மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி புத்தகம்
பத்தாம் வகுப்பு - தமிழ்
மெல்லக்
கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி புத்தகம்
பத்தாம்
வகுப்பு - தமிழ்
ஐந்து மதிப்பெண் வினாக்கள்
நிற்க அதற்கு தக( ஐந்து மதிப்பெண் )
புத்தக
வினாக்கள்
இயல் - 1
தீய சொல் வழி |
|
பிறர் மனம் மகிழும் அறம் வளரும் புகழ் பெருகும் நல்ல நண்பர்கள் சேருவர் அன்பு நிறையும் |
பிறர் மனம் வாடும் அறம் தேயும் இகழ் பெருகும் நல்ல நண்பர்கள் விலகுவர் பகைமை நிறையும் |
இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
இயல் – 2
வானொலி அறிவிப்பு....
ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
மேற்கண்ட அறிவ்ப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில்
செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக.
இயல் – 3
“ தம்பி.. உனக்குப் பிடிச்ச காய் சொல்லு ? “ - “
கேரட் “
“ பிடிச்ச பழம்?” - “ ஆப்பிள்”
பிடிச்ச காலை உணவு? - “ நூடுல்ஸ் “
“ மத்தியானத்துக்கு “ - “ ஃப்ரைடு ரைஸ் “
“ ராத்திரி….?” - “ பீட்ஸா அல்லது பாஸ்தா”
இது ஏதோ ஆங்கிலப்படத்தின்
வசனம் அல்ல. “ சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர் “ என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட
ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டு மொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு
வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும், சாம்பார் சாதமும்.கத்திரிக்காய் பொரியலும்
இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில்.’ ஆம்’ காணாமல் போய்விடும்! உங்கள் குழந்தைகள்”
ஆடு,மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி? என எதிர்காலத்தில்
கேட்கக்கூடும்.
மருத்துவர் கு.சிவராமனின்
கருத்திற்கு சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?
இயல் – 4
தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும்
தங்கை; காணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில்
மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும்
முயற்சிகளை பட்டியலிடுக.
இயல் – 5
பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.
இயல் – 6
அரசின் பொங்கல் விழாவில் சிற்றூர்க் கலைகளைக் காட்சியாக்கியிருக்கிறார்கள்.ஒரு
புறம் திரைகட்டித் தோற்பாவைக் கூத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இன்னொருபுறம் பொம்மலாட்டம்
ஆடிக் கொண்டிருந்தனர். சற்று நடந்தால் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம் ஆடியவாறு மண்ணின்
மக்கள்….இக்கலைகளை நீங்கள் நண்பர்களுடன் பார்த்தவாறும் சுவைத்தவாறும் செல்கிறீர்கள்.
இக்கலைகளைப் பாதுகாக்கவும்,வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்ய விருப்பனவற்றை வரிசைப்படுத்துக.
இயல் – 7
கல்வெட்டுகள் நம் வரலாற்றைப் புலப்படுத்துபவை. இவற்றைப் பராமரிக்கவும்,பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்களை பட்டியலிடுக.
இயல் – 8
மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும்
பட்டியலிடுக.
இயல் – 9
நீங்கள் செய்த,பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையைப் பட்டியலிடுக.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
( ஐந்து மதிப்பெண் )
புத்தக
வினாக்கள்
நயம் பாராட்டுக ( ஐந்து மதிப்பெண் )
புத்தக
வினாக்கள்
1 தேனினும்
இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு
விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும்
ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக்
குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய
வண்டமிழ் மொழியே
மாந்தருக்
கிருகணா வயங்குநன் மொழியே
தானனி சிறப்புறுந்
தனித்தமிழ் மொழியே
தழைத்தினி
தோங்குவாய் தண்டமிழ் மொழியே
கா.நமச்சிவாயர்
2 “ கத்துகடல்
சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்
போது அரிசிவரும் – குத்தி
உலையிலிட ஊரடங்கும்
ஓர்அகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி
எழும் “
காளமேகப்
புலவர்
3 நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக்
குழம்பைக் குடிதொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு
புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை
வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ? -
பாரதியார்
4 கோடையிலே
இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
வள்ளலார்
______________________________________________________________________________
மொழிபெயர்ப்பு ( ஐந்து மதிப்பெண் )
புத்தக
வினாக்கள்
இயல் - 1
2. Language is the road map of a culture. It tells you where its people
come from and where they are going – Rita Mae Brown
இயல் – 2
இயல் – 3
Respected ladies and gentleman. I am Ilangaovan
studying tenth standard. I have come here to say a few words about our Tamil
culture. Sangam literature shows that Tamils were best in culture and
civilization about two thousand years ago. Tamils who have defined grammer for
language have also defined grammer for life. Tamil culture is rooted in the life
styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, Engaland and
Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We
should feel proud about our culture. Thank you one and all.
இயல் – 4
Malar: Devi,switch off the
lights when you leave the room
Devi : Yeah! We have to save
electricity
Malar : Our nation spends a lot
of electricity for lighting up our streets in the night.
Devi: Who knows? In future our
country may launch artificial moons to light our night time sky!
Malar: I have read some other
countries are going to launch these types of illumination satellites near
future.
Devi: Superb news! If we
launch artificial moons,they can assist in disaster relief by beaming light on
areas that lost power!
இயல் – 5
யாழிசை |
It’s like new lute music |
அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன் பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே. பாரதிதாசன் |
Wondering at the lute music Coming from the chamber Entered I to look up to in still My grand – daughter Learning by rote the verses Of a didactic compilation Translated by Kavingar Desini |
இயல் – 6
இயல் – 7
இயல் – 8
இயல் – 9
1. Education is what remains after one has forgotten
what one has learned in school – Albert Einstein
2. Tomorrow is often the busiest day of the week –
Spanish proverb
3. It is during our darkest moment that we must focus
to see the light – Aristotle
4. Success is not final,failure is not fatal.It is the
courage to continue that counts – Winston Churchill