நாள் : 04-04-2022 முதல் 09-04-2022
மாதம் : ஏப்ரல்
வாரம் : ஏப்ரல் - முதல் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. மனித நேயம்
கருபொருள் :
Ø உதவி செய்யும் பண்பைப் பெறுதல்.
Ø நம்மால் முடிந்த உதவியினை
செய்ய முற்படுதல்
உட்பொருள் :
Ø வள்ளலார், அன்னை தெரசா,
கைலாஷ் சத்யார்த்தி போன்றோரின் உதவி செய்யும் குணம் அறிந்து போற்றுதல்
Ø அவர்களை போலவே நாமும்
பிறருக்கு பயன்படும் படி வாழ்தல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காணொலிகள்,
கற்றல் விளைவுகள் :
Ø உதவி செய்யும் பண்பைப்
பெறுதல்.
Ø
நம்மால்
முடிந்த உதவியினை செய்ய முற்படுதல்
ஆர்வமூட்டல் :
Ø வள்ளலார்
வாழ்வில் நடந்த அற்புதங்களையும், அவரின் உதவி குணத்தையும் மாணவர்களுக்கு கூறி ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø பாடப்பகுதியினைப் பத்தியாகப்
பிரித்து ஆசிரியர் வாசித்தல்
Ø ஆசிரியரைத் தொடர்ந்து
மாணவர்களும் பின் தொடர்ந்து வாசித்தல்
Ø நிறுத்தற் குறி அறிந்து
வாசித்தல்
Ø பொருளை உணர்ந்து படித்தல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைக்கான
பொருளை அகராதியில் கண்டு பொருள் எழுதுதல்
நினைவு வரைபடம் :
மனிதநேயம்
தொகுத்து வழங்குதல் :
மனித
நேயம்
Ø எல்லா உயிர்களிடமும்
அன்பு செலுத்துதல் வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும்.
Ø வள்ளலார் மக்களின் பசிப்பிணியைக் கண்டு உள்ளம் வாடினார்.
Ø வடலூரில் சத்திய
தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்.
Ø மக்களுக்குச் செய்யும் பணியே இறைவனுக்குச்
செய்யும் பணி என்று வாழ்ந்தார்
அன்னை தெரசா
Ø அமைதிக்கான நோபல்
பரிசு அவரைத் தேடி வந்தது
Ø பள்ளி செல்லாத
குழந்தைகள் மேல் பரிவு கொள்ள வைத்தது. அதற்காக அவர் குழந்தைகளைப் பாதுகாப்போம்
என்னும் இயக்கத்தைத் தொடங்கினார்
கைலாஷ் சத்யார்த்தி
Ø குழந்தைகளின் கல்வி
மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை ஆற்றி வருகிறார்.
வலுவூட்டல் :
Ø வரைபடத்தாள் மற்றும்
கற்பித்தல் கருவிகள் மூலம் பாடத்தினை கற்பித்து வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø எல்லா
உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ---------
Ø தம் பொருளைக்
கவர்ந்தவரிடமும் ---------- காட்டியவர் வள்ளலார்.
அ)
கோபம் ஆ) வெறுப்பு இ) கவலை ஈ) அன்பு
Ø கைலாஷ் சத்யார்த்தி
தொடங்கிய இயக்கம் ---------
Ø யாரால் உலகம்
இயங்கிக் கொண்டு இருக்கிறது?
Ø அன்னை தெரசா கண்ணீர்
விடக் காரணம் யாது
குறைதீர் கற்றல் :
Ø
பாடநூலில்
உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை
மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு :
Ø
வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
Ø
பாடலைச் சீர்ப் பிரித்துப் படித்தல்
தொடர் பணி :
Ø மனித நேயம் குறித்து
செய்தித்தாளில் வந்த செய்திகளை திரட்டி தொகுப்பு உருவாக்குக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை