசைக்கு நாடு,மொழி,இனம் என்பது இல்லை என்பதை உணரலாம்.

CLICK HERE TO GET PDF

CLICK HERE


N



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post