மாதம்
: ஏப்ரல் வாரம்
: முதல் வாரம்
வகுப்பு
: 10 இயல்
: 07
பாடம்
: தமிழ் மொத்த
மதிப்பெண் : 40
I.
பலவுள் தெரிக:- 4 × 1= 4
1.
‘ மாலவன் குன்றம் போனாலென்ன?
வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்
‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும்
குறிப்பவை முறையே –
அ)
திருப்பதியும்,திருத்தணியும் ஆ)
திருத்தணியும்,திருப்பதியும்
இ)
திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ)
திருப்பரங்குன்றமும் பழனியும்
2.
‘ தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும்
தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும்
மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-
அ)
மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர் ஆ)
மிகுந்த செல்வம் உடையவர்
இ)
பண்பட்ட மனித நேயம் ஈ)
நெறியோடு நின்று காவல் காப்பவர்
3.
இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச்
சூடிப் போரிடுவதன் காரணம்__________________
அ)
நாட்டைக் கைப்பற்றல் ஆ)
ஆநிரை கவர்தல்
இ)
வலிமையை நிலைநாட்டல் ஈ)
கோட்டையை முற்றுகையிடல்
4.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக
ம.பொ.சி.
கருதியது_____________
அ)
திருக்குறள் ஆ)
புறநானூறு இ)
கம்பராமாயணம் ஈ)
சிலப்பதிகாரம்
II.
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 4×
2= 8
1.
பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள்
யாவர்?
2. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
3.
வறுமையிலும் படிப்பின் மீது
நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
4.
புறத்திணைகளில் எதிரெதிர்த்
திணைகளை அட்டவணைப்படுத்துக.
III
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 3×
4= 12
1.
அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர்
புரிந்து அந்நாட்டை கைப்பற்ற
நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள்
வெண்பாமாலை கூறும்
இலக்கணத்தின் வழி விளக்குக.
2.
“ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்”
– இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
3.
பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும்
மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு
நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும்
துகிரும் ஆரமும் அகிலும்
அ)
இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
ஆ)
பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
இ)
எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
ஈ)
காருகர்
– பொருள் தருக.
உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
IV.
மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:- 1×
4= 4
1.தூசும்
துகிரும்- எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
V.
கடிதம் எழுர்துக 1×
6= 6
நாளிதழ்
ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற
உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.
5.
நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கையாக எழுதுக 1×
6= 6
இடம் –
பள்ளிக்
கலையரங்கம் நாள்
-08.03.2019
கலையரங்கத்தில்
ஆசிரியர்கள்,மாணவர்கள்
கூடுதல்
– தலைமையாசிரியரின்
வரவேற்பு
– இதழாளர்
கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின்
வாழ்த்துரை
– மாணவத்
தலைவரின் நன்றியுரை.