வகுப்பு :
10 இயல் - 1
ஒரு மதிப்பெண்
தேர்வு - 1
நேரம் :
40 நிமி
தமிழ்
மதிப்பெண்கள் : 50
பலவுள் தெரிக :
50 x 1 = 50
1.
எந்தமிழ்நா என்பதைப்
பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந் + தமிழ் + நா ஆ) எந்த
+ தமிழ் + நா
இ) எம்
+ தமிழ் + நா ஈ) எந்தம்
+ தமிழ் + நா
2. “அன்னைமொழியே” என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் குறிப்பிடப்படாத நூல் எது ?
அ) திருக்குறள் ஆ)
பத்துப்பாட்டு இ) எட்டுத்தொகை ஈ)
தொல்காப்பியம்
3. துரை .
மாணிக்கம் என்ற இயற்பெயர்
கொண்டவர் யார் ?
அ) பெருஞ்சித்திரனார் ஆ) தமிழழகனார் இ) தேவநேயப் பாவாணர் ஈ)
தமிழண்ணல்.
4. “சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று பாடியவர் யார் ? அ) பாரதிதாசன் ஆ) பெருஞ்சித்திரனார்
இ) க .சச்சிதானந்தன் ஈ) பாரதியார்
5. சந்தக்கவிமணி
எனக் குறிப்பிடப்படும் தமிழழகனார்
இயற்பெயர் என்ன ?
அ) சண்முகமணி ஆ) சண்முகசுந்தரம்
இ) ஞானசுந்தரம் ஈ) ஆறுமுகம்
6. ‘மெத்த வணிகலன்’ என்னும்
தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
-
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும்வணிகமும் பெரும்கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
7. தென்மொழி , தமிழ்ச்சிட்டு இதழ்களின் ஆசிரியர் யார் ?
அ) பாரதிதாசன் ஆ) கால்டுவெல்
இ) பெருஞ்சித்திரனார் ஈ)
பாவாணர் .
8. பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது எது ?
அ) பாவியக்கொத்து ஆ) கனிச்சாறு
இ) திருக்குறள்மெய்ப்பொருளுரை ஈ)
உலகியல் நூறு
9. “நற்கணக்கு” என்பது ........................................ நூலைக் குறிக்கும் .
அ) எட்டுத்தொகை ஆ) பதினெண்கீழ்கணக்கு இ) பத்து
ப்பாட்டு ஈ) சிலப்பதிகாரம் .
10. தென்னன்
என்பது யாரைக் குறிக்கும் ?
அ) பாண்டிய
மன்னன் ஆ) சேர மன்னன் இ) சோழ மன்னன் ஈ) பல்லவ மன்னன் .
11. ‘காய்ந்த இலையும்
காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு
நல்ல உரங்கள் . இத்தொடரில்
அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
- அ) இலையும் சருகும்
ஆ) தோகையும்
சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ)
சருகும் சண்டும் .
12. வேர்க்கடலை , மிளகாய் விதை , மாங்கொட்டை ஆகியவற்றைக்
குறிக்கும் பயிர்வகை - அ) குலை
வகை ஆ) மணி
வகை இ) கொழுந்து
வகை ஈ) இலை
வகை .
13. பொருத்துக .
அ) இலை -
1. தென்னை , பனை முதலியவற்றின் இலை
ஆ) தாள்
- 2. சோளம் , கம்பு
முதலியவற்றின் இலை
இ) தோகை -
3. புளி , வேம்பு முதலியவற்றின்
இலை
ஈ) ஓலை -
4. நெல் , புல் முதலியவற்றின்
இலை
அ) 1 , 2 , 3 , 4 ஆ) 3 , 4 , 2 , 1
இ) 4 , 3 , 1 , 2 ஈ) 2 , 4 , 3 , 1
14. பதராய் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அ) சொண்டு ஆ) நுழாய் இ) கச்சல்
ஈ) கதிர் .
15. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் யார் ?
அ) திரு . வி . க ஆ) வீரமாமுனிவர்
இ)
இளங்குமரனார் ஈ) கால்டுவெல்
16. பூ விரியத் தொடங்கும் நிலை ......................................................
அ) அரும்பு ஆ) செம்மல் இ) வீ ஈ) போது .
1
17. நெட்டி , மிளகாய்ச்செடி
ஆகியவற்றின் அடிப்பகுதியைக் குறிக்கும்
சொல்
அ) கோல் ஆ) தாள் இ) தூறு ஈ) தண்டு.
18. திராவிட
மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்
என்ற நூலை எழுதியவர்
யார் ?
அ) பாவாணர் ஆ) கால்டுவெல் இ) இரா. இளங்குமரனார் ஈ) திரு . வி .க
19. சுருங்கிய
பழத்தைக் குறிக்கும் சொல்
அ) சிவியல் ஆ)
சூம்பல் இ) வெம்பல் ஈ) அழுகல்
20. பொருத்துக .
அ) இளநீர் - 1.
சூட்டினால் பழுத்த பிஞ்சு
ஆ) நுழாய்
- 2. இளநெல்
இ) கருக்கல் -
3. இளம்பாக்கு
ஈ) வெம்பல் -
4. முற்றாத தேங்காய்
அ) 1 , 2 , 3 , 4 ஆ) 4 , 3 , 2 , 1 இ)
3 , 4 , 1 , 2 ஈ) 2 , 4 , 3 , 1
21. தேங்காய்
நெற்றின் மேற்பகுதி .................................. என அழைக்கப்படுகிறது ?
அ) தோடு ஆ) பொம்மை
இ) மட்டை ஈ) ஒல்லிக்காய்.
22. சொல்லாராய்ச்சியில்
பாவாணரும் வியந்த பெருமகனார்
யார் ?
அ) தேவநேயப்பாவாணர் ஆ) இளங்குமரனார்
இ) திரு .
வி. க ஈ)
கால்டுவெல்.
23. உலகிலேயே ஒரு மொழிக்காக
உலக மாநாடு நடத்திய
முதல் நாடு எது ?
மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும்
தமிழே என்று கூறியவர்
யார் ?
அ) மலேசியா , க . அப்பாத்துரையார்
ஆ) சிங்கப்பூர் , தேவநேயப்பாவாணர்
இ) இந்தியா , இளங்குமரனார்
ஈ) கனடா , கால்டுவெல்
.
24. பொருத்துக
.
அ) கவை -
1. அடிமரத்தினின்று பிரியும் மாபெரும்
கிளை
ஆ)
கொம்பு - 2. கிளையின்
பிரிவு
இ) சினை
- 3. கவையின்
பிரிவு
ஈ) போத்து
- 4.
சினையின் பிரிவு
அ) 1 , 2 , 3 , 4 ஆ) 3 , 4 , 2 , 1
இ) 4 , 3 , 1 , 2 ஈ) 1 , 3 , 2 , 4
25. இளங்குமரனார் யாரைப் போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டார் ?
அ
) பாரதியார் ஆ) பாவாணர் இ) திரு . வி. க ஈ) கால்டுவெல்.
26. “கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது” - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
அ ) பாடிய ; கேட்டவர் ஆ)
பாடல் ; பாடிய இ) கேட்டவர் ; பாடிய ஈ) பாடல் ; கேட்டவர்.
27. நட - இவ்வினையடியின் தொழிற்பெயர்
விகுதி அல்லாது வந்த
சொல்
அ ) நடை ஆ) நடத்தல்
இ) நடத்த ஈ) நடத்தை .
28. பின்வருவன்வற்றுள்
தொடர்மொழியை எழுதுக .
அ
) கண் ஆ) வேங்கை இ) ஆடு
மேய்ந்தது ஈ) வா.
29. சார்பெழுத்துக்கள்
................................................... வகைப்படும் .
அ
) 7 ஆ) 8 இ) 9 ஈ) 10 .
30. செய்யுளில்
ஓசை குறையாதவிடத்தும் இனிமையான
ஓசைக்காக வரும் அளபெடை
அ ) இன்னிசை அளபெடை
ஆ) சொல்லிசை
அளபெடை
இ) இசைநிறை அளபெடை
ஈ) ஒற்றளபெடை .
31. கெடுப்பதூஉம் , எடுப்பதூஉம் - இச்சொற்களில் இடம்பெற்றுள்ள அளபெடை
அ ) உயிரளபெடை ஆ) செய்யுளிசை அளபெடை இ) ஒற்றளபெடை
ஈ) இன்னிசை
அளபெடை .
32. வெஃகுவார்க்கில்லை , உரனசைஇ
- இச்சொற்களில் இடம்பெற்றுள்ள
அளபெடை
அ ) சொல்லிசை அளபெடை , ஒற்றளபெடை
ஆ) இன்னிசை
அளபெடை , ஒற்றளபெடை
இ) ஒற்றளபெடை , சொல்லிசை அளபெடை
ஈ) ஒற்றளபெடை
, இன்னிசை அளபெடை .
2
33. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது அ ) தொழிற்பெயர் ஆ) வினையாலணையும் பெயர்
இ) முதனிலைத் தொழிற்பெயர் ஈ) முதனிலைத் திரிந்த
தொழிற்பெயர்.
34. கேடு - என்ற சொல் எவ்வகைத் தொழிற்பெயர்
அ ) விகுதி பெற்ற தொழிற்பெயர்
ஆ) தொழிற்பெயர்
இ) முதனிலைத் தொழிற்பெயர்
ஈ) முதனிலைத்
திரிந்த தொழிற்பெயர் .
35. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது ................................................ எனப்படும் .
அ ) தொடர்மொழி ஆ) தனிமொழி
இ) பொதுமொழி ஈ) தொழிற்பெயர்.
36. பொருத்துக .
