பத்தாம்
வகுப்பு
தமிழ்
அரையாண்டுத்
தேர்வு – 2025
முக்கிய
வினாக்கள்
பகுதி – 2 – பிரிவு – 1 செய்யுள் மற்றும் உரைநடை குறு வினாக்கள்
1. மன்னும் சிலம்பே!மணிமே
கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
– இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள
காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
2. “ கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை
உடம்பு தொடாது – பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக
3. சொல்வளத்தை உணர்த்த உதவும்
நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் – இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான
இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
5.மென்மையான மேகங்கள்,
துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
6.தமிழர்கள், வீசுகின்ற திசையைக்
கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
7. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன்
சொற்களை எழுதுக
8. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள்
சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
9. “ நச்சப் படாதவன்” செல்வம் – இத்தொடரில்
தடித்த சொல்லுக்குப் பொருள் தருக.
10. இவ்வுலகம்
நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக
11) செல்வம் பெருகுவதும்
வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?
12.மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
13. சரயு ஆறு பாயும்
இடங்களைப் பட்டியலிடுக.
14. கரப்பிடும்பை இல்லார் – இத்தொடரின் பொருள் கூறுக
15. வறுமையின்
காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து
என்ன?
16. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர்
– சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
17.அள்ளல் பழனத்து அரக்காம்பல்
வாயவிழ – இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும்
சொற்கள் யாவை?
18. வறுமையிலும் படிப்பின்
மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
19. குறிப்பு வரைக:- அவையம்
20.“காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக்
காய்ந்தேன் “ – உவமை உணர்த்தும் கருத்து யாது?
21.சங்க காலத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?
22.பழங்களை விடவும் நசுங்கிப் போனதாக கல்யாண்ஜி எதைக் குறிப்பிடுகிறார்?
பகுதி -2
- பிரிவு – 2 – இலக்கணம் மற்றும் மொழித்திறன்
1. பலகை
- என்பதைத் தொடர்மொழியாகவும்
பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
2. “எழுது என்றாள் “ என்பது விரைவு காரணமாக “
எழுது எழுது என்றாள் “ என அடுக்குத் தொடரானது.”சிரித்துப் பேசினார்” என்பது
எவ்வாறு அடுக்குத் தொடராகும்?
3. கட்டுரை படித்த – இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப்
பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக
4. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக்
கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.
5. தண்ணீர் குடி,தயிர்க்குடம்
ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.
6. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம்
தருக
7. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை
மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால
வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
9. அயற்கூற்றாக எழுதுக.
“ கலைஞர் பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக்
கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்” – பேராசிரியர் அன்பழகனார்.
10. உறங்குகின்ற கும்பகன்ன’ எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘ கும்பகன்னனை
என்ன சொல்லி
எழுப்புகிறார்கள்?
எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
11. கீழ்வரும் தொடர்களில்
பொருந்தாத முதல், கருபொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள்
மலையில் உழுதனர்
முல்லைப்
பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
12. தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும்
வாய்பாடுகளையும் எழுதுக.
13. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
14. பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.
15. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்தில்
பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக்
காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி
விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். –ம.பொ.சி
16. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
