மாதம்
: மார்ச் தேர்வு
: மாதத்தேர்வு
வகுப்பு
: 10 இயல்
: 04,05,06
பாடம்
: தமிழ் மொத்த
மதிப்பெண் : 50
I.
பலவுள் தெரிக:- 5× 1= 5
1. இரவு 2 மணி
முதல் காலை 6 மணி வரைக்குமான சிறுபொழுது_______________
அ)
எற்பாடு ஆ)
நண்பகல் இ)
வைகறை ஈ)
யாமம்
2 ) கா.ப.செய்கு தம்பி பாவலர் சதாவதானி பட்டம் பெற்ற ஆண்டு ________
அ ) 1907 ஆ) 1908 இ) 1909 ஈ ) 1910
3.திருவழுந்துர்
என்பது எந்த நாட்டின் பகுதியாக இருந்தது?
அ)
சோழ நாடு ஆ)
சேர நாடு இ)
பாண்டிய நாடு ஈ)
பல்லவ நாடு
4 ) இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது –
இக்குறளில் பயின்று வரும் அணி எது?
அ ) உவமை அணி ஆ ) எடுத்துக்காட்டு உவமை அணி
இ ) இல்பொருள் உவமை அணி ஈ ) சொற்பொருள்
பின் வரு நிலையணி
5)“ நீ விளையாடவில்லையா?” என்ற வினாவிற்கு “ கால் வலிக்கிறது “ எனக்
கூறுவது _______ விடை
அ ) உறுவது கூறல் ஆ ) உற்றது உரைத்தல்
இ ) இனமொழி ஈ ) ஏவல்
II).
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 5×
2= 10
1.
கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?
2. விடைக்கேற்ற வினாக்கள் அமைக்க.
அ ) தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்
என்கிறது திருக்குறள்.
ஆ ) பெருமாள் திருமொழி நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம்
திருமொழியாக உள்ளது.
3.
கொண்டுகூட்டுப் பொருள்கோளை உதாரணத்துடன்
விளக்குக.
4. ஒருவருக்கு
வறுமையைப் போன்ற துன்பத்தை தருவது வறுமையே என்ற கருத்தினை வலியுறுத்தும் குறட்பாவை
அடிமாறாமல் எழுதுக.
5. கலைச்சொல்
அறிவோம் - அ ) SPACE
TECHNOLOGY ஆ ) MYTH -
III)
. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 5×
3= 15
1.
திணைகளுக்கான பொழுதுகளை அட்டவணைப்படுத்துக
2.வள்ளுவம்,
சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக
3.
சரயு ஆறு எவ்வாறு பாய்வதாக கம்பர் விவரிக்கிறார்?
4.
கா.ப. செய்கு தம்பி பாவலர் குறித்தும், அவர் “ சதாவதானி “ பட்டம் பெற்ற நிகழ்வு குறித்தும்
எழுதுக.
5.
“அருளைப் பெருக்கி “ எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
V)
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 5×
5= 25
1.
உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.
2.
ஈரோடு மாவட்த்தில் பாரதி நகர், காந்தி தெரு ,கதவிலக்க எண் 50 இல் வசிக்கும் இளமாறனின்
மகன் வசந்த பாலன் பத்தாம் வகுப்பு முடித்து
அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆங்கில வழிப்
பாடப்பிரிவினைத் தேர்ந்தெடுத்துப் பயில விரும்புகிறார். அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழ்
-97, ஆங்கிலம் -70,கணிதம்-85,அறிவியல்-95,சமூக அறிவியல் – 90 தேர்வர் தம்மை வசந்த பாலனாக
நினைத்துக் கொண்டு உரிய படிவம் நிரப்புக.
3.
) தமிழர் மருத்துவ முறைக்கும், நவீன மருத்துவ முறைக்கும் உள்ள
தொடர்புக் குறித்து எழுதுக
4.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-
5.
சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற
தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.