வகுப்பு :
10 இயல் - 2
ஒரு மதிப்பெண்
தேர்வு - 2
நேரம் :
40 நிமி
தமிழ்
மதிப்பெண்கள் : 50
பலவுள் தெரிக :
50 x 1 = 50
1.
உலகம் ஐம்பூதங்களால்
ஆனது என்றவர்
அ) திருமூலர்
ஆ) ஒளவையார்
இ) தொல்காப்பியர் ஈ) கம்பர்
2. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து
வாழ்நாளை நீட்டிக்கும் என்று
கூறியவர் யார்? கூறப்பட்ட
நூல் எது? அ) மாணிக்கவாசகர் , திருவாசகம் ஆ) திருமூலர் , திருமந்திரம்
இ)
திருநாவுக்கரசர் , தேவாரம் ஈ) ஒளவையார் , ஆத்திச்சூடி.
3. “வாயு வழக்கம்
அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள்
பெருக்கம் உண்டாம்” என்ற
பாடலடியைப் பாடியவர் யார் ?
அ) திருமூலர் ஆ)
ஒளவையார் இ) தொல்காப்பியர் ஈ)
கம்பர் .
4. தாய்லாந்து மன்னரின்
முடிசூட்டு விழாவிற்கு எப்பாடல்களைத்
தாய்மொழியில் எழுதி வைத்துப்
பாடுகிறார்கள் ?
அ) திருமந்திரம் , திருவாசகம்
ஆ) திருக்குறள்
, திருமந்திரம்
இ) திருவருட்பா , திருப்பாவை ஈ)
திருவெம்பாவை , திருப்பாவை .
5. “வண்டொடு புக்க மணவாய்த்
தென்றல்” எனக் கூறும்
நூல் எது ?
ஆசிரியர் யார் ?
அ) தென்றல்விடுதூது
, சொக்கநாதர் ஆ) சிலப்பதிகாரம் , இளங்கோவடிகள் இ) மணிமேகலை , சீத்தலைச்
சாத்தனார்
ஈ) புறநானூறு , ஐயூர் முடவனார் .
6. செய்தி 1 - ஒவ்வோர்
ஆண்டும் ஜுன் 15
ஐ உலகக் காற்று
நாளாகக் கொண்டாடி வருகிறோம் .
செய்தி 2 - காற்றாலை
மின் உற்பத்தியில் இந்தியாவில்
தமிழகம் இரண்டாமிடம் என்பது
எனக்குப் பெருமையே .
செய்தி 3 - காற்றின்
ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து
வணிகம்செய்து அதில் வெற்றி
கண்டவர்கள் தமிழர்கள் !
அ) செய்தி
1 மட்டும் சரி ஆ) செய்தி
1 , 2 ஆகியன சரி
இ) செய்தி 3
மட்டும் சரி ஈ) செய்தி
1 , 3 ஆகியன சரி.
7. இந்தியாவில் காற்றாலை
மின் உற்பத்தியில் முதலிடம்
வகிக்கும் மாநிலம்
அ) குஜராத் ஆ) கேரளா இ) தமிழ்நாடு ஈ) ஆந்திரா .
8. ஜூன் முதல் செப்டம்பர்
வீசும் பருவக்காற்று எது ? அ) வடகிழக்குப்
பருவக்காற்று ஆ) தென்மேற்குப்
பருவக்காற்று இ) வடமேற்குப்
பருவக்காற்று
ஈ) தென்கிழக்குப் பருவக்காற்று .
9. ஒரு மணித்துளிக்கு 12
முதல் 18 முறை
மூச்சுக்காற்றாய் நாம் வெளியிடுவது
எது ? .
அ) ஆக்ஸிஜன்
ஆ)
நைட்ரஜன் இ) கார்பன் - டை - ஆக்சைடு ஈ) ஹைட்ரஜன் .
10. தென்மேற்குப்
பருவக்காற்று இந்தியாவிற்கு எத்தனை
விழுக்காடு மழைப்பொழிவினைத் தருகிறது ?
அ) ஐம்பது
ஆ) அறுபது இ) எழுபது ஈ)
எண்பது .
11. உலக காற்றாலை உற்பத்தியில் ஐந்தாம்
இடம்பெற்றுள்ள நாடு
அ) இந்தியா ஆ) அமெரிக்கா இ) சீனா ஈ)
ஜப்பான் .
12. ஹிப்பாலஸ்
பருவக்காற்று என்று பெயரிட்டவர்கள்
அ) யவனர்
ஆ) சீனர் இ) ஆங்கிலேயர் ஈ) அமெரிக்கர் .
13. பொருத்துக .
அ) கொண்டல் -
1. மேற்கு
ஆ) கோடை - 2. தெற்கு
இ) வாடை - 3. கிழக்கு
ஈ) தென்றல் - 4. வடக்கு
15. “நளி இரு
முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட
உரவோன் மருக !
களி இயல் யானைக் கரிகால்
வளவ !” - என்று
பழங்காலத்தில் கடல்கடந்த பயணங்கள்
அனைத்தும் காற்றினால் இயக்கப்பட்ட
பாய்மரக் கப்பல்களால்தான் நிகழ்ந்தன
குறிப்பிடும் நூல் , ஆசிரியர் ? அ) புறநானூறு , வெண்ணிக்குயத்தியார்
ஆ) அகநானூறு , வீரமாமுனிவர் இ)
பரிபாடல் , இளங்குமரனார் ஈ)
கலித்தொகை , நல்லந்துவனார் .
16. உனக்குப்
பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப்
புகழ்ச்சிகள் கூறுகிறோம்” -
பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள
நயங்கள் யாவை ? அ) உருவகம் , எதுகை ஆ)
மோனை ,
எதுகை இ) முரண் , இயைபு
ஈ) உவமை , எதுகை.
17. முல்லைப்பாட்டின்
மொத்த அடிகள்
அ) 101 ஆ) 102 இ)
103 ஈ) 104 .
18. புதுக்கவிதை
என்ற வடிவம் உருவாகக்
காரணம்
அ) பாரதியின்
வசனக் கவிதை ஆ) ஜப்பானியரின் ஹைக்கூ
இ) வீரமாமுனிவரின் உரைநடை
ஈ) கம்பரின்
கவிநயம் ..
19. “கொடுங்கோற் கோவலர்” -
இதில் குறிப்பிடப்படும் கோவலர்
யார் ?
அ) கோவலன் ஆ)
குறவர் இ) உழவர்
ஈ) இடையர் .
20. முல்லைப்பாட்டின்
ஆசிரியர் யார் ?.
21. வசனக்கவிதையைத்
தமிழில் அறிமுகப்படுத்தியவர்
................................. .
அ) பாரதிதாசன் ஆ) வல்லிக்கண்ணன் இ)
பிச்சமூர்த்தி ஈ) பாரதியார்
.
22. பத்துப்பாட்டில்
மிகக்குறைந்த அடிகளைக் கொண்ட
நூல்
அ) குறிஞ்சிப்பாட்டு ஆ)
முல்லைப்பாட்டு இ) பட்டினப்பாலை ஈ) திருமுருகாற்றுப்படை .
23. பாரதியார்
ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்
1) இந்தியா 2) சுதேசமித்திரன் 3) எழுத்து
4) கணையாழி
அ) 1 , 2 மட்டும் சரி ஆ) 1 , 2 , 3 மட்டும் சரி இ) 1, 3 மட்டும் சரி
ஈ) 2 , 4
மட்டும் சரி .
24. பொருத்துக .
அ) நேமி -
1. மலை
ஆ) கோடு - 2. வலம்புரி
சங்கு
இ) விரிச்சி -
3. தோள்
ஈ) சுவல் -
4. நற்சொல்
அ) 2 , 1 , 4 , 3 ஆ) 2 , 1 , 3 , 4 இ) 4 , 2 , 3 , 1 ஈ) 3 , 4 , 1 , 2
25. பாட்டுக்கொரு
புலவன் , நீடுதுயில் நீக்கப்
பாடிவந்த நிலா , சிந்துக்குத்
தந்தை எனப் பாராட்டப்
பெற்றவர் அ
) பாரதியார் ஆ) நப்பூதனார் இ) திரு . வி. க ஈ) பாரதிதாசன் .
26. “பெரிய மீசை” சிரித்தார்
-
வண்ணச் சொல்லுக்கான தொகையின்
வகை எது ?
அ
) பண்புத்தொகை ஆ)
உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ)
உம்மைத்தொகை .
27. இருசொற்களுக்கு
இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல்
மறைந்து வருவது
அ ) உவமைத்தொகை ஆ) உம்மைத்தொகை இ) பண்புத்தொகை ஈ) வினைத்தொகை .
2
28. காலம் கரந்த பெயரெச்சம்
என்பது .
அ
) உவமைத்தொகை ஆ) வினைத்தொகை இ) பண்புத்தொகை ஈ) வேற்றுமித்தொகை
.
29. தொகைநிலைத்தொடர் ................................................... வகைப்படும் .
அ )
7 ஆ) 8 இ)
9 ஈ) 6 .
30. மூதூர் , உறுதுயர்
என்பன எவ்வகைத் தொடர்கள்
அ
) பண்புத்தொகை ,
வினைத்தொகை
ஆ) வினைத்தொகை , உவமைத்தொகை
இ)
உவமைத்தொகை , உம்மைத்தொகை
ஈ) உம்மைத்தொகை ,வேற்றுமைத்தொகை .
31. அன்மொழித்தொகைக்கு
சான்று தருக .
அ
) கரும்பு தின்றான் ஆ)
முறுக்கு மீசை வந்தார் இ)
கொல்களிறு ஈ) சாரைப்பாம்பு .
32. அன்புச்செல்வன் திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக்
கொண்டிருந்தார் - வண்ணமிட்ட
தொகைச்சொற்களை வகைப்படுத்துக .
அ ) உம்மைத்தொகை , பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை , இருபெயரொட்டுப் பண்புத்தொகை இ)
வினைத்தொகை , உவமைத்தொகை ஈ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
, வினைத்தொகை .
33. Land Breeze - என்பதன் கலைச்சொல்
தருக .
அ )
பெருங்காற்று
ஆ) சூறாவளி இ) நிலக்காற்று ஈ) சுழல்காற்று .
34. எழுகதிர் , முத்துப்பல் - இச்சொற்களில்
மறைந்துள்ள தொகைகள் முறையே
அ ) பண்புத்தொகை ,
வினைத்தொகை
ஆ) வினைத்தொகை , உவமைத்தொகை
இ)
உவமைத்தொகை , உம்மைத்தொகை
ஈ) உம்மைத்தொகை ,வேற்றுமைத்தொகை.
35. Whirlwind - என்பதன் கலைச்சொல் தருக .
அ )
பெருங்காற்று
ஆ) சூறாவளி இ) நிலக்காற்று ஈ) சுழல்காற்று .
36. பொருத்துக .
அ) மதுரை சென்றார் -
1. வினைத்தொகை
ஆ) வீசுதென்றல் -
2. பண்புத்தொகை
இ) செங்காந்தள்
- 3. இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஈ) மார்கழித்திங்கள் - 4. நான்காம்
வேற்றுமைத்தொகை
அ) 1 , 2 , 3 , 4 ஆ) 3 , 4 , 2 , 1
இ) 4 , 1 , 2 , 3
ஈ) 2 , 3 , 4 , 1
37. இருபெயரொட்டுப்
பண்புத்தொகை அல்லாதது எது ?
அ ) மல்லிகைப்பூ ஆ) சாரைப்பாம்பு இ)
மார்கழித்திங்கள்
ஈ) மலர்க்கை .
38. நான்காம்
வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்கத்தொகைக்கு சான்று தருக .
அ ) தேர்ப்பாகன் ஆ) வீசுதென்றல் இ) தமிழ்த்தொண்டு ஈ) தாய்சேய்.
39. Tornado - என்பதன் கலைச்சொல் தருக .
அ )
பெருங்காற்று ஆ) சூறாவளி இ)
நிலக்காற்று ஈ) சுழல்காற்று .
“நனந்தலை உலகம் வளைஇ
நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு
தடக்கை
நீர்செல , நிமிர்த்த மாஅல்
போல ,
கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு
எழிலி
பெரும்புயல் பொழிந்த சிறுபுன்
மாலை”
அ ) முல்லைப்பாட்டு ஆ) மலைப்படுகடாம் இ)
நற்றிணை ஈ) குறுந்தொகை .
41. நனந்தலை
உலகம் - இத்தொடரின்
பொருள்
அ
) சிறிய உலகம் ஆ) தலையாய
உலகம் இ) நனைந்த
உலகம் ஈ) அகன்ற
உலகம்
42. பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்கள்.
அ ) பெரும்புயல் , பொழிந்த
ஆ) பாடுஇமிழ் , பனிக்கடல் இ) பாடுஇமிழ்
, கோடுகொண்டு ஈ) நீர்செல , நிமிர்த்த .
43. பாடலில்
இடம்பெற்ற அளபெடை .
அ) தடக்கை
ஆ) வளைஇ
இ) பெரும்புயல் ஈ) கொடுஞ்செலவு
காற்றே வா
மகரந்தத்
தூளைச் சுமந்து கொண்டு ,
மனத்தை
மயலுறுத்து கின்ற
இனிய வாசனையுடன் வா
இலைகளின்மீதும் , நீரலைகளின்மீதும் உராய்ந்து ,
மிகுந்த
ப்ராண
- ரஸத்தை எங்களுக்குக் கொண்டு
கொடு .
அ ) காற்றே
வா ஆ) முல்லைப்பாட்டு இ) சிலப்பதிகாரம் ஈ) மலைப்படுகடாம் .
45. இப்பாடலில் ஆசிரியர்
அ
) நப்பூதனார் ஆ)
இளங்கோவடிகள் இ)
பாரதியார் ஈ)
கம்பர் .
46. ப்ராண - ரஸம்
என்பதன் பொருள்
அ ) மயங்கச்செய் ஆ) உயிர்வளி இ) சீராக
ஈ) எதுவுமில்லை .
47. பாடலில்
இடம்பெற்றுள்ள அடிமோனைச் சொற்கள்.
அ ) மகரந்த , மயலுறுத்து ஆ) மகரந்த ,
மனத்தை
இ) மிகுந்த , உராய்ந்து
ஈ) வாசனை , மனத்தை .
நன்றி
வினாத்தாள் தயாரிப்பு:-
திரு.சு.அழகுராஜ்,
தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
திருகண்ணபுரம்,
நாகப்பட்டிணம்.
பத்தாம் வகுப்பு
இயல் -10
ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 50 - மதிப்பெண் )
பயிற்சித்தாள் - புதிது
பதிவிறக்க சிறிது நேரத்திற்குப் பின் DOWNLOAD என்பதனை சொடுக்கி பதிவிறக்கம் செய்யலாம்.