அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் கற்றல் பணியில் சுய மதிப்பீடு செய்து கொள்வதற்கான ஒவ்வொரு ஆண்டும் இந்த பணியினை அனைத்து ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். முன்பு எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் இருந்ததை இன்று பனிரெண்டாம் வகுப்பு வரை போதிக்கும் ஆசிரியர் வரை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நீங்கள் emis.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் சென்று சுயபரிசோதனை தரவுகளை நிறைவு செய்ய வேண்டும். இவற்றை எவ்வாறு செய்வது என்ற காணொலியினை இணைத்துள்ளோம். மேலும் ஒவ்வொரு படிநிலையினையும் எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதற்கான PDFம் இணைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த காணொலியினை கண்டு, அதன் பின் PDF இல் கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு உள்ளீடு செய்யும் படி அன்புடன் வேண்டுகிறோம். ஒவ்வொரு வினாவிற்கும் தெளிவான விளக்கத்தை ஆசிரியர் உங்களுக்கு வழங்க முற்படுகிறார். எனவே இந்த காணொலியினை கடைசி வரை முழுமையாகப் பார்க்கவும்
நன்றி, வணக்கம்
எவ்வாறு உள்ளீடு செய்ய வேண்டும் என்பதனை காண கீழ் உள்ள காணொலியினைக் காணவும்
மதிப்பீடுகளுக்கான தரவுகளை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய DOWNLOAD HERE என்பதனை சொடுக்கவும்