10TH - TAMIL - PUBLIC MODEL QUESTION -2

 

 

மாதிரி வினாத்தாள் 2021-2022

பத்தாம் வகுப்பு

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                      மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.

                    அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

          ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)             அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

15×1=15

1.எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக் குறிக்கும் சரியான சொல்_____

அ) எள்கசடு     ஆ) பிண்ணாக்கு                   இ) ஆமணக்கு            ஈ) எள்கட்டி

2. கொடுக்கப்பட்ட அனைத்துச் சொற்களும் அமைந்த பொருத்தமான தொடரைத் தேர்க.

மலை,மழை,மேகம்,ஆறு,ஏரி,குளம்

அ) மலைமீது மழை பெய்து ஆற்றுவெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்து ஓடியது.

ஆ) கருத்த மேகம் மலை மீது மழையைப் பொழிய ஆறு,ஏரி,குளம்,அனைத்தும் நீரால் நிரம்பின.

இ) திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு,ஏரி,குளங்களில் நிறைந்தன.

ஈ) மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள் நிறைந்து பின் கடலில் சென்று கலந்தது.

3.’ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

அ) திருத்தணியும்,திருப்பதியும்   ஆ) திருப்பரங்குன்றமும் பழனியும்

இ) திருப்பதியும் திருத்தணியும்  ஈ) திருப்பதியும் திருச்செந்தூரும்

4. கருணையன் என்பவர் _____________

அ) வீரமாமுனிவர்        ஆ) யோசேப்பு            இ) அருளப்பன்            ஈ) சாந்தா சாகிப்

5. ‘ எய்துவர் எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்                    ஆ) கூவிளம் புளிமா நாள்                  இ) தேமா புளிமா காசு    

ஈ) புளிமா தேமா பிறப்பு

6. எழுகதிர்,முத்துப்பல் – இச்சொற்களில் மறைந்துள்ள தொகைகள் முறையே___________

அ) வினைத்தொகை,பண்புத்தொகை    ஆ) உவமைத்தொகை,வினைத்தொகை

இ) உவமைத்தொகை,பண்புத்தொகை  ஈ) வினைத்தொகை,உவமைத்தொகை

7. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

அ) அகவற்பா    ஆ) வெண்பா   இ) வஞ்சிப்பா   ஈ) கலிப்பா

8. கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின் இக்க்கூற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்வது_____________

அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

9.திருவள்ளுவர் அறிவுடையார் எல்லாம் உடையார் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.இத்தொடருக்குப் பொருத்தமான நிறுத்தற்குறியிட்டத் தொடரைத் தேர்க.

அ) திருவள்ளுவர்,’ அறிவுடையார் எல்லாம் உடையார்’என்று’அறுதியிட்டுக்’ கூறுகிறார்.

ஆ) திருவள்ளுவர்,’அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

இ) திருவள்ளுவர்,” அறிவுடையார்,எல்லாம் உடையார்” என்று,அறுதியிட்டுக் கூறுகிறார்.

ஈ) ‘திருவள்ளுவர்’,’அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

10. பாரதியார் காற்றை’ மயலுறுத்து ‘ அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்____________

அ) மணம் வீசும் காற்றாய் நீ வா          ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு நீ வா

இ) மயிலாடும் காற்றாய் நீ வா   ஈ) மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா

11.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் __________

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்          ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்       ஈ) அங்கு வறுமை இல்லாததால்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

          அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

          மருளை அகற்றி மதிக்கும் தெருளை

          அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

          பொருத்துவதும் கல்வியென்றே போற்று

12. இப்பாடல் இடம் பெற்ற நூல் ____________

அ) நீதிவெண்பா                    ஆ) புறநானூறு           இ) வெற்றி வேற்கை    ஈ) கொன்றை வேந்தன்

13. பாடலின் சீர் மோனைச் சொற்கள் ______________

அ) அருளை,அருத்துவதும்        ஆ) அருளை,அறிவை              இ) அகற்றி, அருந்துணையாய்       

ஈ) அறிவை,அகற்றி

14.அருந்துணையாய் – இச்சொல்லைப் பிரித்தால் ___________

அ) அருந்துணை+ யாய்           ஆ) அருந்து  + துணையாய்      இ) அருமை + துணையாய்         

ஈ) அரு + துணையாய்

15. உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது ____________

அ) அன்பு         ஆ) கல்வி        இ) மயக்கம்               ஈ) செல்வம்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 )

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. தமிழ்ச்சொல்வளம் குறித்து கால்டுவெல் குறிப்பிடும் கருத்தை எழுதுக.

17. விடைக்கேற்ற வினா அமைக்க.

          அ. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் தமிழ்த்திரு.இளங்குமரனார்.

          ஆ. சாலைகளின் இடப்பக்கம் வண்டிகள் செல்வதே சாலை விதிகளில் முதன்மையான விதி.

18. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

19. எதற்காக எழுதுகிறேன்? என்று ஜெயகாந்தன் கூறிய காரணம் ஒன்றினைக் குறிப்பிடுக.

20. முல்லை நிலத்திருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?

21. குற்றம் – எனத் தொடங்கும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                         5×2=10

22. தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

          முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள்.

23. அறியேன் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

24. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.

25. “ எட்டு “ என்பதனைத் தொடர்மொழியாகவும், பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

26. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி தொடர் அமைக்க.

          அ. இயற்கை – செயற்கை                 ஆ. தான் – தாம்

27. கலைச்சொல் தருக:-

          அ. Belief                                       ஆ) Renaissance

28. பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதனை நிலைநாட்ட, போரிடும் திணைக் குறித்து எழுதுக.

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                        2×3=6

29. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு தந்து விளக்குக.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;

தமிழர்,போரிலும் அறநெறிகளை பின்பற்றினர்.போர் அறம் என்பது வீரமற்றோர்,புற முதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர்,புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதனை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

          அ) போர் அறம் என்பது எவற்றைக் குறிக்கிறது?

          ஆ) ஆவூர் மூலங்கிழார் போர் அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது?

          இ) போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று இலக்கியங்கள்

       குறிப்பிடுகின்றன?

31.” தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                      2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. “ மாளாத காதல் நோயாளன் போல் “ – என்னும் தொடரில் உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

33. “ கவிஞன் யானோர் காலக் கணிதம்” – எனத் தொடங்கும் கவிஞர்  கண்ணதாசனின் கவிதையில் உங்களை கவர்ந்த மூன்று தொடர்களை எழுதி காரணத்தைக் குறிப்பிடுக.

34. “ தண்டலை மயில்களாட “ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக

(அல்லது )

          “ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                 2×3=6

35. தீவக அணியை விளக்கி,மூவகை தீவக அணிகளையும் குறிப்பிடுக.

36. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

      டைந்துடன் மாண்ட தமைச்சு – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

37. கண்ணே கண்ணுறங்கு !

     காலையில் நீயெழும்பு!

     மாமழை பொய்கையிலே

    மாம்பூவே கண்ணுறங்கு!

   பாடினேன் தாலாட்டு!

    ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர்வகைகளை எழுதுக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                            5×5=25

38. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதீகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு  எழுதுக.

( அல்லது )

ஆ) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனார் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

39. அ)“ மரம் இயற்கையின் வரம் “ என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற  கட்டுரைப் போட்டியில்

      முதல்  பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

( அல்லது )

    ஆ) “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்”- குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி,அதனைச் செயல்படுத்தத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் வேண்டி,தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.


41. சேலம் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க எண்50 இல் வசிக்கும்  மதியழகன் மகள் தமிழினியாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று தற்போது அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேரவிருக்கிறார். அவரின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு  மதிப்பெண் பட்டியல்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர் தம்மை தமிழினியாளாக நினைத்து உரியப் படிவத்தை நிரப்புக..

பெயர்

தமிழினியாள்

தேர்வெண்

15016032

தமிழ்

92

ஆங்கிலம்

89

கணிதம்

100

அறிவியல்

75

சமூக அறிவியல்

88

 

42. அ) பள்ளியில் நான்,வீட்டில் நான் – என்னும் தலைப்புகளில் நீங்கள்,பள்ளியிலும், வீட்டிலும் நடந்துகொள்ளும் முறைகள் ஐந்தினைப் பட்டியலிடுக.

( அல்லது )

    ஆ) Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about out Tamil culture. Sangam Literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago.Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughtout India, Malaysia, Singapore,England and World wide.Though our culture is very old,it has been updated consistently. We should feel proud about our culture.Thank you one and all.

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                     3×8=24

43. அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில்

           பேசுவதற்கான உரைக் குறிப்புகளை விரிவாக எழுதுக.

( அல்லது )

    ஆ) சங்க இலக்கியங்களில் காணப்படும் ஐந்து அறக்கருத்துகளைத் தொகுத்து, அவை இன்றும் தேவையே

           என்பதனை நிறுவுக.

44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

( அல்லது )

     ஆ) அழகிரிசாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.

45. அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.

    குறிப்புகள் : முன்னுரை – மனித வாழ்வு அறம் சார்ந்தது – இலக்கியம் காட்டும் அறம் – அறத்தான் வருவதே இன்பம் – முடிவுரை

( அல்லது )

     ஆ) குமரிக்கடல் கடல்முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை,தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு,பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் அமைத்து,பரணி பாடி, கலம்பகம் கண்டு,உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாக பூட்டி அழகூட்டி அகம் மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

          இக்கருத்தைக் கருவாகக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக,

வினாத்தாள் வடிவமைப்பு.

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப்பள்ளி,

கோரணம்பட்டி,

சேலம்.

CLICK DOWNLOAD BUTTON TO GET PDF 


நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post