நாள் : 14-03-2022 முதல் 18-03-2022
மாதம் : மார்ச்
வாரம் : மார்ச் - மூன்றாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. பெயர்ச்சொல்
கருபொருள் :
Ø அறுவகை பெயர்கள், இடுகுறி
பெயர், காரணப் பெயர்களை அறிதல்
உட்பொருள் :
Ø அறுவகை பெயர்கள் அறிதல்
Ø இடுகுறி
பெயர்
o இடுகுறி
பொதுப் பெயர்
o இடுகுறிச்
சிறப்புப் பெயர்
Ø காரணப்பெயர்
o காரணப்
பொதுப் பெயர்
o காரணச்
சிறப்பு பெயர்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காணொலிகள்,
கற்றல் விளைவுகள் :
Ø அறுவகை பெயர்கள், இடுகுறி
பெயர், காரணப் பெயர்களை அறிதல்
ஆர்வமூட்டல் :
Ø சிலவகையான
பெயர்களைக் கூற வைத்தும்,கரும்பலகையில் எழுதியும் பாடப்பொருளை ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø இலக்கணப்பகுதிகளை புரிந்து
படித்தல்
Ø பெயர்ச்சொல்லின் வகைகளை
அறிந்து படித்தல்
Ø இடுகுறிப்பெயரும்,காரணப்பெயரும்
வகையினை அறிந்து படித்தல்
நினைவு வரைபடம் :
பெயர்ச்சொல்
தொகுத்து வழங்குதல் :
பெயர்ச்சொல்
Ø ஒன்றன்
பெயரைக் குறிக்கும் சொல் பெயர்சொல்
Ø பொருட்பெயர்
: பொருளைக்
குறிக்கும் பெயர் பொருட்பெயர்
Ø இடப்பெயர்
: இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்பெயர்
Ø காலப்பெயர்
: காலத்தைக் குறிக்கும் பெயர் காலப் பெயர்
Ø சினை
பெயர் : பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர்
Ø பண்பு
பெயர் : பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர்
Ø தொழிற்
பெயர் : தொழிலைக் குறிக்கும் பெயர்
Ø இடுகுறிப்பெயர்
: நம்
முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு
வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.
Ø இடுகுறிப்
பொதுப்பெயர் : ஓர்
இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது
இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்
Ø இடுகுறிச்
சிறப்புப் பெயர் : ஓர்
இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர்
எனப்படும்.
Ø காரணப்பெயர் : காரணத்தோடு ஒரு
பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.
Ø காரணப்
பொதுப் பெயர் : காரணப்பெயர்
குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர்
எனப்படும்
Ø காரணச்
சிறப்புப் பெயர் : குறிப்பிட்ட
காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது
காரணச்சிறப்புப்பெயர் ஆகும்.
வலுவூட்டல் :
Ø வரைபடத்தாள் மற்றும்
கற்பித்தல் கருவிகள் மூலம் பாடத்தினை கற்பித்து வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
அவை யாவை?
Ø இடுகுறிப் பெயர் என்றால்
என்ன?
Ø நீர் நிரம்பு இருந்தவரை
ஊர் மக்களும், விலங்குகளும்,மரங்கொத்திப் போன்ற
பறவைகளும் பயன்படுத்தி மகிழ்ந்த
குளம் அது. இத்தொடரில் காணப்படும் இடுகுறிப் பெயர்களையும், காரணப்பெயர்களையும் எழுதுக.
குறைதீர் கற்றல் :
Ø
பாடநூலில்
உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை
மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø
பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
Ø பெயர்ச்சொற்களின் வகைகளை அறிதல்
Ø இடுகுறிப்பெயர்கள், காரணப்பெய்ர்களுக்கு எடுத்துக்காட்டுகளை
எழுதுதல்
தொடர் பணி :
Ø உங்கள் பகுதியில் நீங்கள் காணும் பொருட்களின் பெய்ர்களை
கண்டு அவை இடுகுறிப் பெயர், காரணப் பெயர் என வகைப்படுத்தி எழுதி வருக
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை