மூன்றாம் திருப்புதல் மாதிரி வினாத்தாள்
2021-2022
பத்தாம் வகுப்பு
மொழிப்பாடம் – தமிழ்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2)
நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்பு
: I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15
)
i)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii)
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து
எழுதவும்.
15×1=15
1.திருநெல்வேலி
ஊர்பெயரின் மரூஉ_________________
அ) நெய்வேலி ஆ)
நெல்லை இ) வேலூர் ஈ)
திருநெல்லை
2. போதி
தர்மர் உருவாக்கிய தத்துவம் ______________
அ) சமணம் ஆ)
கிரேக்கம் இ) புத்தம் ஈ) ஜென்
3.’ மாலவன்
குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும், வேலவன்
குன்றமும் குறிப்பவை முறையே
அ) திருத்தணியும்,திருப்பதியும் ஆ) திருப்பரங்குன்றமும் பழனியும்
இ) திருப்பதியும்
திருத்தணியும் ஈ) திருப்பதியும் திருச்செந்தூரும்
4. கருணையன்
என்பவர் _____________
அ) வீரமாமுனிவர் ஆ) யோசேப்பு இ) அருளப்பன் ஈ)
சாந்தா சாகிப்
5. ‘ எய்துவர்
எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம்
தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா
நாள் இ) தேமா புளிமா காசு
ஈ) புளிமா
தேமா பிறப்பு
6. மேன்மை
தரும் அறம் என்பது ___________
அ) கைம்மாறு
கருதாமல் அறம் செய்வது ஆ) மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில்
அறம் செய்வது
இ) புகழ்
கருதி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
7. சிலப்பதிகாரத்திலும்
மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
அ) அகவற்பா ஆ) வெண்பா இ)
வஞ்சிப்பா ஈ) கலிப்பா
8. கலையின்
கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின் இக்க்கூற்றிலிருந்து
நாம் புரிந்துக் கொள்வது_____________
அ) தம்
வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ) சமூகப்
பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
இ) அறத்தைக்
கூறுவதற்காக எழுதினார்
ஈ) அழகியலுடன்
இலக்கியம் படைத்தார்.
9. கண்ணன்
கோபத்தை தள்ளி வைத்து பிரச்சனையினை தீர்க்க வேண்டும்- இத்தொடருக்கான மரபுத் தொடர் எது?
அ) மனக்கோட்டை ஆ) அள்ளி இறைத்தல் இ) கண்ணும் கருத்தும் ஈ)
ஆறப்போடுதல்
10. இஸ்மத்
– சன்னியாசி என்பதன் பொருள் ___________
அ) முற்றும்
துறந்தவர் ஆ) தூய துறவி இ) ஆசை அதிகம் கொண்டவர் ஈ)
கற்றவர்
11. இயல்பாய்
நிகழும் நிகழ்வின் மீது கவிஞர் தம் கற்பனையை ஏற்றிக் கூறும் அணி ________
அ) தீவக அணி ஆ) நிரல் நிறை அணி 2இ) தற்குறிப்பேற்ற அணி ஈ) தன்மை அணி
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
வாய்மணி
யாகக் கூறும் வாய்மையே மழைநீ ராகித்
தாய்மணி
யாக மார்பில் தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்
தூய்மணி
யாகத் தூவும் துளியிலது இளங்கூழ் வாடிக்
காய்மணி
யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ.
12)இப்பாடல் இடம்பெற்ற
நூல் யாது?
அ. இயேசு காவியம் ஆ.
கம்பராமாயணம் இ. தேம்பாவணி ஈ. நீதி வெண்பா
13) இப்பாடலை இயற்றியவர் யார்?
அ. குலசேகர ஆழ்வார் ஆ. இளங்கோவடிகள் இ. வீரமாமுனிவர் ஈ. கம்பர்
14) காய்மணி- என்பதன் இலக்கணக்குறிப்பு
அ.பண்புத்தொகை ஆ.வினைத்தொகை இ.இரண்டாம் வேற்றுமைத்தொகை ஈ)உவமைத்தொகை
15) தயங்கி என்ற சொல்லின் பொருள்
அ. மெதுவாக ஆ.வருந்தி
இ.களைத்து ஈ.அசைந்து
பகுதி
– II ( மதிப்பெண்கள் : 18 )
பிரிவு
– 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
16. ‘ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் ‘ –
உவமை உணர்த்தும் கருத்து யாது?.
17. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதே சுதந்திர
இந்தியாவின் மகத்தான சாதனையும்,சவாலும் என
ஜெயகாந்தன் கருதினார்.
ஆ. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில்
1906ஆம் ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டாக
கருதப்படுகிறது.
18. மெய்க்கீர்த்தி
பாடுவதன் நோக்கம் யாது?
19. எதற்காக
எழுதுகிறேன்? என்று ஜெயகாந்தன் கூறிய காரணம் ஒன்றினைக் குறிப்பிடுக.
20. பாசவர்,வாசவர்,பல்நிண
விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
21. ‘ மாற்றம்
‘ – எனத் தொடங்கி ‘ சாலை ‘ என முடியும் காலக்கணித பாடலை எழுதுக.
பிரிவு
– 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக:-
அ. மனக்கோட்டை ஆ. ஆறப்போடுதல்.
23. பொருத்தமான நிறுத்தற்க் குறியிடுக:-
சேர்ரகளின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை
குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை
வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில்
சான்றுகள் உள்ளன
24. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.
25. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- அறியேன்
26. பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.
“ தம்பீ?
எங்க நிக்கிறே?”
“ நீங்க
சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது”.
“ அங்ஙனக்குள்ளே
டீ சாப்ட்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு..நா வெரசா வந்துருவேன்”.
