9TH -TAMIL - UNIT 5 - 8 MARK QUESTION AND ANSWER

   

 ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்

இயல் - 5

நெடுவினா - விடைகள்

1. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க:-

ü  மூவலூர் இராமாமிர்தம்

o   தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி

o   எழுத்தாளர்

o   திராவிட இயக்க செயல்பாட்டாளர்

o   தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்

o   தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு இவர் பெயரால் திருமண உதவித் தொகை வழங்கி வருகிறது.

ü  முத்து லட்சுமி :

o   தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

o   இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்

o   சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்

o   சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மணி

o   அடையாற்றில் அவ்வை இல்லம், புற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

ü  நீலாம்பிகை அம்மையார்

o   மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை அம்மையார்

o   தந்தையைப் போல தனித்தமிழ் பற்று உடையவர்.

o   தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை, முப்பெண்மணிகள் வரலாறு ஆகியன் இவர் எழுதிய நூல்கள்

2. குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிடுக.

·                       சங்க காலத்தில் பெண்கள் கல்வி கற்று தமிழநாடு சிறந்து விளங்கியது.

·        இடைப்பட்ட காலத்தில் பெண்கல்வி மறுக்கப்பட்து.

·        சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது என கருதினர்

·        அறிவுடைய மக்கள் உருவாக வேண்டுமெனில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என பாரதிதாசன் பாடியுள்ளார்.

·        பெண்கள் உணவு சமைப்பதோடு அல்லாமல் இன்பம் படைக்கிறார். இன்று பெண்களுக்கு சமையலில் உதவ ஆண்களும் துணை செய்கிறார்கள்.

·        இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் பட்டம் பெற்று வருகிறார்கள்.

·        கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள், முத்து லெட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே

·        இன்றைய பெண்கள் அடுத்த தலைமுறைக்கும் அறிவைக் கொண்டு செல்கின்ற பெரும் பணியைச் செய்கிறார்கள்.

3. நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?

·        உலகமெங்கும் வாழும் மக்களுக்குப் பட்டறிவை நூலகம் தருகிறது. எழுத்தறிவு பெற்றோர் மிகுந்துள்ள நிலையில் மனவளம் பெருக வேண்டும்.

·        வீட்டு நிலை மாற, வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்.

·        வீடுகளில் நற்பண்புகள் காண வேண்டுமெனில் வெள்ளி, பித்தளை, உடைகள், மருந்துகள், அணிகலன் போன்றவை இருப்பது போன்று புத்தகங்களும் இருக்க வேண்டும்.

·        உணவு,உடை,அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானதும் முதலிடம் புத்தகசாலைக்குத் தர வேண்டும்.

·        இதயத்தைப் பண்படுத்துவன புத்தகங்களே, மக்களின் மனவளத்தை அதிகப்படுத்துவன நூல்களே

·        சுப நிகவுகளில் புத்தகங்களை பரிசாக வழங்க முன் வர வேண்டும்.

·        உலக அறிவைத் தரக் கூடிய நூல்களும், வீட்டிற்கோர் திருக்குறளும் கட்டாயம் இருத்தல் வேண்டும்.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post