ஒன்பதாம்
வகுப்பு
மாதிரி
அரையாண்டு தேர்வு-2- 2025
மொழிப்பாடம் – தமிழ்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– I ( மதிப்பெண்கள் : 15 )
i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத்
தேர்ந்தெடுத்துக்
குறியீட்டுடன்
விடையினையும் சேர்த்து எழுதவும்.
அ) சரியான விடையைத் தேர்வு
செய்க. 15×1=15
1. தமிழ்விடுதூது ____ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை இ) சிற்றிலக்கியம்ஈ) தனிப்பாடல்
2. மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின்
பொருள் என்ன?
அ) மறுமை ஆ) பூவரசு மரம் இ) வளம் ஈ) பெரிய
3. திருக்குறள்
முதன் முதலில் முழுமையாக அச்சிடப்பட்ட ஆண்டு
அ)
1812. ஆ) 1912 இ) 1882 ஈ)
1872
4. தோரண வீதியும், தோமறு
கோட்டியும் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்.
அ) ஏவல் வினைமுற்று ஆ)
வினைத் தொகை
இ) எண்ணும்மை ஈ) பண்புத் தொகை
5.
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் காளைகள் மாடுகள் போற்றப்படுகின்றன.
– இது எவ்வகைத் தொடர்?
அ) வினாத்
தொடர் ஆ) கட்டளைத் தொடர் இ) செய்தித்
தொடர் ஈ) உணர்ச்சித் தொடர்
6. ’பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்’
நிலப் பகுதி ____
அ)
குறிஞ்சி ஆ) நெய்தல் இ) முல்லை ஈ) பாலை
7. சைவத் திருமுறைகள் மொத்தம் _____________
அ) கஉ ஆ) சஅ இ) உஎ ஈ) எ ரு
8. நட்புகாலம் என்ற நூலின் ஆசிரியர்______
அ) வைரமுத்து ஆ) அறிவுமதி இ) கல்யாண சுந்தரம் ஈ) மா.நன்னன்
9. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) அகழி ஆ) ஆறு இ) இலஞ்சி ஈ)
புலரி
10. இரு பெயரொட்டுப்
பண்புத்தொகையில் வல்லினம் மிகும் என்பதற்கான எடுத்துக்காட்டு
அ)
தனிச்சிறப்பு ஆ) தைத்திங்கள் இ) வடக்குப் பக்கம் ஈ) நிலாச் சோறு
11. சாரதா சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு__________
அ) 1928 ஆ) 1929 இ) 1930 ஈ) 1931
பாடலைப் படித்து
வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
“வானூர்தி செலுத்துதல் வைய
மாக்கடல் முழுது மளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே! இன்று
நானிலம் ஆட வர்கள்
ஆணையால் நலிவு அடைந்து
போனதால் பெண்களுக்கு
விடுதலை போனது அன்றோ!”
1) இப்பாடலை இயற்றியவர்
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) இளங்கோவடிகள் ஈ) தொல்காப்பியர்
2) இப்பாடலில் ‘ வையம் ‘ என்பதன் பொருள்.
அ) உலகம் ஆ)
கடல் இ) அன்னம் ஈ) மழை
3). பாடலில் இடம் பெற்றுள்ள தொகைச் சொல்லைத் தேர்க
அ) வானூர்தி ஆ) மாக்கடல் இ) நானிலம் ஈ) ஆடவர்கள்
4) மாக்கடல் – இலக்கணக் குறிப்புத்
தருக_____
அ) தொழிற்பெயர் ஆ) பண்புத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உரிச்சொல்தொடர்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
4×2=8
(21 ஆவது வினாவிற்கு
கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)
16. விடைக்கேற்ற
வினா அமைக்க.
அ. தோன்றல், திரிதல், கெடுதல் என
விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும்.
ஆ. உணவு தந்தவர் உயிரைத் தந்தவர்
ஆவர்.
17. நிலம் போல யாரிடம் பொறுமை காக்க
வேண்டும்?
18. ‘ கூவல் ‘ என அழைக்கப்படுவது எது?
20. கண்ணி என்பதன் விளக்கம் யாது?
21. தலை – என முடியும் குறளை
எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
5×2=10
22. இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச்
சான்றுடன் விளக்குக,
23. ‘ கொடு ‘ என்பது முதல் வினையாகவும்
துணை வினையாகவும் அமையுமாறு தொடர்கள் எழுதுக.
24. பகுபத
உறுப்பிலக்கணம் தருக : நிறுத்தல்
25. மரபு இணைச் சொற்களைத் தொடரில்
அமைத்து எழுதுக.
அ)
மேடும் பள்ளமும் ஆ) நகமும்
சதையும்
26. சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை
உருவாக்குக. ( மாணவர்கள், ஆசிரியர், பாட வேளை, கரும்பலகை, புத்தகம், எழுதுகோல் )
27. படிப்போம்;பயன்படுத்துவோம்!
