9TH -TAMIL - UNIT 9 - 8 MARK QUESTION AND ANSWER

 

 ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்

இயல் - 9

நெடுவினா - விடைகள்

 “ தாய்மைக்கு வறட்சி இல்லை “ என்னும் சிறுகதையில் வரும் ஏழைத் தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.

குடும்பம்:

               கர்நாடக மாநிலம் குல்பர்கா நகர்த் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் குடிசை ஒன்று இருந்தது.அந்த குடிசை முன் குடும்பமே சுருண்டு கிடந்தது.அந்த குடிசையில் தோட்டக்காரனும் அவன் மனைவியும்,இரண்டு குழந்தைகளும் வாழ்ந்து வந்தனர்.

ஜீப்பில் வந்த அதிகாரி:

               குடிசை முன் ஜீப் ஒன்று வந்து நின்றது. ஜீப்பில் நாற்பத்தி ஐந்து வயதுடைய அதிகாரி இறங்கி வந்தார். அதிகாரியைப் பார்த்தவுடன் படுத்துக் கிடந்தவனுக்கும் பயன் படித்தது.

தோட்டக்காரனும்,தட்டுப் பிரியாணியும் :

               அதிகாரி பாதிப் பிரியாணி தட்டை அவனிடம் நீட்டினார்.அவனும் தயங்கி நின்ற போது தோளில் தட்டிக் கொடுத்து வீட்டை நோக்கித் தள்ளினார். மனைவியைப் பார்த்து பயத்தோடு நடந்தான்.

பிள்ளையும், தாயும்:

               வறுமையிலும் மானம் பெரிது என்பதனை அவள் கண்களால் உணர்த்தினாள். குழந்தைகளுக்கும் பசி,அவளுக்கும் பசி, நாய்களுக்கும் பசி. அதேசமயம் கொண்டு வந்த சப்பாத்தி மற்றும் பிரியாணியுடன் வைத்தாள் .காணாதைக் கண்ட மகிழ்ச்சியில் அமைவரும் சுவைத்தார்கள்.

அதிகாரியின் அன்பு :

               “உன்னை மாதிரியே கஷ்டப்பட்ட தாய்க்குதான் நான் பிறந்தேன். உன்னை தாயாக நினைத்து கொடுக்கிறேன் “என்றார் அதிகாரி. அவளுக்கு தமிழ் தெரியவில்லை. இருப்பினும் ஆன்மா தெரிந்தது, மனிதம் புரிந்தது.

உண்மைத் தாயுள்ளம் :

               நாய்க் குட்டிகள் இரண்டும் பசியால் ஓல ஒலியிட்டு அதிகாரியின் கால்களை சுற்றி,சுற்றி வந்தது. அவள் தட்டை கீழே வைத்து நாய்க் குட்டிகளை வாரி எடுத்து, முதுகில் தடவிக் கொடுத்தாள்,பின் தனக்கு கிடைத்த உணவை சிறு சிறு கவளமாக நாய்க்குட்டிகளுக்கு ஊட்டி விட்டாள். தட்டில் உணவு குறைய குறைய அவளின் தாய்மைக் கூடிக் கொண்டே வந்தது.

ALL UNIT 8 MARKS QUESTIONS AND ANSWER

PDF - WILL BE SOON 

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post