இயல் - 3
ஒரு மதிப்பெண் தேர்வு
- 3
நேரம் :
40 நிமி தமிழ் மதிப்பெண்கள் : 50
பலவுள் தெரிக
: 50
x 1 = 50
1.
தொல்காப்பியர் விருந்து
என்பதை என்னவென்று கூறியுள்ளார் ?
அ) தொன்மை ஆ) புதுமை இ) இளமை ஈ) முதுமை .
2.
பின்வருவனவற்றுள் முறையான
தொடர் -
அ) தமிழர்
பண்பாட்டில் தனித்த வாழை
இலைக்கு இடமுண்டு .
ஆ) தமிழர்
வாழை இலைக்குப் பண்பாட்டில்
தனித்த இடமுண்டு.
இ) தமிழர்
பண்பாட்டில் வாழை இலைக்குத்
தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு
இடமுண்டு.
3.
மினசோட்டா தமிழ்ச்சங்கம்
அமைந்துள்ள இடம் எது ?
அ) அமெரிக்கா ஆ) இலங்கை இ) மலேசியா ஈ) மொரிசியஸ் .
4.
அமரிக்காவின் மினசோட்டா
தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும்
விழா
அ) வேட்டி சேலை
உடுத்தும் விழா ஆ) இறைச்சி
உணவிவிருந்து விழா இ) வாழையிலை
விருந்து விழா ஈ) நவதானிய
விழா .
5.
திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம்
இடம்பெறும் இயல்
அ) துறவறவியல் ஆ) அரசியல் இ) இல்லறவியல் ஈ) பாயிரவியல் .
6.
அன்று விதைத்துவிட்டு வந்த
நெல்லை அரித்து வந்து ,
பின் சமைத்து சிவனடியாருக்கு விருந்து
படைத்தவர் யார் ? இக்காட்சி
இடம்பெறும் நூல் எது ?
அ) சாக்கிய நாயனார் ,
பெரியபுராணம் ஆ) இளையான்குடி மாறநாயனார் , பெரியபுராணம் இ) கம்பர் , கம்பராமாயணம் ஈ) செயங்கொண்டார் ,
கலிங்கத்துப்பரணி .
7.
“ .......................................... தொல்லோர்
சிறப்பின் விருந்தெதிர் கோடலும்
இழந்த என்னை ” என்று
குறிப்பிடும் நூல் அ) கம்பராமாயணம் ஆ) கலிங்கத்துப்பரணி இ) திருக்குறள் ஈ) சிலப்பதிகாரம் .
8.
“பலர்புகு
வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ ” என்று குறிப்பிடும் நூல் அ) குறுந்தொகை ஆ) நற்றிணை இ) பதிற்றுப்பத்து ஈ) புறநானூறு .
9.
‘ காலின்
ஏழடிப் பின் சென்று ’
- என்னும் பொருநராற்றுப்படை உணர்த்தும் செய்தி -
அ) விருந்தினரின் காலைத்தொட்டு வணங்கினர் .
ஆ) விருந்தினரை
ஏழு அடிவரை நடந்து
சென்று வழியனுப்பினர் .
இ) எழுவர்
விருந்தினர் பின்சென்று வழியனுப்பினர் .
ஈ)
ஏழு நாள்கள்
விருந்தளித்துப் பின் விருந்தினரை
வழியனுப்புவர்.
10.
‘விருந்தினரைப்
பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் ,
தன் கருங்கோட்டுச் சீறியாழைப்
பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது
புறநானூறு’ -
இச்செய்தி உணர்த்தும் விருந்து
போற்றிய நிலை -
அ) நிலத்திற்கேற்ற விருந்து ஆ) இன்மையிலும்
விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து .
11.
கல்வியும் செல்வமும்
பெற்ற பெண்கள் , விருந்தும்
ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டவர் யார் ?
அ) கம்பர் ஆ) செயங்கொண்டார் இ) தொல்காப்பியர் ஈ) இளங்கோவடிகள் .
12.
“அல்லில் ஆயினும் விருந்து
வரின் உவக்கும்” என்று
நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத்தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும்
நூல் அ) குறுந்தொகை ஆ) நற்றிணை இ) அகநானூறு ஈ) புறநானூறு .
