ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி
சிறப்பு வழிகாட்டி
இயல் – 6 திருக்குறள்
ஒன்பதாம் வகுப்பு – தமிழ்
அ)
பலவுள் தெரிக.
1. படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.
அ) இன்பத்துள்
இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
ஆ) ஏவவும் செய்கலான்
தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர்நோய்
இ) சுழன்றும் ஏர்ப்பின்னது
உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
விடை :
இ) சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
2. பொருளுக்கேற்ற
அடியை கண்டுப்பிடித்து பொருத்துக
பகைவரையும்
நட்பாக்கும் கருவி |
கண்டானாம்
தான்கண்ட வாறு |
தெரிந்த
அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான் |
அறம்நாணத்
தக்கது உடைத்து |
அறம்
வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும் |
மாற்றாரை
மாற்றும் படை |
பகைவரையும்
நட்பாக்கும் கருவி |
மாற்றாரை
மாற்றும் படை |
தெரிந்த
அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான் |
கண்டானாம்
தான்கண்ட வாறு |
அறம்
வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும் |
அறம்நாணத்
தக்கது உடைத்து |
3. ஐந்து சால்புகளில் இரண்டு
அ) வானமும்
நாணமும் ஆ)
நாணமும் இணக்கமும்
இ) இணக்கமும் சுணக்கமும் ஈ) இணக்கமும் பிணக்கமும்
4. கோடிட்ட இடங்களுக்கான விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்டமிடுக
அ.
அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள் – ஒப்புரவு
ஆ.
உலகத்துக்கு அச்சாணி போன்றவர் - உழவர்
இ. தான்
நாணான் ஆயின் …… நாணத் தக்கது. - அறம்
ஈ. ஆழி
என்பதன் பொருள் - கடல்
உ. மாற்றாரை
மாற்றும் - படை
ஊ. ஒழுக்கமான
குடியில் பிறந்தவர் …… செய்வதில்லை. - தவறு
5) அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
இக்குறளின்
கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பக்கக்கதை ஒன்றை எழுதுக
நான் வசிக்கும் ஊருக்கு அருகில் ஒரு சிறிய கிராமம்
(சிற்றூர்) உள்ளது. 100 குடும்பங்களே உடைய
அச்சிற்றூரில் உழவே பிரதானமான தொழில். அங்குள்ள மக்களுக்கு கல்வியறிவு கிடையாது.
அவ்வூருக்கு நன்கு படித்த பணி புரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் குடி வந்தார். அவர்
பெயர் கந்தசாமி.
அண்டை ஊரில் இருந்து ஒரு செல்வந்தன் இச்சிற்றூர் மக்களின்
விளைபொருட்களை அநியாயமாக அடித்துப் பிடித்து அரைகுறை விலையில் வாங்கிக்
கொண்டிருந்தான்.
கந்தசாமி அந்த
ஊருக்கு வந்தவுடன் இதனைத் தெரிந்து கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தினார். மக்கள் நியாயவிலையாய் இருந்தால் வாங்கிக்கொள் இல்லையென்றால்
சென்று விடு என்று மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். செல்வந்தன் காரணம் அறிந்து
கொண்டு சாமிநாதனைச் சந்தித்து வழக்கமாக நான் செய்வதைத் தடையின்றி செய்ய உதவினால், உமக்குச் சரிபாதி பணத்தையும், உனக்குத் தேவையான தானியவகைகள் அனைத்தையும் விலையில்லாமல் உமக்கும்
தருகிறேன் என்றார்.
ஆனால் கந்தசாமியோ ………. நீ கோடி கோடியாய்க் கொடுத்தாலும், நீதி தவறி நடக்க மாட்டேன், இந்த அப்பாவி மக்களின் வயிற்றில் உன்னை அடிக்கவிட மாட்டேன் என்று ஓடிப்போ
…….. என்று விரட்டி விட்டார்………. தன் நிலையில் இருந்து மாறவில்லை அவர்.
ஆம்.
“அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்” அன்றோ
ஆ) குறுவினா :-
1. இறக்கும் வரை
உள்ள நோய் எது?
சொன்னாலும் செய்யாமல், தானாகவும்
செய்யாமல் இருப்பவன் உயிர் சாகும் வரை உள்ள நோய்
2.அன்புநாண் ஒப்புரவு
கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்
இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்கி எழுதுக.
·
ஏகதேச
உருவக அணி
·
கவிஞர்
தாம் கூற கருதிய தொடர்புள்ள இரண்டு
பொருட்களில் ஒன்றை உருவகப்படுத்தியும் மற்றொன்றினை உருவகப்படுத்தாமலும் விட்டுவிடுவது
·
அனைவரிம் இணக்கத்தோடும் இரக்கத்தோடும் உண்மையோடு இருத்தல்
வேண்டும் என்று உருவகப்படுத்தி சான்றாண்மையை ஒரு சுமையாக உருவகப்படுத்தாமையால் இது ஏகதேச உருவக அணியாயிற்று.
3. உலகத்திற்கு
அச்சாணியாய் இருப்பவர் யார்?ஏன்?
·
உழவர்
·
மற்ற
தொழில் செய்பவரையும் தாங்கி நிற்பதால், அவரே உலகத்திற்கு அச்சாணி ஆவர்
4. காணாதான் காட்டுவான்
தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
இக்குறட்பாவில் பயின்று வரும் தொடை நயத்தை விளக்குக.
மோனை :
காணாதான் – காட்டுவான்
தான்காணான் – தான்கண்டவாறு.
எதுகை :
காணாதான் – காணாதான்
தான்காணான் – தான்கண்ட
சிறப்பு வழிகாட்டி
ஆக்கம் :
வெ.ராமகிருஷ்ணன்,
தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்
பள்ளி, கோரணம்பட்டி,
சேலம்.
8667426866,8695617154