ஒரு மதிப்பெண் வினாக்கள் |
9.ஆம் வகுப்பு-தமிழ் ஒருமதிப்பெண் வினாவிடைகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
1)”காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! –
எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!”........... இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்-
அ. முரண், எதுகை, இரட்டைத் தொடை ஆ.இயைபு, அளபெடை, செந்தொடை
இ. மோனை, எதுகை, இயைபு ஈ. மோனை, முரண், அந்தாதி
விடை:இ.
2) அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி - அடிக்கோடிட்ட சொற்களுக்கா ன இலக்கணக்குறிப்பு
அ.வேற்றுமைத்தொகை ஆ.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் இ.பண்புத்தொகை ஈ. வினைத்தொகை
விடை:ஆ
3) தமிழன்பனின் எந்த நூல் சாகித்திய அகாதமி விருது பெற்றது?
அ.தமிழோவியம் ஆ.தமிழன்பன் கவிதைகள் இ.வணக்கம் வள்ளுவ ஈ.மலரும் மலையும்
விடை: இ
4. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறியவர்/கூறியது
அ.பிங்கல நிகண்டு ஆ.கால்டுவெல் இ.குமரிலபட்டர் ஈ.பாரதிதாசன்
விடை: அ
5. உலகத் தாய்மொழி நாள் எது?
அ.பிப்ரவரி 19 ஆ.பிப்ரவரி 20 இ.பிப்ரவரி 21 ஈ.பிப்ரவரி 15
விடை: இ
6. தமிழ் வடமொழியின் மகளன்று என்று கூறியவர்
அ. முல்லரும் ஆ. வில்லியம் இ. கால்டுவெல் ஈ.வீரமாமுனிவர்
விடை: இ
7.“மிசை” – என்பத ன் எதிர்ச்சொல் என்ன ?
அ) கீழே ஆ) மேலே இ) இசை ஈ) வசை
விடை:அ
8. மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல் லின் பொருள் என்ன?
அ) மறுமை ஆ) பூவரசு மரம் இ) வளம் ஈ) பெரிய
விடை:இ
9. நிலம் குழித்த இடங்கள்தோறும் ______ பெருகச் செய்தல் வேண்டும்.
அ. மகிழ்ச்சி ஆ.நீர்நிலையை இ.மரங்களை
விடை:ஆ
10. யாக்கை என்பதன் பொருள்
அ.முயற்சி ஆ.உடம்பு இ. வாழ்க்கை
விடை: ஆ
11.முறையான தொடர் அமைப்பினை க் குறிப்பிடுக.
அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல் .
ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மை யான.
இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல் .
ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் .
விடை:ஈ
12. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொ டர்
அ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.
ஆ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கணநூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
ஈ) பட்டிமண்டப ம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்ப டுகிறது.
விடை:இ
13. ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொ ற்றொ டர்கள் உணர்த்தும் இலக்கணம்
அ) திசைச்சொற்கள் ஆ) வடசொற்கள் இ) உரிச்சொற்கள் ஈ) தொகைச்சொ ற்கள்
விடை:ஈ
14. தீரா இடும்பை தருவது எது?
அ. ஆராயாமை, ஐயப்படுதல் ஆ. குணம், குற்றம் இ. பெருமை, சிறுமை ஈ. நாடாமை, பேணாமை
விடை:அ
15. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?
அ)நுகர்தல் ஆ)தொடுஉணர்வு இ)கேட்டல் ஈ)காணல்
விடை:ஆ
16. பின்வரும் தொ டர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க .
அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன் எல்லாக் கோ ளிலும் ஏற்றப்படுவேன்
இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்
அ) இணையம் ஆ) தமிழ் இ) கணினி ஈ) ஏவுகணை
விடை:ஆ
17. விடை வரிசையைத் தேர்க .
1) இது செயற்கைக் கோள் ஏவு ஊர்தியின் செயல்பா ட்டை முன்கூட்டியே கணிக்கும்.
2) இது கடல்பயணத்துக்கா க உருவாக்கப்ப ட்ட செயலி.
அ) நேவிக், சித்தாரா ஆ)நேவிக், வானூர்தி இ)வானூர்தி, சித்தாரா ஈ) சித்தாரா, நேவிக்
விடை: அ
18.தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டது?
அ.5 ஆ.133 இ.3 ஈ.10
விடை:இ
19.PSLVஇன் விரிவாக்கம் யாது?
அ.pollution solar Light vehicle ஆ.polar satellite Launch
இ.polar star Launch vaccine ஈ.pollution sunlight vehicle
விடை: ஆ
20. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
அ) சிறுபஞ்சமூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
ஆ) இந்திய நூலகவியலின் தந் தையென அறியப்படுபவர் யார்?
இ) என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
ஈ) வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக
விடை: இ
21 . பூவாது காய்க்கும், மலர்க்கை - அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
அ) பெயரெச்சம், உவமைத்தொகை ஆ) எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
இ) வினையெச்சம், உவமை ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை
விடை:ஆ
22. மரவேர் என்பது ________ புணர்ச்சி
அ) இயல்பு ஆ) திரிதல் இ) தோன்றல் ஈ) கெடுதல்
விடை: ஈ
23.’அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ -யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?
அ)கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள் ஆ)தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
இ)ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள் ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
விடை: ஈ
24. ஐந்து சால் புகளில் இரண்டு
அ)வானமும் நாணமும் ஆ)நாணமும் இணக்கமும் இ)இணக்கமும் சுணக்கமும் ஈ)இணக்கமும் பிணக்கமும்
விடை:ஆ
25.இந்திய தேசிய இரா ணுவத்தை ...............இன் தலைமையில் .................. உருவாக்கினர்.
அ)சுபாஷ் சந்திரபோஸ், இந்தியர் ஆ) சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியர்
இ) மோகன்சிங், ஜப்பானியர் ஈ) மோகன்சிங், இந்தியர்
விடை:அ
26. சொல் லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ) வருக்கை - இருக்கை ஆ) புள் - தாவரம் இ)அள்ளல் – சேறு ஈ)மடிவு – தொடக்கம்
விடை:இ
27. இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக்குறிப்புத் தருக.
அ) உருவகத்தொடர், வினைத்தொகை ஆ) பண்புத்தொ கை, வினைத்தொகை
இ) வினைத்தொகை, பண்புத்தொகை ஈ) பண்புத்தொகை, உருவகத்தொடர்
விடை:ஆ
28. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?
அ. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
ஆ. வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
இ. செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்
ஈ. பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்
விடை:ஈ
29. கூற்று - இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், ”இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்றார்.காரணம்-இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.
அ)கூற்று சரி; காரணம் சரி ஆ) கூற்று சரி; காரணம் தவறு
இ) கூற்று தவறு; காரணம் சரி ஈ) கூற்று தவறு; காரணம் தவறு
விடை;அ
30.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. கூற்று - பெரியார் உயிர் எழுத்துகளில் ’ஐ’ என்பதனை ’அய்’ எனவும், ’ஒள’ என்பதனை ’அவ்’ எனவும் சீரமைத்தார். காரணம் – சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளி ன் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி
இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:ஆ
31. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - இக்குறளின் ஈற்றுச்சீரின் வாய்பாடு யாது?
அ) நாள் ஆ) மலர் இ)காசு ஈ)பிறப்பு
விடை:ஈ
32. முண்டி மோதும் துணிவே இன்பம் – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது
அ) மகிழ்ச்சி ஆ) வியப்பு இ) துணிவு ஈ)மருட்சி
விடை:இ
33. விடைக்கேற்ற வினாவைத் தேர்க . விடை – பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
அ)பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது? ஆ)பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
இ) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது? ஈ)பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
விடை:அ
34. ‘ஞானம்’ என்பதன் பொருள் யாது?
அ) தானம் ஆ) தெளிவு இ) சினம் ஈ) அறிவு
விடை:அறிவு
35.இரண்டாம் உலகப்போர் எந்த ஆண்டு நடைப்பெற்றது?
அ.1941 ஆ.1942 இ.1944 ஈ.1947
விடை: ஆ
36.டெல்லி சலோ என்ற முழக்கத்தை எழுப்பியவர்
அ.காந்திஜி ஆ.நேருஜி இ.நேதாஜி ஈ.இராஜாஜி
விடை:அ
37. இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படை யார் தலைமையில் உருவகியது?
அ.தில்லான் ஆ.நேதாஜி சுபாஜ் சந்திரபோஸ் இ.முத்துராமலிங்கனார் ஈ.மோகன்சிங்
விடை:ஈ
38. தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் யார்?
அ.தில்லான் ஆ.இராஜாமணி இ.பசும்பொன்முத்துராமலிங்கனர் ஈ.உ.வே.சா
விடை:இ
39. ஆக்கல் - இலக்கணக் குறிப்பு எழுதுக
அ. உரிச்சொல் தொடர் ஆ. உவமை உருபு இ. தொழிற் பெயர் ஈ. உம்மைத்தொகை
விடை: இ
40. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எது?
அ. தாவா ஆ. பூவாது இ. மூவாது ஈ. விதையாமை
விடை: அ