நாள் : 04- 04-2022 முதல் 09 - 04 - 2022
மாதம் : ஏப்ரல்
வாரம் : ஏப்ரல் - முதல் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. திருக்குறள்
2. கொங்குநாட்டு வணிகம்
கருபொருள் :
Ø நீதிநூல்களின்
வழியே வாழ்வியல் திறன்களை அறிதல்
Ø தமிழரின்
வணிகம் தொடர்பான செய்திகளை அறிந்து போற்றுதல்
Ø தொழில்களின்
வகைகளை உணர்தல்
உட்பொருள் :
Ø தெரிந்து
வினையாடல்,செங்கோன்மை,வெருவந்த செய்யாமை,சொல்வன்மை,அவைஅறிதல்
Ø பழந்தமிழர்
ஆண்ட கொங்கு நாட்டின் அன்றைய வணிகம் மற்றும் இன்றைய வணிகத்தை காணுதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகள்
கற்றல் விளைவுகள் :
Ø நீதிநூல்களின்
வழியே வாழ்வியல் திறன்களை அறிதல்
Ø தமிழரின்
வணிகம் தொடர்பான செய்திகளை அறிந்து போற்றுதல்
Ø தொழில்களின்
வகைகளை உணர்தல்.
ஆர்வமூட்டல் :
Ø திருக்குறள்
கதை ஒன்றினைக் கூறி ஆர்வமூட்டல்
Ø உனது
வீட்டின் அருகே நடைபெறும் தொழிகள் என்னென்ன? உமது ஊரில் முக்கியமானத் தொழில் எது? போன்ற
வினாக்கள் கேட்டு ஆரவமூட்டல்
படித்தல் :
Ø ஆசிரியர் படித்தல், பின்
தொடர்ந்து மாணவர்களும் படித்தல்.
Ø முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்
Ø மனப்பாடக் குறளை இசை
இராகத்துடன் பாடுதல்
Ø புதிய வார்த்தைக்கான
பொருள் அறிதல்
Ø நிறுத்தற்குறி அறிந்து
படித்தல்
நினைவு வரைபடம் :
திருக்குறள்
கொங்கு
நாட்டு வணிகம்
தொகுத்து வழங்குதல் :
திருக்குறள்
தெரிந்து
வினையாடல்
·
செயல்திறன்
உடையவரையும்,செய்வதற்குரிய காலமும் அறிந்து செயலாற்ற வேண்டும்
·
செயலை
செய்யக் கூடிய நபரைக் கண்டறிந்து அவரிடம் அச்செயலை விடல்
செங்கோன்மை
·
நடுவுநிலைமை
தவறாது நடத்துதே சிறப்பான ஆட்சி
·
அரசர்
எல்லா உயிரிங்னகளையும் காப்பாற்றும் போது,அவருடைய குற்றமற்ற ஆட்சி அவரை காப்பாற்றும்
வெருவந்த
செய்யாமை
·
குற்றத்தை
முறையாக ஆராய்ந்து அக்குற்றம் மீண்டும் நிகழாவண்ணம் தண்டனை வழங்க வேண்டும்.
·
மக்களால்
தூற்றப்படும் அரசர் விரைவில் அழிவார்.
சொல்வன்மை
§ அனைவரையும் தன்வயப்படுத்துவது
சொல்லாற்றலின் சிறப்பு.
§ சிறந்த சொற்களை நாம்
தேர்ந்தெடுத்து பேச வேண்டும்.
அவையறிதல்
·
அவையின்
தன்மை அறிந்து பேச வேண்டும்.
·
அறிஞர்
முன்னிலையில் பேசுவது நாம் பல நூல்கள் மூலம் கற்ற கல்வி பெருமை அடையும்.
கொங்கு நாட்டு வணிகம்
Ø சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது. இவர்களின்
தலைந கராக வஞ்சி விளங்கியது.
Ø சேரர்களின் கொடி
விற்கொடி ஆகும்
Ø பனம்பூ
இவர்களுக்குரிய பூ ஆகும்
Ø சேலம், கோவைப் பகுதிகள்
கொங்கு நாடு என்று பெயர்பெற்றன
Ø இன்றைய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோ டு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய
மாவட்டங்களை யும் சேலம்,
கரூர்
மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதா கக் கொங்குமண்டலம் விளங்கியது என்பர்.
Ø உழவு, கைத்தொழில், வணிகம் என்னும்
மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும் என்பர்
Ø உப்பும் நெல்லும்
ஒரே மதிப்புடையனவாக இருந்தன
Ø நீலகிரி மாவட்டம்
தேயிலைத் தொழிற்சாலைகள் நிறைந்துத
Ø தமிழ்நாட்டின்
ஹாலந்து என்றும் சிறப்பிக்கப்படுவது
திண்டுக்கல்
Ø தமிழகத்திலேயே மஞ்சள்
சந்தை ஈரோட்டில் தான் நடைபெறுகின்றது
Ø கிரேக்க அறிஞர் தாலமி
கரூரை சிறந்த உள்நாட்டு வணிகமாக குறிப்பிட்டு உள்ளார்
வலுவூட்டல் :
Ø காணொளி காட்சிகள் மூலம்
பாடப்பொருளை வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?
Ø சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது
Ø தமிழகத்தின் ஹாலந்து
எந்த மாவட்டம்?
Ø முத்து நகரம் என சிறப்பிக்கப்படும்
நகரம் எது?
Ø மாங்கனிக்கு புகழ் பெற்ற
ஊர் எது?
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்
பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை
மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø
பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ணச் சொற்களைப் படித்தல்
Ø ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்
தொடர் பணி :
Ø உன் மனம் கவர்ந்த திருக்குறள்
ஏதேனும் பத்து குறள் எழுதி வருக.
Ø பல்வகைத் தொழில்கள் என்னும்
தலைப்பில் படத்தொகுப்பு உருவாக்குக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை