9TH - TAMIL - UNIT -1 - 8 MARK QUESTIONS AND ANSWER

 ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்

இயல் - 1

நெடுவினா - விடைகள்

1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்த்துணையாக இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.?

ü  திராவிட மொழிகளின் ஒப்பியக் ஆய்விற்குத் தமிழே ப்ருந்துணையாக இருக்கிறது.

ü  தமிழ் என்ற சொல்லிருந்து திராவிடா என்ற சொல் பிறந்தது என்கிறார் ஹீராஸ் பாதிரியார்.

ü  தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என்று  விளக்குகிறார் ஹீராஸ் பாதிரியார்.

ü  பிரான்சிஸ் எல்லீஸ் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகியன ஒரே இனம்.

ü  ஹோக்கன் ,மாக்க்சுமுல்லர் ஆகியோர் திராவிட மொழிகள் ஆரிய  மொழிகளிலிருந்து வேறுபட்டன என்றனர்.

ü  கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டன என்றார். சமஸ்கிருத்திற்குள்ளும் திராவிட மொழிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளது என்றார்.  

2. தூது அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

ü  அமிழ்தினும் மேலான முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு  மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்.

ü  புலவர்கள் குறம்,பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு.

ü  தமிழே ! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.

ü  தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள்  கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.

ü  மற்றையோர்க்கு அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய்.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post