மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி புத்தகம்
பத்தாம் வகுப்பு - தமிழ்
பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்
2019- 2020 -இரண்டு மதிப்பெண் வினாக்கள்
பிரிவு – 1 ( செய்யுள் ,உரைநடை குறு வினாக்கள் )
1. ‘ காய்மணி யாகு முன்னர் காய்ந்தெனக்
காய்ந்தேன் ‘ – உவமை உணர்த்தும் கருத்து யாது?
2.
தமிழ்ச்சொல் வளம் குறித்து கால்டுவெல் குறிப்பிடும் கருத்தை எழுதுக.
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் – ‘ இது போன்று
உலக காற்று நாள் ‘ விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
4.
மெய்கீர்த்திக் குறித்து தாங்கள் அறிந்த இரண்டு கருத்துகளை எழுதுக.
5.
கொடை என்பது ஓர் அறம் என்பதனை ஒளவையார் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
6.
எதற்காக எழுதுகிறேன்? என்று ஜெயகாந்தன் கூறிய
காரணம் ஒன்றைக் குறிப்பிடுக.
7.
மெய்கீர்த்தி பாடுவதன் நோக்கம் யாது?
8.
முல்லை நிலத்திலிருந்தும், மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?
9.
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும்,நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
10.
‘ கரம்பிடும்பை இல்லார் ‘ – இத்தொடரின் பொருளை வள்ளுவர் வழி நின்று கூறுக.
11.
வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
12. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,
உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
13.
குறிப்பு வரைக: “ அவையம் “
14.
‘ காலக் கழுதை கட்டெறும்பானதும் ‘ – கவிஞர் செய்தது யாது?
15.
உறங்குகின்ற கும்பகன்ன ‘ எழுந்திராய் எழுந்திராய் ‘ கால தூதர் கையிலே ‘ உறங்குவாய்
உறங்குவாய் ‘ – கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
16.
உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில்
எவைஎவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
18.
காற்றின் ஆற்றல்,வேகம் இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன?
19.
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை
முன் வைத்து இரண்டு குறிப்புகளை எழுதுக.
20.
பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்
போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.
21.
ஹிப்பாலஸ் பருவக் காற்று குறித்து எழுதுக.
22.
‘ சாந்தமான தொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் ‘ – இக்கவிதை அடிகள் உணர்த்தும்
உள்ளழகை எழுதுக.
23.
வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை
குறிப்பிடுக.
24. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய
இயந்திர மனிதன் பெப்பர் குறித்து எழுதுக.
விடைக்கேற்ற வினா அமைக்க.
1. தப்பாட்டம் நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப பல்வேறு
ஆட்டக் கூறுகளைக் கொண்டுள்ளது.
2. ஒயிலாட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம், தவில்,
சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன,
3. நாயக்கர் ,மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான
சத்திரங்கள் வழிச்செல்வோர்காகக் கட்டப்பட்டன.
4. அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்சங்கம் ‘ வாழை இலை
விருந்து விழாவை ‘ ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறது.
5. ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின்
அறிவொழுக்கங்கள் அமைந்திருக்கும்.
6. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்
தமிழ்த்திரு. இரா. இளங்குமரனார்.
7. செயற்கை நுண்ணறிவு கருவியான வாட்சன்,சில
நிமிடங்களில் நோயாளி ஒருவரின் புற்று நோயைக் கண்டுபிடித்தது
8. வேர்டுஸ்மித் என்ற எழுத்தாளி தகவல்களைக் கொண்டு சில
நொடிகளில் அழகான கட்டுரையை உருவாக்கி விடும்.
9. சாலைகளின் இடப்பக்கம் வண்டிகள் செல்வதே சாலை விதிகளில்
முதன்மையான விதி.
10. ஓட்டுநர் உரிமம, ஊர்தியின் பதிவுச் சான்றிதழ், ஊர்தியின் வழி மற்றும் காப்பீட்டுச் சான்றிதழ் போன்றவற்றை
ஊர்தி ஓட்டுபவர் ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கையில் வைத்திருக்க வேண்டும்.
11. மொழிபெயர்ப்பு,மொழியில் புதுக்
கூறுகளை உருவாக்கி மொழி வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.
12. தமிழ் நூல்கள்,ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி,கன்னடம்,வட
மொழி, ரஷ்ய மொழி,வங்க மொழி, மராத்தி மொழி, போன்ற பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
கட்டாய வினா ( திருக்குறள் )
1. ‘ செயற்கை ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
2. பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை
என்னும் உவமையைக் கொண்ட திருக்குறளை எழுதுக.
3. மலைமேல்
பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப் போரைக் காணும் உவமையைக் கொண்ட திருக்குறளை
எழுதுக.
4. “ விடல் “ – என முடியும் திருக்குறளை எழுதுக.
5. குற்றம் இல்லாமல் தன் குடிபெருமையை உயரச் செய்து
வாழ்பவரை உலகத்தார் உறவாகப் போற்றுவர் என்னும் பொருளைக் கொண்ட திருக்குறளை எழுதுக