ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்
இயல் - 8
நெடுவினா - விடைகள்
மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக.
மொழி குறித்த பெரியாரின் சிந்தனை:
மிகப் பழமையான நமது தாய்மொழியில், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் படைக்கப்படல் வேண்டும். மொழியோ,நூலோ,இலக்கியமோ மனிதனுக்கு மானம்,பகுத்தறிவு,வளர்ச்சி,நற்பண்பு ஆகிய தன்மைகளை உருவாக்க வேண்டும் என சிந்தித்தார்.
மொழி கற்க எளிதாக அமைதல் :
இலக்கியங்கள் மூலம் தான் மேன்மை அடைய முடியும். மக்களும் அறிவுடையவர்களாக மாற முடியும்.மொழியானது எளிதாக கற்கும் வகையில் அமையும் போது பல நூல்களை பயில முடியும். அதன் மூலம் அறிவார்ந்த சமுதாயம் வளரும்.
தமிழ்மொழிச் சீர்திருத்தம்:
உயிர் எழுத்துகளில் “ ஐ “ என்பதனை “ அய் “ எனவும்,’ ஒள’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார். உயிர் எழுத்துகளின் முரண்பாட்டு வரிவடிவங்களையும் மாற்றியமைத்தார். இம்மாற்றத்தை 1978 ஆம் ஆண்டு தமிழக அரசும் ஏற்று நடைமுறைப்படுத்தியது.