10TH - TAMIL - UNIT 1 - SLOW LEARNERS GUIDE - PDF

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். எதிர்வரும் கல்வியாண்டு 2022 -2023 இல் பத்தாம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற நோக்கில் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கென தயாரிக்கப்பட்ட சிறப்பு வழிக்காட்டியினை நமது வலைதளங்களான தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் உங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறது. இளந்தமிழ் பயிற்சிப்புத்தகம் நமது வலைதளம் மூலமாக அனைத்து மாணவர்களும் பயிற்சிப்பெறும் வண்ணம் பயிற்சிப்புத்தகம் வெளியிட உள்ளோம். அந்த பயிற்சிப் புத்தகத்தின் அடிப்படையில் இங்கு நாங்கள் இயல் வாரியான மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வழிக்காட்டி வெளியிட உள்ளோம். இதனை பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் தேர்வில் தேர்ச்சி பெற வைக்க நாம் அனைவரும் முயற்சி செய்வோம். இந்த மெல்ல கற்போர் சிறப்பு வழிக்காட்டியானது. அரசு விடைக்குறிப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இயல் 1 க்கான மெல்லக் கற்போர் சிறப்பு வழிகாட்டி உங்களுக்கு வழங்கியுள்ளோம். இனி வரும் வாரங்களில் ஒவ்வொரு இயல் வாரியாக சிறப்பு வழிக்காட்டி வெளியிடப்படும். அதேப் போன்று சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆசிரியர்களுக்கு பயன்படும் விதமாக வாரந்தோறும் மாதிரி தமிழ் பாடக்குறிப்பு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வெளியிடப்படும். இந்த வாரம் முழுவதும் நல்லொழுக்க கல்வி வழங்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆதலால் ஜூன் 13 முதல் ஜூன் 17 வரை பாடக்குறிப்பு எழுத வேண்டிய நிலை இல்லை. ஜூன் 19 முதல் நமது வலைதளத்தில் பாடக்குறிப்பேடுகள் பதிவேற்றம் செய்யப்படும் என்பதனை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த சிறப்பு வழிகாட்டியின் உள்ளடக்கம்
  1. பலவுள் தெரிக
  2. குறுவினா
  3. சிறு வினா
  4. நெடு வினா
  5. பொதுக்கட்டுரை
  6. நயம் பாராட்டுக
  7. மொழியை ஆள்வோம்
  8. மொழியோடு விளையாடு
  9. கலைச்சொல் தருக
  10. அகராதியில் காண்க
  11. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
  12. செயல் திட்ட வினா
  13. நிற்க அதற்குத் தக
            என்ற அடிப்படையில் வினாக்களுக்கு விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்கும் விடைக் குறிப்புகள் அடிப்படையில் இந்த சிறப்பு வழிகாட்டியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது வலைதளத்தில் இந்த சிறப்பு மெல்லக் கற்போர் வழிகாட்டியினை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் அனைத்து  இயல்களுக்குமான மெல்லக் கற்போர் வழிகாட்டி அவ்வப்போது நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். நமது வலைதளத்தினை பின் தொடர்ந்து இருங்கள். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படக்கூடிய அனைத்து வகுப்புக்குமான கற்றல் வளங்கள் நமது வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தற்போது பத்தாம் வகுப்பு தமிழ் இயல் -1 க்கான மெல்லக் கற்போர் சிறப்பு வழிக்காட்டியினை PDF ஆக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் இந்த இணைய இணைப்பினை அன்போடு பகிரவும். இந்த PDF ஐ பதிவிறக்கம் செய்து அதனை பகிர்வதை விட இந்த இணைய இணைப்பினை அப்ப்டியே பகிர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். பல மணி நேர உழைப்பினை இந்த இணைய இணைப்பின் மூலமே பெறுகிறோம். இரவு நெடு நேரம் கண்விழித்து இவற்றை செய்வதன் பயன் இந்த இணைப்பினை நீங்கள் பகிர்வதில் மட்டுமே அடைய முடியும். ஆகவே நீங்கள் இந்த PDF ஐ பகிர்வதனை தவிர்த்து இணைய இணைப்பினை பகிரும் படி மீண்டும் ஒரு முறை உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் எங்களின் குழுக்களில் சேர்ந்து அவ்வப்போது வெளியிடப்படும் கற்றல் வளங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களின் கற்றலுக்கு உறுதுணை புரியவும். உங்களின் பணியினை எளிமையாக்கவே இந்த வலைதளம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதனை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