27. கலைச்சொல் தருக:-
அ. Patent ஆ)
Renaissance
28. பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதனை நிலைநாட்ட,
போரிடும் திணைக் குறித்து எழுதுக.
பகுதி
– III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு
– I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. ஜெயகாந்தன்
தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோக
மித்திரன்
கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் “ தர்க்கத்திற்கு அப்பால் “ கதை
மாந்தர்
வாயிலாக விளக்குக
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;
தமிழர்,போரிலும்
அறநெறிகளை பின்பற்றினர்.போர் அறம் என்பது வீரமற்றோர்,புற முதுகிட்டோர், சிறார், முதியோர்
ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு,
பார்ப்பனர், பெண்கள், நோயாளர்,புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர்
புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது
கூடாது என்பதனை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.
அ) போர் அறம் என்பது எவற்றைக் குறிக்கிறது?
ஆ) ஆவூர் மூலங்கிழார் போர் அறம் குறித்துக்
குறிப்பிடுவது யாது?
இ) போரில் யாருக்கெல்லாம் தீங்கு வராமல்
போர் புரிய வேண்டும் என்று இலக்கியங்கள்
குறிப்பிடுகின்றன?
31.” தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
பிரிவு
– II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32. பகர்வனர்
திரிதிரு நகரவீதியும்;
பட்டினும்
மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக்
காருகர் இருக்கையும்;
தூசும்
துகிரும் ஆரமும் அகிலும்
அ) இப்பாடல்
இடம் பெற்ற நூல் எது?
ஆ) பட்டினும்
மயிரினும் என்பதன் இலக்கண குறிப்பு தருக.
இ) காருகர் – பொருள்
தருக.
33. “ கவிஞன் யானோர் காலக் கணிதம்” – எனத் தொடங்கும் கவிஞர் கண்ணதாசனின் கவிதையில் உங்களை கவர்ந்த மூன்று தொடர்களை
எழுதி காரணத்தைக் குறிப்பிடுக.
34. “ நவமணி வடக்க “ எனத் தொடங்கும் தேம்பாவணி பாடலை எழுதுக
(அல்லது
)
“ தூசும்
துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.
பிரிவு
-III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. தீவக அணியை விளக்கி,மூவகை தீவக அணிகளையும் குறிப்பிடுக.
36. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட
தமைச்சு – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.
37. அவந்தி
நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற
நினைக்கிறான்;
அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும்
இலக்கணத்தின் வழி விளக்குக.
பகுதி
-IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
5×5=25
38. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதீகளை இக்கால வணிக
வளாகங்களோடும்
அங்காடிகளோடும்
ஒப்பிட்டு எழுதுக.
( அல்லது
)
ஆ) கருணையனின்
தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக
மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
39. அ) பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை
உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப்
பெற்றதையும்
பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
( அல்லது
)
ஆ) உங்கள் தெருவில் மின் விளக்குகள்
பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து
செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன
செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம்
எழுதுக.
40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
41. சேலம் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க
எண்50 இல் வசிக்கும் மதியழகன் மகள் தமிழினியாள்
அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று தற்போது அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பாடப்பிரிவில்
தமிழ் வழியில் சேரவிருக்கிறார். அவரின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர் தம்மை தமிழினியாளாக
நினைத்து உரியப் படிவத்தை நிரப்புக..
பெயர் |
தமிழினியாள் |
தேர்வெண் |
15016032 |
தமிழ் |
92 |
ஆங்கிலம் |
89 |
கணிதம் |
100 |
அறிவியல் |
75 |
சமூக அறிவியல் |
88 |
42. அ) மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும்,அதனால்
ஏற்படும் நன்மைகளும்
பட்டியலிடுக
( அல்லது
)
ஆ) பள்ளி வளாகத்தில்
நடைபெற்ற ‘ மரம் நடு விழாவுக்கு ‘ வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும்
பெற்றோருக்கும்
பள்ளியின் ‘ பசுமைப் பாதுகாப்புப் படை ‘ சார்பாக நன்றியுரை எழுதுக.
பகுதி
– v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக
விடையளிக்க. 3×8=24
43. அ) நாட்டு விழாக்கள் –
விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில்
மாணவர் பங்கு.
குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘ மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்’ என்ற
தலைப்பில்
மேடை உரை எழுதுக.
( அல்லது )
ஆ) சங்க இலக்கியங்களில் காணப்படும் ஐந்து அறக்கருத்துகளைத்
தொகுத்து, அவை இன்றும் தேவையே
என்பதனை நிறுவுக.
44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும்
அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘
கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
( அல்லது )
ஆ) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம்
எழுதுக.
மாணவன் – கொக்கைப் போல,கோழியைப் போல-உப்பைப் போல – இருக்க வேண்டும்.
கொக்கு
காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் –
குப்பையைக் கிளறினாலும் தனது
உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்,
உப்பின்
சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் – மகிழ்ச்சி.
45. அ) குறிப்புகளைக் கொண்டு
கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.
குறிப்புகள்
: உழவே தமிழர் பண்பாட்டின் மகுடம் – உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் –
சுழன்றும் ஏர் பின்னது உலகம்.
( அல்லது )
ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு
ஒன்று தருக.
குறிப்புகள் : தமிழகம் தந்த தவப் புதல்வர் – நாட்டுப் பற்று – மொழிப் பற்று – பொது வாழ்வில் தூய்மை- எளிமை – மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை
வினாத்தாள் வடிவமைப்பு.
Hii sir
ReplyDeleteAnswer. Key post pannuga sir