ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்
இயல் - 7
நெடுவினா - விடைகள்
1. இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாக திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரைவழி நிறுவுக.
இந்திய தேசிய இராணுவம்:
1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. ஆங்கிலப் படை வீரர்கள் ஜப்பானிடம் சரணடைந்தது.சரணடைந்த இந்திய வீரர்களைக் கொண்டு இந்திய தேசிய இராணுவம் என்ற படை உருவாக்கப்பட்டது.
இராணுவத்தில் தமிழர்கள் :
தமிழகத்திலிருந்து பிழைப்பிற்காக மலேயா,பர்மா,சிங்கப்பூர் சென்ற பல தமிழர், இராணுவத்தில் சேர்ந்தனர். இராணுவத்தில் ஒற்றர் படையில் இருந்த தமிழர்களை, நீர் மூழ்கி கப்பலிலும்,தரை வழியாகப் பர்மாக் காடுகள் வழியாகவும் இந்தியாவுக்கு அனுப்பினர்.
தூண்களாக திகழ்ந்தவர்கள்:
1943 ஆம் ஆண்டு சூலை 19 ஆம் நாள் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்றார். மாபெருங் கூட்டத்தில், “ டெல்லி நோக்கிச் செல்லுங்கள் “ எனப் போர் முழக்கம் செய்தார்.
தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமை பசும்பொன் முத்துராமலிங்கனாரைச் சாரும். தலைவராக இருந்த தில்லான் “ இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும்,ஆத்மாவும் தமிழர்கள் தாம் “ என்றார்.
இராணுவத்தில் பெண்கள் படை:
ஜான்சி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் இலட்சுமி,சிதம்பரம் லோகநாதன் முதலான தமிழர்கள்,அமைச்சர்களாக இருந்தனர்.
இரண்டாம் உலகப் போர் ;
இந்திய தேசிய இராணுவம் ஆங்கிலேயரோடு போரிட பர்மா வழியாக இந்தியா வரத் திட்டமிடப்பட்டது. ஆங்கிலேயப் பிரதமர் சர்ச்சில் கோபமாக, “ தமிழர்களின் இரத்தம் நேதாஜி மூளையில் கட்டியாக உள்ளது “ என்றார். அதற்கு நேதாஜி, “ இந்த தமிழினம் தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் “ என்று கூறினார்.
2. ஏமாங்கத நாட்டின் வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.
ஏமாங்கத நாடு
நமது ஊர்
தென்னையில் முற்றிய தேங்காய் விழுந்த வேகத்தில் தேனடை கிழிந்து தேன் சிந்தி, பலாமரத்தின் மீது விழுந்து பலாப்பழம் பிளந்தது,அருகில் இருந்த மாமரத்தில் விழுந்ததால் மாங்கனி சிதறியது, பின் வாழை மரத்தின் மீது விழுந்து வாழைப் பழங்கள் உதிர்ந்தது.
சோலைகள் எல்லாம் பாலைகளாகக் காட்சி அளிக்கின்றன. தென்னை மரங்கள் போதிய நீர்வளம் இல்லாமையால்,மெலிந்த மட்டைகளும், ஓலைகளும் கொண்டு காட்சியளிக்கின்றன.
மலையிலிருந்து வரும் வெள்ளம் நாட்டினுள் பாய்கிறது.
மழைக்காலத்தில் தோன்றும் புது வெள்ளம் ஊர்களில் பாய்கிறது.
நீர் வளம் நிறைந்துள்ளமையால் கழனிகள் சேறும் சகதியுமாக உள்ளன.
நிலத்தடி நீர் மற்றும் மழை நீர் நம்பி வயல்கள் உள்ளன.
வயல்களில் விளைச்சல் நன்றாக விளைந்து தலை சாய்ந்து இருக்கும்.
ஒரு பருவம் நன்றாக விளைந்தும்,அடுத்த பருவம் பயிர்கள் எல்லாம் காய்ந்து போவதைக் காணலாம்.
ஆயிரங்கணக்கான உணவு வகைகள், அறச்சாலைகள்,ஒப்பனை மண்டபங்கள்,திருமணக் கூடங்கள் இருக்கின்றன. அங்கு இல்லாததது எதுவும் இல்லை.ஆயிரங்கணக்கான நிகழ்வுகள் நிகழ்கின்றன.
ஊர் திருவிழா, திருமணம், தேர்தல் நேரங்களில் மட்டும் ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக நிகழ்வுகள் நிகழ்கின்றன,