13.
நெய்தல் நிலத்தவர்
பாணர்களை வரவேற்றுக் குழல்
மீன் கறியும் பிறவும்
கொடுத்தனர் எனக் கூறும்
நூல் ? அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை இ) பொருநராற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை .
1
14.
“மருந்தே
ஆயினும் விருந்தோடு உண்”
எனப் பாடியவர் யார் ?
நூல் எது ?
அ) ஒளவையார் , ஆத்திச்சூடி ஆ) ஒளவையார் , கொன்றைவேந்தன் இ) குமரகுருபரர் ,
நீதிநெறிவிளக்கம் ஈ) கம்பர் , கம்பராமாயணம் .
15.
‘காலின் ஏழடி பின்
சென்று’ என
விருந்தினரை வழியனுப்பும் தமிழரின்
இயல்பைக் குறிப்பிடும் நூல் அ) சிறுபாணாற்றுப்படை ஆ) பெரும்பாணாற்றுப்படை இ) பொருநராற்றுப்படை ஈ) கூத்தராற்றுப்படை .
16.
காசிக்காண்டம் என்பது
-
அ) காசி
நகரத்தின் வரலாற்றைப் பாடும்
நூல் ஆ) காசி
நகரத்தைக் குறிக்கும் மறுபெயர் இ) காசி
நகரத்தின் பெருமையைப் பாடும்
நூல் ஈ) காசி
நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல் .
17.
மலைப்படுகடாம்
................................................ நூல்களுள்
ஒன்று . அ) எட்டுத்தொகை ஆ) சிற்றிலக்கியம் இ) பத்துப்பாட்டு ஈ) பதினெண்கீழ்கணக்கு .
18.
“உப்பிலாக் கூழ் இட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்” என்று குறிப்பிடும் நூல்
அ) சீவகசிந்தாமணி ஆ) விவேகசிந்தாமணி இ) மணிமேகலை ஈ) நற்றிணை .
19.
மலைப்படுகடாம் என்னும்
நூலில் மலைக்கு உவமையாகக்
கூறப்படுவது
அ) யானை ஆ) புலி இ) கரடி ஈ) சிங்கம் .
20.
அதிவீரராம பாண்டியரின்
பட்டப்பெயர் அ) சீவலப்பேரிபாண்டி ஆ) மாறன்வழுதி இ) மாறவர்மன் ஈ) சீவலமாறன் .
21.
“சிலம்பு
அடைந்திருந்த பாக்கம் எய்தி”
என்னும் அடியில் பாக்கம்
என்பது -
அ) புத்தூர் ஆ) மூதூர் இ) பேரூர் ஈ) சிற்றூர் .
22.
விருந்தோம்பல் செய்யும்
இல்லற ஒழுக்கத்தின் பண்புகள்
எத்தனை ?
அ) பத்து ஆ) எட்டு இ) இரண்டு ஈ) ஒன்பது
.
23.
மலைப்படுகடாம் நூலின்
பாடல் அடிகள்
அ) 583 ஆ) 385 இ)
853 ஈ) 835 .
24.
வெற்றி வேற்கை
என்னும் நறுந்தொகை என்னும்
நூலை இயற்றியவர்
அ) அதிவீரராம
பாண்டியன் ஆ) பெருங்கெளசிகனார் இ) இளங்கோவடிகள் ஈ)
கம்பர் .
25.
மலைப்படுகடாம் என்பதற்கு
வேறுபெயர் அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) பொருநராற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை .
26.
அறிஞருக்கு நூல் ,
அறிஞரது நூல் ஆகிய
சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
அ) வேற்றுமை
உருபு ஆ) எழுவாய் இ) உவம
உருபு
ஈ) உரிச்சொல் .
27.
தொகாநிலைத்தொடர் ................................ வகைப்படும் . அ) ஆறு ஆ)
எட்டு இ) ஒன்பது ஈ) பத்து .
28.
வடித்த கஞ்சி
எவ்வகைத் தொடர் ?
அ) உரிச்சொல்தொடர் ஆ)
பெயரெச்சத்தொடர் இ) வினையெச்சத்தொடர் ஈ)
வேற்றுமைத்தொடர்.
