ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி
சிறப்பு வழிகாட்டி
இயல் – 6 கலை பல வளர்த்தல்
ஒன்பதாம் வகுப்பு – தமிழ்
மொழியை
ஆள்வோம்
அ. மொழி பெயர்க்க
:-
1. Strengthen the body. : உடலினை
உறுதி செய்
2. Love your food : ஊண் மிக விரும்பு
3. Thinking is great : எண்ணுவது
உயர்வு
4. Walk like a bull. : ஏறு போல் நட
5. Union is strength : ஒற்றுமை
வலிமையாம்
6. Practice what you have learnt : கற்றது
ஒழுகு
இவை அனைத்தும் “பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி”
ஆ)
மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க. எட்டாக்கனி, உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை , ஆகாயத் தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன்.
(எ.கா
.) முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டா க்கனி இல்லை.
1. கபிலன் தான்
மேற்கொண்ட முயற்சியில் உடும்புப்பிடியாய் இருந்தான்.
2. கந்தன் உலக நடப்புகள்
தெரியாமல் கிணற்றுத்தவளையாக உள்ளான்
3. இல்லாத ஒன்றை
விரும்புவது ஆகாயத்தாமரையைப் பறிப்பது போன்றது.
4. எடுப்பார்
கைப்பிள்ளையாய் மாறன் யார் எதைச் சொன்னாலும் செய்கிறான்
5. திருமணம்
மேளதாளத்துடன் நடைபெற்றது.
இ)
பத்தியில் இடம்பெற்றுள்ள இயல்பு புணர்ச்சிகளையும் விகாரப் புணர்ச்சிகளையும் எடுத்தெழுதுக.
காஞ்சி
கைலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது.
அதேபோன்று காஞ்சி வைகுந்தப்பெ ருமாள் கோவிலிலும் பல்லவர்காலச் சிற்பங்கள்
மிகுதியாக உள்ளன. இங்குத் தெய்வச்சிற்பங்கள் மட்டுமல்லாது பிற சிற்பங்களும் கோவில்
உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர்காலக் குடைவரைக் கோவில்களின்
நுழைவுவாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பதுபோன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.
இயல்புப்
புணர்ச்சி சொற்கள்:
நுழைவு வாயிலின் – நுழைவு + வாயிலின்
நிற்பது போன்று – நிற்பது + போன்று
விகாரப்புணர்ச்சிச் சொற்கள்
1. தோன்றல் விகாரப் புணர்ச்சி
சுற்று + சுவர் → சுற்றுச்சுவர்
கலை + கூடம் → கலைக்கூடம்
தெய்வம் + சிற்பங்கள் → தெய்வச்சிற்பங்கள்
குடைவரை + கோயில் → குடைவரைக்கோயில்
2. கெடுதல் விகாரப் புணர்ச்சி
வைகுந்தம் + பெருமாள் → வைகுந்த பெருமாள்
3. திரிதல் விகாரப் புணர்ச்சி
பல்லவர் காலம் + குடைவரைக் கோவில் → பல்லவர் காலக் குடைவரைக் கோவில்
ஈ)
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
இல்லத்தின் அருகே
கூரை வேய்ந்தனர்
2. கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டாள் .
கயல் பானை வனையக்
கற்றுக் கொண்டாள்
3. நேற்று தென்றல் காற்று
அடித்தது.
நேற்று தென்றல்
காற்று வீசியது
4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்
தென்னை மட்டையிலிருந்து
நார் உரித்தனர்.
5. அணில் பழம் சாப்பிட்டது.
அணில் பழம் தின்றது
6. கொடியிலுள்ள மலரை எடுத்து வா .
கொடியிலுள்ள மலரை
கொய்து வா
(எ.கா.) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்
உ) கவிதை படைக்க.
மூடநம்பிக்கை, புவியைப் போற்று, அன்பின்வழி
(எ.கா. )
மூடநம்பிக்கை
பூனை குறுக்கே
போனதற்குக்
கவலைப்படுகிறாயே!
அந்தப்
பூனைக்கு என்ன ஆனதோ?
புவியைப் போற்று
ஓருயிர் முதல் ஆருயிரையும்
கண்ணிமை
போல் காக்கும்
புவியைப்
போற்று
அன்பின்வழி
கண்ணீர்த் துளிகள்
உணர்த்தும் பாதை
அன்பின் வழி
மொழியோடு
விளையாடு
அ)
விடையைத் தமிழ் எண்களில் எழுதுக.
1. ௧ ௮
2. ௧ ௩ ௩
3. ௯ ௬
4. ௮ ௨
5. ௬ ௩
6. ௧ ௨
ஆ) கண்டுபிடிக்க.
1. எண்ணும் எழுத்தும் கண் – இந்தத் தொடரை ஒருவர் 1 2 3 4 1 5 6 7 4 8
2 என்று குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றிக் கீழ்க்காணும்
சொற்களை எப்படிக் குறிப்பிடுவார்?
அ) எழுது - 1 5 7
ஆ)
கண்ணும் - 8 2 3 4
இ)
கழுத்து - 8
5 6 7
ஈ)
கத்து - 8
6 7
2. என் வகுப்பில் படிக்கும் அனைவரும் புதிய புத்தகம் வைத்திருந்தனர்.
இராமனும் புதிய புத்தகம் வைத்திருந்தான். எனவே, இராமன் என்
வகுப்பு மாணவன் - இக்கூற்று
அ)
உண்மை ஆ) பொய் இ) உறுதியாகக் கூறமுடியாது
விடை :
உறுதியாகக் கூற முடியாது
இ)
அகராதியில் காண்க.
ஏங்கல் - ஓசை
கிடுகு - கேடகம்
தாமம் - பூமாலை
பான்மை - குணம்
பொறி - புள்ளி
ஈ) உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.
1. மலர்விழி வீணை வாசித்தாள் ;
கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.
விழிமலர் வீணை
வாசித்தாள்; கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நீந்தினார்.
2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து
நீங்கினர்.
குழலியின் இசையைச்
சுவைத்தவர் கவலை கடல் நீங்கினார்.
3. தேன் போன்ற மொழியைப் பவளவாய் திறந்து படித்தாள் .
பவளவாய் திறந்து மொழித்தேனைப் படித்தாள்
4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.
முத்துநகை தன் புருவவில்லில் மை தீட்டினாள்.
உ)
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி
அர்த்தமுள்ளக் காட்சி
ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் காட்சி
சமூக விளைவைக் காட்டும் காட்சி
ஊ) நிற்க அதற்குத் தக
என்னை
மகிழச்செய்த பணிகள்
(எ.கா.) 1. இக்கட்டான நேரத்தில் தம்பிக்கு
உதவியதற்காக அப்பாவிடம் பாராட்டுப் பெற்றேன்.
2. எனது வகுப்றையில்
கரும்பலகையின்கீழ் சிதறிக்கிடந்த சுண்ணக்கட்டித் துண்டுகளைத் திரட்டி எடுத்துக்
குப்பைத் தொட்டியில் போட்டதற்கு ஆசிரியர் மற்றும் வகுப்புத் தோழர்களிடம் கைத்தட்டல்
பெற்றேன்.
3. முதியோரை சாலை கடக்க உதவி செய்து பாராட்டுப் பெற்றேன்.
4. சாலையில் கிடந்த
மதிப்புமிகு பொருளை தலைமையாசிரியரிடம் கொடுத்த போது பாராட்டுப் பெற்றேன்
எ) கலைச்சொல் அறிவோம்
குடைவரைக்
கோவில் – Cave
temple
கருவூலம்
– Treasury
மதிப்புறு
முனைவர் – Honorary
Doctorate
மெல்லிசை
- Melody
ஆவணக்
குறும்படம் – Document
short film
புணர்ச்சி
– Combination