மேலும் ஆசிரியர்கள் தங்களின் படைப்புகளையும், உங்களின் மாவட்ட வினாத்தாளையும் பகிர்ந்து உதவினால் அது அனைத்து மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆசிரியர்கள் எந்த பாடமானாலும் தங்களின் படைப்புகளை அனுப்பும் போது அவர்களின் படைப்பு அவர்களின் படைப்பாகவே பகிரப்படும். எவ்விதமான தமிழ்விதை அடையாளங்களும் உங்களின் படைப்புகளின் மீது இருக்காது. எனவே எந்த பாடமானாலும், எவ்வித கற்றல் வளமானாலும் பகிர்ந்து உதவுங்கள். அது ஏதேனும் ஒரு மாணவருக்காவது பயன்படுமானால் அது எனக்கும், உங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். எனவே உங்களின் படைப்புகளை அனுப்ப விரும்பினால் 8695617154 என்ற ( WHATSAPP ) புலன எண்ணிற்கு அனுப்பவும். அல்லது thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப்பவும். நன்றி வணக்கம்

எங்கள் குழுக்களில் இணைய :
  WHATSAPP :   GROUR NO : 46         : CLICK HERE
  TELEGRAM :                                       : CLICK HERE
 FACE BOOK PAGE                    : CLICK HERE
YOUTUBE                                             : CLICK HERE
( மனப்பாடப்பகுதிகளை இனிய இராகத்தில் கேட்க வலையொளிப் பக்கம் )
பத்தாம் வகுப்பு
இயல் - 1
அமுத ஊற்று
மெல்லக் கற்போர் சிறப்பு வழிகாட்டி - 2022- 2023

இயல் – 1                                                                                                              அமுத ஊற்று

பத்தாம் வகுப்பு – தமிழ்

சரியான விடையைத் தேர்ந்தெடு:-

1. ‘ மெத்த வணிகலன் ‘ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது _

அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும்                        

காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது___________________

இலையும்,சருகும்   தோகையும் சண்டும்         தாளும் ஓலையும்  சருகும் சண்டும்

3. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்____________

எந் + தமிழ் + நா     எந்த + தமிழ் + நா இஎம் + தமிழ் + நா

எந்தம் + தமிழ் + நா

4. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – தொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும்வினையாலணையும் பெயரும் முறையே________________

பாடிய;கேட்டவர் ஆபாடல்;பாடிய இகேட்டவர்;பாடிய       

பாடல்;கேட்டவர்

5.. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை________

குலைவகை ஆமணிவகை இகொழுந்துவகை ஈஇலை வகை

அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                 

1. வேங்கை -  என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

v  வேங்கை – மரம் – தனிமொழி

v  வேம் + கை = வேகின்ற கை – தொடர்மொழி

v  வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது.

2. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்ப்பியங்களின் பெயர்களை எழுதுக.

v  சீவக சிந்தாமணி       

v  குண்டலகேசி

v  வளையாபதி

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

v    ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.- சரி

v    ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.- தவறு

v    ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.- சரி

காரணம்:

v  தாறு என்பது வாழைக்குலை

v  சீப்பு என்பது வரிசையான பழங்கள்

4உடுப்பத்தூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

  வடுக்காண் வற்றாகும் கீழ் – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

v  உடுப்பத்தூஉம் உண்பதூஉம் – இன்னிசை அளபெடை.

v  செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை

5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

காலை நேரம் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகநாதன் . அவரை மாலையிட்டு வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!"என்றார் .எல்லோரும்   அந்தச் சொல்லின் சிலேடை நயத்தை மிகவும் சுவைத்தனர் .

சிறுவினா

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

v  அன்னை மொழியானவள்

v  அழகான செந்தமிழானவள்

v  பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி

v  பாண்டியன் மகள்

v  திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

v  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்கணக்குஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.

2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. – இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத்

 தொடரில் அமைக்க.

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø  புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø  தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

 3.‘அறிந்தது,அறியாதது,புரிந்தது,புரியாதது,தெரிந்தது,தெரியாதது,பிறந்தது,பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம்.அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லைஎல்லாம் எமக்குத் தெரியும்இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

 அறிதல்

அறியாமை

புரிதல்

புரியாமை

தெரிதல்

தெரியாமை

பிறத்தல்

பிறவாமை

4. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

தமிழ்

கடல்

1. முத்தமிழாக வளர்ந்தது

1. முத்தினைத் தருகிறது

2. முச்சங்களால் வளர்க்கப்பட்டு

2. மூன்று சங்குகளைத் தருகிறது

3. ஐம்பெருங்காப்பியங்கள்

3. பெரும் வணிகக் கப்பல்

4. சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

4. சங்கினைத் தடுத்து காக்கிறது

 செய்யுள் மற்றும் உரைநடை

நெடுவினாக்கள்

இயல் – 1

1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக..