அ) கண்ணன்
- 1. பொதுமொழி
ஆ) மலர் வீட்டுக்குச்
சென்றாள் - 2. எதிர்மறைத் தொழிற்பெயர்
இ) வேங்கை - 3. தொடர்மொழி
ஈ) கொல்லாமை
- 4. தனிமொழி
அ) 1 , 2 , 3 , 4 ஆ) 3 , 4 , 2 , 1
இ) 4 , 3 , 1 , 2 ஈ) 2 , 4 , 3 , 1
37. பொதுமொழி
அல்லாதது எது ?
அ ) மண் ஆ) பலகை இ) எட்டு ஈ)
வேங்கை .
38. வந்தவர் , பொறுத்தார் என்பது எவ்வகைப் பெயர்கள் ?
அ ) தொழிற்பெயர்
ஆ) வினையாலணையும் பெயர்
இ) முதனிலைத் தொழிற்பெயர்
ஈ) முதனிலைத்
திரிந்த தொழிற்பெயர்.
39. Discussion - என்பதன் கலைச்சொல் தருக . அ ) கலந்துரையாடல் ஆ) உரையாடல்
இ)
ஒப்பெழுத்து
ஈ) ஒரு மொழி .
கீழ்க்காணும் பாடலைப்
படித்து வினாக்களுக்கு விடையளிக்க :
தென்னன் மகளே
! திருக்குறளின் மாண்புகழே !
இன்னறும்
பாப்பத்தே ! எண்தொகையே
! நற்கணக்கே !
மன்னும் சிலம்பே
! மணிமே
கலைவடிவே !
முன்னும்
நினைவால் முடிதாழ வாழ்த்துவமே !
40. இப்பாடல்
இடம்பெற்றுள்ள நூல்
அ ) கனிச்சாறு ஆ) கொய்யாக்கனி
இ) சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம் .
41. இப்பாடலின்
ஆசிரியர்
அ ) கம்பர் ஆ) இளங்கோவடிகள்
இ) கண்ணதாசன் ஈ) பெருஞ்சித்திரனார் .
42. இன்னறும் - இலக்கணக்குறிப்பு தருக . அ ) எண்ணும்மை ஆ) வினைமுற்று
இ) பெயரெச்சம்
ஈ) பண்புத்தொகை .
43. எண்தொகையே - பிரித்து எழுதுக . அ) எண் + தொகையே ஆ) எண்தொகை + யே
இ) எண்தொ + கையே ஈ) எட்டு + தொகையே
கீழ்க்காணும் பாடலைப்
படித்து வினாக்களுக்கு விடையளிக்க :
முத்தமிழ்
துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த
வணிகலமும் மேவலால் - நித்தம்
அணைகிடந்தே
சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்
தேதமிழ் ஈண்டு
3
44. இப்பாடல்
இடம்பெற்றுள்ள நூல்
அ ) நற்றிணை ஆ) முல்லைப்பாட்டு
இ) சிலப்பதிகாரம் ஈ) தனிப்பாடல்
திரட்டு.
45. இப்பாடலில்
இடம்பெற்றுள்ள பொருத்தமான அணி
அ
) இரட்டுறமொழிதல் அணி ஆ)
தீவக அணி இ)
வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ)
உவமை அணி .
46. தமிழுக்கு
இணையாய்ப் பாடலில் பொருத்தப்படுவது .
அ
) சங்கப்பலகை ஆ) கடல் இ) அணிகலன்
ஈ) புலவர்கள் .
47. தொழிற்பெயர் அல்லாத சொல் - . அ) துய்ப்பதால் ஆ) மேவலால்
இ) அணிகலன்
ஈ) கண்டதால்
உரைப்பத்தியை
படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையது என்பது , அதன் விளைபொருள் வகைகளை
நோக்கினாலே விளங்கும் . பிறநாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும்
சில்வகைப்
பட்டனவாகவுமிருக்க
, தமிழ்நாட்டிலுள்ளவையோ , பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும்
இருக்கின்றன. எடுத்துக்காட்டாக , கோதுமையை எடுத்துக்கொள்ளின் அதில் சம்பாக்கோதுமை ,
குண்டுக்கோதுமை ,
வாற்கோதுமை முதலிய சிலவகைகளேயுண்டு.
48.
தமிழ்நாட்டின்
பொருள் வளத்தை எவ்வாறு அறியலாம் ?
49.
கோதுமையின்
வகைகள் சிலவற்றை எழுதுக .
50.
இவ்வுரைப்பகுதிக்கு
பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
நன்றி
வினாத்தாள் தயாரிப்பு:-
திரு.சு.அழகுராஜ்,
தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
திருகண்ணபுரம்,
நாகப்பட்டிணம்.
பத்தாம் வகுப்பு
இயல் -10
ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 50 - மதிப்பெண் )
பயிற்சித்தாள் - புதிது
பதிவிறக்க சிறிது நேரத்திற்குப் பின் DOWNLOAD என்பதனை சொடுக்கி பதிவிறக்கம் செய்யலாம்.