29.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்” - அடிக்கோடிட்ட
சொல்லின் தொடர்வகை
அ) அடுக்குத்தொடர் ஆ)
வினைமுற்றுத்தொடர் இ) இடைசொல்தொடர் ஈ)
வேற்றுமைத்தொடர்.
30.
“பாடினாள் கண்ணகி” - இத்தொடரின்
வகை அ) உரிச்சொல்தொடர் ஆ)
எழுவாய்த்தொடர் இ) அடுக்குத்தொடர் ஈ)
வினைமுற்றுத்தொடர்.
31.
கேட்க வேண்டிய
பாடல் , சொல்லத்தக்க செய்தி
எவ்வகைத் தொடர்கள்
அ) கூட்டுநிலை பெயரெச்சம்
ஆ) இடைநிலை பெயரெச்சம்
இ) அடுக்குநிலை பெயரெச்சம்
ஈ) வேற்றுநிலை பெயரெச்சம்.
32.
மாடியிலிருந்து இறங்கினார்
முகமது - இத்தொடரில்
“இறங்கினார் முகமது ” எவ்வகைத்
தொடர்
அ) உரிச்சொல்தொடர் ஆ)
எழுவாய்த்தொடர் இ) அடுக்குத்தொடர் ஈ)
வினைமுற்றுத்தொடர்.
33.
Epic Literature என்பதன் கலைச்சொல்
தருக . அ) நவீன
இலக்கியம் ஆ) பக்தி
இலக்கியம் இ) காப்பிய
இலக்கியம் ஈ) செவ்விலக்கியம் .
2
34.
அன்பால் கட்டினார் , அறிஞருக்குப் பொன்னாடை
ஆகிய சொற்றொடர்களில் பொருளை
வேறுபடுத்தக் காரணமாக அமைவது
அ) உரிச்சொல் ஆ) எழுவாய் இ) உவம
உருபு
ஈ) வேற்றுமை உருபு .
35.
ஒரு சொல்
இரண்டு மூன்று முறை
அடுக்கித் தொடர்வது ........................................
அ) உரிச்சொல்தொடர் ஆ)
இடைச்சொல்தொடர் இ) அடுக்குத்தொடர் ஈ)
வேற்றுமைத்தொடர்.
36.
வேண்டிய என்னும்
கூட்டுநிலைப் பெயரெச்சம் எவ்வாறு
உருவாகிறது ?
அ) பெயரெச்சங்கள் ,
செய என்னும் வாய்ப்பாட்டு
வினையெச்சத்துடன் சேரும்போது ஆ) பெயரெச்சங்கள் ,
செய்யூ என்னும் வாய்ப்பாட்டு
வினையெச்சத்துடன் சேரும்போது இ) பெயரெச்சங்கள் ,
செய்து என்னும் வாய்ப்பாட்டு
வினையெச்சத்துடன் சேரும்போது ஈ) பெயரெச்சங்கள் ,
செய்யா என்னும் வாய்ப்பாட்டு
வினையெச்சத்துடன் சேரும்போது .
37.
Classical Literature என்பதன் கலைச்சொல்
தருக . அ)
நவீன இலக்கியம் ஆ)
பக்தி இலக்கியம் இ)
காப்பிய இலக்கியம் ஈ)
செவ்விலக் கியம் .
விடைக்கேற்ற வினா அமைக்க :
38.
அமெரிக்காவின் மினசோட்டா
தமிழ்ச்சங்கம் ‘வாழை இலை
விருந்து விழாவை’ ஆண்டுதோறும்
கொண்டாடி வருகிறது .
39.
விருந்து பற்றி
எடுத்துரைக்கும் சங்க
இலக்கிய நூல்கள் புறநானூறு , நற்றிணை , குறுந்தொகை.
கீழ்க்காணும் பாடலைப்
படித்து வினாக்களுக்கு விடையளிக்க :
“அன்று அவண்
அசைஇ , அல்சேர்ந்து அல்கி ,
கன்று எரி ஒள்இணர்
கடும்பொடு மலைந்து
சேந்த
செயலைச் செப்பம் போகி ,
அலங்கு கழை நரலும்
ஆரிப்படுகர்ச்
சிலம்பு
அடைந்திருந்த பாக்கம் எய்தி
நோனாச்
செருவின் வலம்படு நோன்தாள்
மான
விறல்வேள் வயரியம் எனினே ,”
40.
இப்பாடல் இடம்பெற்றுள்ள
நூல்
அ
) சிலப்பதிகாரம் ஆ) மலைப்படுகடாம் இ)
முல்லைப்பாட்டு
ஈ) காசிக்காண்டம் .
41.
இப்பாடலின் ஆசிரியர்
அ ) பெருங்கெளசிகனார் ஆ)
இளங்கோவடிகள் இ) அதிவீரராமபாண்டியன் ஈ)
நப்பூதனார் .
42. அசைஇ - இலக்கணக்குறிப்பு தருக .
அ ) வினைத்தொகை ஆ)
செய்யுளிசை அளபெடை இ)
சொல்லிசை அளபெடை ஈ)
பண்புத்தொகை
43. பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச்
சொற்கள் .
அ) அன்று , கன்று , அலங்கு ,
சிலம்பு ஆ) அன்று , அவண் , அசைஇ , அல்கி இ) சேந்த , செயலை , செப்பம் , சிலம்பு ஈ) அல்கி , எய்தி , போகி , எனினே .
3
கீழ்க்காணும் பாடலைப்
படித்து வினாக்களுக்கு விடையளிக்க :
விருந்தினனாக ஒருவன் வந்து
எதிரின்
வியத்தல்
நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக
என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன
செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன் அருகுற
இருத்தல்
போமெனில்
பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல்
இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
44. இப்பாடல்
இடம்பெற்றுள்ள நூல்
அ ) சிலப்பதிகாரம் ஆ) மலைப்படுகடாம் இ)
முல்லைப்பாட்டு
ஈ) காசிக்காண்டம் .
45. இப்பாடலின் ஆசிரியர்
அ ) பெருங்கெளசிகனார் ஆ) இளங்கோவடிகள் இ)
அதிவீரராமபாண்டியன் ஈ) நப்பூதனார் .
46. அருகுற
என்பதன் பொருள் .
அ ) தொலைவில் ஆ) ஒலிக்கும் இ) பள்ளம் ஈ) அருகில் .
47. உரைத்தல்
என்பதன் இலக்கணகுறிப்பு தருக .
அ) எண்ணும்மை ஆ) தொழிற்பெயர் இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
உரைப்பத்தியை
படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
வீட்டிற்கு வந்த
உறவினர்களிடம் வாருங்கள் , அமருங்கள் , நலமா ? நீர்
அருந்துங்கள் , குடும்பத்தினர் அனைவரும்
நலமா ?
என சில வார்த்தைகளைக் கூறி
முகமலர்ச்சியுடன்
விருந்தினரை வரவேற்றேன் . வீட்டிற்கு
வந்த விருந்தினருக்கு அறுசுவை
உணவைத் தயார் செய்து
அவரை உணவருந்த வருமாறு
அழைத்தேன் . தலைவாழை இலையில்
விருந்தினருக்கு உணவளிப்பது மரபு .
ஆகவே தமிழ்ப் பண்பாடு
மறையாதிருக்க தலைவாழை இலையில்
விருந்தினருக்கு உணவிட்டேன் .
48.
வீட்டிற்கு வரும்
விருந்தினரை எவ்வாறு அழைப்பாய் ?
49.
நா உணரும்
சுவை எத்தனை ?
50.
தமிழ்ப் பண்பாடு
மறையாதிருக்க எந்த இலையில்
உணவு பரிமாறினர் ?
நன்றி
வினாத்தாள் தயாரிப்பு:-
திரு.சு.அழகுராஜ்,
தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
திருகண்ணபுரம்,
நாகப்பட்டிணம்.
பத்தாம் வகுப்பு
இயல் -3
ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 50 - மதிப்பெண் )
பயிற்சித்தாள் - புதிது
பதிவிறக்க சிறிது நேரத்திற்குப் பின் DOWNLOAD என்பதனை சொடுக்கி பதிவிறக்கம் செய்யலாம்.