அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்கள் மற்றும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பார்ந்த வணக்கம். நாம் அனைவரும் பொதுத் தேர்வு நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறோம். நடந்து முடிந்த இரண்டு திருப்புதல் தேர்வு நமக்கு ஓரளவு வினாக்கள் எப்படி அமையும் என ஒரு தெளிவு கிடைத்திருக்கும்.இதிலும் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கடினமாகவே அமைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தது. அந்த வினாத்தாளினை நன்கு ஒருமுறைக்கு இரு முறை படித்துப் பார்த்து இருந்தால் விடைகள் நாம் சொந்தமாகவே விடைகளை எழுதி இருக்கலாம். அந்த வினாக்களின் புரிதல் நன்கு அறிந்திருந்தால் வினாத்தாள் எளிமையானது தான். நாம் அனைவரும் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் போல அமையும் என எதிர்ப்பார்ப்பின் விளைவே இது. சரி நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். இந்த இரண்டு வினாத்தாள் அடிப்படையில் வினாத்தாள் அமையுமா? என்றால் அது தான் இல்லை. வினாத்தாள் அரசு ஏற்கனவே அறிவித்த முதன்மைப் படுத்தப் பட்ட பாடங்களிலிருந்து வினாக்கள் அமையும் என இரு தினங்களுக்கு முன் பள்ளிக் கல்வித் துறையால் அறிவுறுத்தப்பட்டது. அந்த அடிப்படையில் மூன்றாம் திருப்புதல் தேர்வு அந்ததந்த பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ள வேண்டும் எனவும், வினாத்தாள் சம்பந்தப் பட்ட பாட ஆசிரியர்களே தயாரித்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையால் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, பள்ளிகளுக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திருப்புதல் தேர்விலும் இல்லாதப் பாடப்பகுதிகளான மீதம் உள்ள பாடப்பகுதிகளிலிருந்து வினாத்தாள் வடிவமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் திருப்புதல் தேர்வில் இயல் 1 முதல் இயல் 3 வரை உள்ள பாடப்பகுதிகளும், இரண்டாம் திருப்புதல் தேர்வில் இயல் 4 முதல் இயல் 6 வரை உள்ளப் பாடப்பகுதிகளும், மூன்றாம் திருப்புதல் தேர்வில் இயல் 7 முதல் இயல் 9 வரை உள்ள பாடப்பகுதியிலிருந்து வினாக்கள் அமைய வேண்டும்.
எனவே ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் நமது தமிழ் விதை வலைதளம் மூலம் இயல் 7 முதல் இயல் 9 வரை உள்ள பாடப்பகுதிக்கு உட்பட்டு, அரசு 2019- 2020 அன்றைய கல்வி ஆண்டில் வழங்கிய ஆறு மாதிரி வினாத்தாளிலிருந்து முதன்மைப்படுத்தப் பட்ட பாடப்பகுதிக்கான வினாக்கள் எடுக்கப்பட்டு இங்கு உங்களுக்கு மாதிரி மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். மேலும் ஆசிரியர்கள் நமது வலைதளத்தில் முதன்மைப்படுத்தப்பட்ட பாடப்பகுதிக்கான அரசு பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் இரண்டு வினாத்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.