9TH - TAMIL - UNIT -3 - 8MARK QUESTION AND ANSWER

  

 ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்

இயல் - 3

நெடுவினா - விடைகள்

1. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதன் காரணங்களை விவரிக்க:-

ü  ஸ்பெயின் காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாக கொண்டுள்ளது.

ü  காளை கொன்று அடக்குபவனே வீரன்

ü  வென்றாலும் தோற்றாலும் போட்டியின் முடிவில் காளையை சில நாடுகளில் கொல்வதும் உண்டு.

ü  இவை வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

ü  ஆனால், தமிழகத்தில் ஏறு தழுவுதலில் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது.

ü  நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர்.

ü  எவரும் அடக்க முடியாத காளைகள் கூட, வெற்றி பெற்றதாக அறிவிப்பர்.

அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில், காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்

2 . பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப்பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக:-

ü  ஏறு தழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாடுக் குறியீடு ஆகும்.

ü  நம் முன்னோர்களின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் ஏறுதழுவுதல் நிகழ்வைக் காணவும், ஏறுகளைப் பேணவும் நாம் உறுதி கொள்ள வேண்டும்.

ü  மாட்டுப் பொங்கல் விழாவைப் பெரிய நிகழ்வாக் கொண்டாட வேண்டும்

ü  நமது கலை,பண்பாட்டு நிகழ்வுகளை ஆண்டு தோறும் விழாவாகக் கொண்டாட வேண்டும்.

ü  குழந்தைகளுக்கு நமது பண்பாடுகளையும், வீர விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post