10TH-TAMIL-UNIT1- 50MARK QUESTIONS-PDF

 

  வகுப்பு : 10                                                       அலகு : இயல் -1

பாடம்    : தமிழ்                                                     மொத்த மதிப்பெண் : 50

I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                          5×1=5

1. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது___________________

) இலையும்,சருகும் ) தோகையும் சண்டும்   ) தாளும் ஓலையும்   ) சருகும் சண்டும்

2. பேச்சுவழக்கில்  உணர்வுக்கும்,இனிய ஓசைக்கும்………பயன்படுகிறது.

)உயிர்மெய்   )ஆய்தம்  )அளபெடை  )குற்றியலுகரம்

3. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இதுதொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே_______

) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ)கேட்டவர்;பாடிய           ) பாடல்;கேட்டவர்

4. ஆலும் வேலும் பல்லுக்குறுதி,நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி – இத்தொடர்கள் உணர்த்தும் மரங்களின் பெயரையும், தமிழ்ழெண்களையும் குறிப்பிடுக

) ஆலமரம்,வேப்பமரம்- ரு,க       )  ஆலமரம்,வேலமரம் – ௪ ,௨    ) அரசமரம்,வேங்கை மரம் – ௧ ,௨               ) வேப்பமரம்,ஆலமரம் – ௪ ,௬

5.சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்……                                                           )பாரதியார்  )ஜி.யு.போப்  ).சச்சிதானந்தன்  )பாவலரேறு                                                          

II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:-                                                       5×1=5

6. செந்தமிழே!உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தேரைவிரிக்கும்?

முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்

செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த

அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி

முந்துற்றோம் யாண்டும் முங்கத் தனித்தமிழே !

 6. இப்பாடலின் ஆசிரியர் யார்?

அ) சச்சிதானந்தன் ஆ) பெருஞ்சித்திரனார் இ) தமிழழகனார் ஈ) பாரதிதாசன்

7. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ) தென்மொழி         ஆ) பாவியக்கொத்து இ) கனிச்சாறு           ஈ) மகபுகுவஞ்சி

8. இப்பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை நயம் காண்க:-

அ) முந்தை – விந்தை               ஆ) உந்தி – உணர்

இ) இலக்கியமும் – புகழுகரயும்   ஈ) செந்தமிழேசெப்பரிய

9.பைந்தமிழ் – இலக்கண குறிப்பு தருக;-

அ) வினைத் தொகை ஆ) வேற்றுமைத் தொகை          இ) பண்புத் தொகை   ஈ) உவமைத் தொகை

10.பெருமை என்பது இங்கு எதனைச் சுட்டுகிறது?

அ) ஆசிரியரின் புகழ் ஆ) தமிழின் புகழ் இ) தமிழின் சிறப்புகள்    ஈ) ஆசிரியரின் சிறப்புகள்

III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                         3×2=6

11. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ. ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே,அந்நாட்டு மக்களின் அறொவொழுக்கங்கள் அமைந்திருக்கும்.

ஆ. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் தமிழ்த்திரு.இளங்குமரனார்.

12. அன்னை மொழியே பாடலில் இடம் பெற்றுள்ள சங்க இலக்கிய நூல்களை குறிப்பிடுக.

13. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                        4×2=8

14. பண்புத்தொகை குறித்து எழுதுக.

15. கலைச்சொல் அறிக:- அ. vowel                       ஆ. consonant

16. .தொகைச் சொல் வகை அறிந்து தொடரில் அமைக்க : 1. முத்துப்பல்   2. எழுகதிர்

17. மொழி பெயர்ப்பு:-

1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

 

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                                      2×3=6

பிரிவு -1

18. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது- இது போள் இளம் பயிர்வகை மூன்றின் பெயர்களை தொடரில் அமைத்து எழுதுக,

19. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

தமிழ்த்திரு.இரா.இளங்குமரனார் திருச்சிராப்பள்ளி அருகில் அல்லூரில் “ திருவள்ளுவர் தவச்சாலை “ அமைத்தார். அவர் விழிகளை இழக்க நேரிட்டாலும் தாய்த் தமிழை இழந்து விடக்கூடாது என்பதற்காக திரு.வி.க-வை போல் இமை மூடிய படி எழுதுவும் ஆற்றலைக் கற்றுக் கொண்டார்.இவர் பற்பல நூல்கள் எழுதியிருப்பினும் இலக்கண வரலாறு,தமிழிசை இயக்கம்,தனித்தமிழ் இயக்கம்,பாவாணர் வரலாறு,குண்டலகேசி உரை,யாப்பருங்கலம் உரை,புறத்திரட்டு உரை,காக்கைப்பாடினிய உரை,திருக்குறள் தமிழ் மரபுரை,தேவநேயம் முதலியன இவரின் தமிழ்பணியை தரமுயர்த்திய நல்முத்துகள்.

அ. தாய்த்தமிழை இழக்கக் கூடாது என்பதற்காக இளங்குமரனார் செய்த செயல் யாது?

ஆ. இளங்குமரனாரின் தமிழ்ப்பணியை தரமுயர்த்திய நூல்கள் யாவை?

இ. திருவள்ளுவர் தவச்சாலையை இளங்குமரனார் எங்கு நிறுவினார்?

20. தமிழ்மொழிப் பற்றி கால்டுவெல் அவர்களின் கூற்று குறித்து எழுதுக.

பிரிவு -2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                                            2×3=6

வினா எண் : 23 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

21. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?

22.தொழிற்பெயர்,வினையாலணையும் பெயர் வேறுபாடு தருக.

23. அன்னை மொழியே -எனத்தொடங்கும் பெருஞ்சித்திரனார் வாழ்த்துப் பாடலை அடிமாறாமல் எழுதுக,

VI) கீழ்க்காணும்  வினாவிற்கு  விடையளி:-                                                              1×4=4

24. . அ.) நயம் பாராட்டுக:-                                                              

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

               தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

               உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

               மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

               தழைத்தினி தோங்குவதாய் தண்டமிழ் மொழியே

                                                                           கா.நமச்சிவாயர்

( அல்லது )

ஆ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-

VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                                    2×5=10

25.அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை ஒரு பக்க அளவில் எழுதுக.

 (அல்லது )

ஆ) மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தினையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சினை ஒன்றினை உருவாக்குக.

26. சான்றோர் வளர்த்த தமிழ் எனும் தலைப்பில் ஒரு பக்கத்திற்கு மிகாமல் கட்டுரை எழுதுக.

(அல்லது )

கொராணா காலக் கட்டத்தில் இளம் செஞ்சிலுவை சங்கத்தில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கரங்களால் விருது பெற்ற உனது தோழனை பாராட்டி வாழ்த்து மடல் எழுதுக.

 

முயற்சி,பயிற்சி,வெற்றி

வினாத்தாள் வடிவமைப்பு :  வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,சேலம்




நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post