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசி

நெற்றியில் மணம் வீசூம் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்கள்

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

Ø  வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும்எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை.

Ø  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

Ø  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

Ø  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

Ø  மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம்.

குறிப்பு : வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்

உறவினர் மகள்:        வணக்கம் சித்தப்பா

சித்தப்பா:                  வணக்கம் மகளே

உறவினர் மகள்:        தமிழில் உரைநடை என்றால் என்ன?

சித்தப்பா:                  நீயும் நானும் பேசுவதை எழுதினால் உரைநடை.

உறவினர் மகள்:        உரை நடை வளர்ச்சி பற்றி உங்கள் கருத்து யாது?

சித்தப்பா:                 உரைநடையில் எதுகைமோனை போன்ற அணிகளோ இல்லை. ஆனால் அடுக்கு மொழிகள் உண்டு.. உரைநடை இயல்பான ஒழுங்கில் அமையும்.

உறவினர் மகள்:        எனக்கு வருணனை உரைநடைப் பற்றி கூற முடியுமா?

சித்தப்பா:                 கூறுகிறேன். வருணனை உரைநடை என்பது புலனுணர்வு அனுபவங்களை வருணனையாக விவரிப்பது. மக்கள்உயிரினங்கள்பொருள்கள் ஆகியவற்றை வருணிப்பது.

உறவினர் மகள்:        உரைநடையில் ஓசை இன்பம் ஏற்படுமா?

சித்தப்பா:                 எதுகைமோனை சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தி உரையாசிரியர்கள் பலர் உரையெழுதி உள்ளனர். எடுத்துக்காட்டாக இரா.பி. சேதுபிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலைக் கூறலாம்.

உறவினர் மகள்:        மோனையும்இயைபும் வருவது போல் உரைநடை சொல்லுங்கள் சித்தப்பா!

சித்தப்பா:                 சொல்கிறேன். இரா.பி.சேதுபிள்ளையின் “உமறுப்புலவர்” என்னும் கட்டுரையில்பாண்டிய நாட்டில் ருவமழை பெய்யாது ஒழிந்ததுபஞ்சம் வந்ததுபசி நோயும் மிகுந்தது.

உறவினர் மகள்:        ஐயா கடைசியாகமுரண் நயம் பற்றி மட்டும் கூறுங்கள் சித்தப்பா!

சித்தப்பா:                 முரண் என்பது முரண்பட்ட இரண்டு சொற்கள் அருகே அருகே அடுக்கி வருதல்.. உதாரணமாக : இரவுப் பகல் பாராமல் உழைக்கிறார்

உறவினர் மகள்:        மிக்க நன்றி சித்தப்பா. தங்களிடமிருந்து உரைநடையின் சிறப்பினை நன்கு அறிந்த கொண்டேன்.

சித்தப்பா:                  நன்று. வா மகளே காலை உணவு உண்ணலாம்

மொழியை ஆள்வோம்

) :- மொழி பெயர்ப்பு:-

1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

விடை : ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது – நெல்சன் மண்டேலா

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

விடைமொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டிஅதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள்எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா மேக் ப்ரெளன்

 

சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-

தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்

ஓதி யுனர்ந்தின் புருவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

 

தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை

தேறும் சிலப்பதி காமதை ஊணிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்

ஓதி யுர்ந்தின் புறுவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

 

கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

குவியல்குலை,மந்தை,கட்டு )

சொல்

கூட்டப்பெயர்

சொல்

கூட்டப்பெயர்

கல்

கற்குவியல்

புல்

புற்கட்டு

பழம்

பழக்குலை

ஆடு

ஆட்டுமந்தை

 

வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக

1.கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.

விடைகலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

விடைஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

விடைநேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.

விடைபொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.

1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

விடை: பூமியில் வாழும் மானிடர்களில் சிலர் பழமிருக்கக் காய் உண்ணுதலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

விடை: வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த கவிஞனுக்குத் தனது தலையைக் தந்து மங்காப் புகழ் பெற்றான்.

3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

விடை: நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போலக் மகிழ்ச்சிக் கொண்டனர்.

4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

விடை: பூங்காவில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேன் உண்டன.

5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

விடை: ஆவைப்போல் அமைதியும் வேங்கைபோல் வீரமும் களிற்றைப் போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

) சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-

தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்குசெய்,மேகலை,வான்,பொன்,பூ

தேன்மழை

பூ விலங்கு

பொன்செய்

பொன்விலங்கு

மணிவிளக்கு

பூமழை

மணிமேகலை

வான்மழை

குறிப்புகளைக் கொண்டுவினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க:-

    குறளின்பம்சுவைக்காத இளநீர்காப்பியச் சுவைமனிதகுல மேன்மைவிடுமுறைநாள்

குறளின்பம்

குறளின்பத்தை அறியாதவர் உண்டோ?

