*2ம் பருவ இடை தேர்வு 14ல் துவக்கம்*
சென்னை: பள்ளிக்கல்வி பாட திட்ட மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ இடை தேர்வு, 14ம் தேதி துவங்குகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வு முறை அமலில் உள்ளது. மற்ற மாணவர்களுக்கு, முப்பருவ தேர்வும், ஆண்டு இறுதி தேர்வும் நடத்தப்படுகிறது.
முதலாம் பருவ தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு ஏற்கனவே முடிந்த நிலையில், இரண்டாம் பருவ இடை தேர்வை, 14ம் தேதி முதல் நடத்த, பள்ளிக்கல்வி கமிஷனரகம் அனுமதி அளித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அலுவலகம் அறிவிக்கும் கால அட்டவணைப்படி, பருவ இடைத் தேர்வை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை மாவட்டத்தில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 14ம் தேதி முதல், 19ம் தேதி வரை தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
.