அ) Cave temple ஆ) Hero stone
குறிப்பு :- செவி
மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
ஒரு
சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.
அ) எண்ணெய்
ஊற்றி_____விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு_________
ஆ) எழுத்தாணி கொண்டு_____ய தமிழை, ஏவுகணையில்
______ எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
28. மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க.
அ) ஆகாயத் தாமரை
ஆ) எடுப்பார் கைப்பிள்ளை
பகுதி – III ( மதிப்பெண்கள்
-18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. சோழர்காலக் குமிழித் தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
30. உரைப் பத்தியைப் படித்து
வினாக்களுக்கு விடை தருக.
அ. தமிழ் நூல் அதிகமுள்ள நூலகம் எது?
ஆ. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரிய நூலகம்
எது?
இ. தேசிய நூலகம் எந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது?
31. முழு உருவச்
சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
(
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)
32. வானவில்லை
ஒப்பிட்டு பெரிய புராணம் குறிப்பிடும் செய்தியை விளக்கி எழுதுக.
33. ‘ புதுக்கோலம்
புனைந்து தமிழ் வளர்ப்பாய் ‘ – உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.
34. அ) “ தித்திக்கும்
“ எனத் தொடங்கும் தமிழ் விடு தூது பாடலை எழுதுக. (அல்லது )
ஆ) “ கல்லிடை ” எனத் தொடங்கும் இராவண காவியம்
பாடலை எழுதுக.
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள்
எல்லாந் தலை – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
36. அளவையாகு
பெயர்களின் வகைகளை விளக்குக.
37.
தொடர் தரும் பொருளைக் கூறுக.
அ) சின்னக் கொடி, சின்ன கொடி
ஆ) நடுக்கல் , நடுகல்
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
5×5=25
38. அ) இராவண
காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க, ( அல்லது )
ஆ) பெரிய புராணம்
காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
39. அ) பள்ளி நேரம் முடிவதற்கு முன்பே வீட்டிற்கு
செல்ல வேண்டி, உன் வகுப்பாசிரியருக்கு அனுமதி கடிதம் எழுதுக ( அல்லது )
ஆ. உங்கள் பள்ளி
நூலகத்திற்கு தமிழ் – தமிழ் -ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப் படிகளைப் பதிவஞ்சலில்
அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.
40. அ) காட்சியைக்
கண்டு கவினுற எழுதுக
41. விளம்பரத்தைச் செய்தித்தாள்
செய்தியாக மாற்றி எழுதுக.
42. அ) நயம் பாராட்டுக.
(
கவிதையில் உள்ள திரண்ட கருத்து, பொருள் நயம், சொல் நயம், சந்த நயம், தொடை நயம்,
அணி நயம் ஆகியவை இடம் பெற வேண்டும் )
கல்லும்
மலையும் குதித்துவந்தேன் – பெருங்
காடும்
செடியும் கடந்துவந்தேன்;
எல்லை
விரிந்த சமவெளி – எங்கும்நான்
இறங்கித்
தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
ஏறாத
மேடுகள் ஏறிவந்தேன்-பல
ஏரி
குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத
ஊற்றிலும்
உட்புகுந்தேன்-மணல்
ஓடைகள்
பொங்கிட ஓடிவந்தேன். – கவிமணி ( அல்லது
)
ஆ) உங்களுடைய நாட்குறிப்பில் இடம்பெற்ற ஒரு வாரத்திற்குரிய மகிழ்ச்சியான
செய்திகளைத் தொகுத்து அட்டவணைப்படுத்துக.
குறிப்பு : செவிமாற்றுத்
திறனாளர்களுக்கான மாற்று வினா
பிழை நீக்கி
எழுதுக.
1. சர்
ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
2. மதியழகன்
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.
3. மழையே
பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.
4. நீலனும்
மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
5. சூறாவளியின்
போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்
பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
3×8=24
43.அ)
நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க (அல்லது)
ஆ) வேளாண்மை,
நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக.
44.அ) ‘ தாய்மைக்கு வறட்சி இல்லை’ என்னும்
சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திர படைப்பை விளக்குக. (அல்லது)
ஆ) நூலகம், நூல்கள் ஆகியன
குறித்து அண்ணவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?
45.அ) குறிப்புகளைக் கொண்டு ‘ சிற்பக்கலை ‘ என்னும் தலைப்பில்
கட்டுரை எழுதுக.
முன்னுரை
– முழு உருவச் சிற்பம் – புடைப்புச் சிற்பம் – பல்லவர் காலச் சிற்பங்கள் – பாதுகாப்பும்
பராமரிப்பும் - முடிவுரை (அல்லது)
ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி, தலைப்புத் தருக.
முன்னுரை – காற்று மாசுபாடு – ஏற்படும் நோய்கள் – பாதுகாப்பு நடவடிக்கைகள் – விழிப்புணர்வு–
நமது கடமை - முடிவுரை
....கல்விவிதைகள்- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் -மாதிரி அரையாண்டுத் தேர்வு-2 -2025... ....