சுவைக்காத இளநீர்

உழவன் சுவைக்காத இளநீர் உண்டா?

காப்பியச் சுவை

சிலப்பதிகார காப்பியச் சுவைக்கு ஈடு  உண்டா?

மனிதகுல மேன்மை

விருந்தோம்பல் மனித குல மேன்மையை உயர்த்தக் கூடிய பண்பு அல்லவா?

விடுமுறைநாள்

சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை நாள் அல்லவா?

எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

நான்கு

எறும்புந்தன் கையால் எண் சாண்

எட்டு

ஐந்து சால்பு ஊன்றிய தூண்

ஐந்து

ரு

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

நான்கு,இரண்டு

’ , 

ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணீ

ஆயிரம்

000

 

பொதுக்கட்டுரை

1. சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

        சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø  கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø  ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

Ø  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்

Ø  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இனிமையான மொழிபல இலக்கியஇலக்கணங்களை கொண்ட மொழி.

Ø  இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø  தமிழ் மூன்று சங்கங்களை கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

        சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்.

நயம் பாராட்டுக

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

          தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

          உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

          மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

          தழைத்தினி தோங்குவதாய் தண்டமிழ் மொழியே

                                                கா.நமச்சிவாயர்

தமிழ் தேனைவிட இனிமையானது. தென்னாடு பெஉமை கொள்கிறது.உடலில் ஒளிவிடும் உயர் மொழி. உணர்வுக்கு உணர்வாய் விளங்குவது.வானத்தை விட உயர்ந்த வண்டமிழ் மொழியே. கண்களாக விளங்கும் மொழி.தானாகவே சிறப்புற்று வியளங்குவது. இனியும் தழைத்தோங்குவது.

மையக்கருத்து :

தமிழ்மொழியின் சிறப்புகளை மிகவும்  உயர்வாக கூறியுள்ளார். இரு கண்களாக விளங்குகிறது என உயர்வுப்படக் கூறியுள்ளார்.

மோனை நயம் :

தேனினும் – தென்னாடு        னினும் – ணர்வினும் ( சீர் மோனை )

எதுகை நயம் :

தேனினும் – ஊனினும்         வானினும் – தானி ( அடி எதுகை )

இயைபு நயம் :

மொழியே - மொழியே

அணி நயம் :

தமிழை மிக உயர்வாக கூறியுள்ளதால் உயர்வு நவிற்சி அணி வந்துள்ளது.

கலைச்சொல் அறிக:

Vowel – உயிரெழுத்து

Consonant – மெய்யெழுத்து

Homograph – ஒப்பெழுத்து

Monolingual – ஒரு மொழி

Conversation – உரையாடல்

Discussion – கலந்துரையாடல்

அகராதியில் காண்க:-

அடவி  காடு

அவல்  – பள்ளம்

சுவல்   – மேடு

செறு    – வயல்

பழனம் – வயல்

புறவு    காடு

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

( பொதுவாக எந்தப் படங்கள் கொடுத்தாலும் இதனையே எழுதிக் கொள்ளலாம் )

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத       

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி  

அர்த்தமுள்ள இந்தக் காட்சி

சமூகத்திற்கு தேவையான காட்சி

சமூக விளைவை ஏற்படுத்துக் காட்சி

எல்லோருக்கும் அறிவுறுத்தும் காட்சி

செயல் திட்ட வினா:

நீங்கள் வாழும் பகுதியிலுள்ள எவையேனும் ஐந்து பயிர்வகைச் சொற்களை தொடரில் அமைத்து எழுதுக.

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø  புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø  தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

நிற்க அதற்குத் தக….

இன்சொல் வழி

தீய சொல் வழி

பிறர் மனம் மகிழும்

அறம் வளரும்

புகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் சேருவர்

அன்பு நிறையும்

பிறர் மனம் வாடும்

அறம் தேயும்

இகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் விலகுவர்

பகைமை நிறையும்

இதில் நீங்கள் செல்லும் வழி யாதுஉங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

1. நான் செல்லும் வழி இன்சொல் வழி.

2. என் நண்பர்களை  இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன்.

3. தீய செயலில் ஈடுபட விடமாட்டேன்

4. பிறர் மனம் மகிழும்படி நடப்பேன்

5. பிறருக்கு நன்மை செய்வேன்

CLICK HERE TO DOWNLOAD PDF
30 நொடிகள் காத்திருக்கவும்
நீங்கள் 30 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post