ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்
இயல் - 2
நெடுவினா - விடைகள்
1. பெரிய புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
ü காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.
ü நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.
ü காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.
ü வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.
ü சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.
ü பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.
ü வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.
ü கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.
ü குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.
ü அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.
ü செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.
தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளன.