அன்பான தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ்விதையின் பணிவான வணக்கம். மார்ச் 8 உலக மகளிர் தினம். அன்றைய தினம் உருவான வரலாறு, இந்திய அளவில் புகழ்பெற்ற பெண்கள் பற்றி நாம் அறிந்துக் கொண்டு பெண்மையைப் போற்ற வேண்டும். நாம் ஒவ்வொரு வரும் பெண்கள் மூலம் தான் இந்த உலகை காணுகிறோம். அந்த தாய்மையின் குணத்தைப் போற்றுவோம். பெண்களின் உரிமையை நிலைநாட்டுவோம். இந்த உலக பெண்கள் தினத்தில் உங்களுக்கு சிறப்பு வினாடி - வினா நடத்தி அதில் 60% சதவீத மதிப்பெண் பெறும் அனைவருக்கும் இலவச மின் சான்றிதழ் வழங்கலாம் என யோசிக்கப்பட்டத் தருணத்தில் இந்த சிறப்புக் கட்டுரை உங்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது வீக்கிப்பிடீயா மற்றும் இணைய செய்தி வலைதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகளின் தொகுப்பு. இந்த சிறப்புக் கட்டுரையிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த சிறப்புக் கட்டுரையை வாசித்துப் பின் தேர்வுக்குக்கான இணைய இணைப்பை தொட்டு நீங்கள் தேர்வு எழுதலாம். ஒருவர் ஒரு முறை மட்டுமே தேர்வெழுத இயலும். இந்த சிறப்புக் கட்டுரையை வாசிக்காமல்ப் போனால் எந்த ஒரு வினாவிற்கும் உங்களால் தெளிவான ஒரு பதில் கொடுக்க முடியாது. எனவே சிறப்புக் கட்டுரையை வாசியுங்கள். வினாடி-வினாவில் பங்கேற்று மின் - சான்றிதழை வெல்லுங்கள்
உலக மகளிர் தினம்
சிறப்புக் கட்டுரை
பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதனை உருவாக்கியவர் யார்? மகளிர் தினத்துக்கு பின்னாலும் ஒரு போராட்ட வரலாறு உள்ளது.
மார்ச்-8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.[2] 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.
பெப்ரவரி 28, 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த
மார்ச் 25 1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலகப் பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.
- 1907-ல் தொடக்கம்.
- 1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம்,
- 1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு,
- 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம்,
- 1912-ல் Bread and roses வாசகம்,
- 1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம்,
- 1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம்,
- 1945 தனி பெண்ணுக்கான உரிமை, உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம். 1
- 1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.
- 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
சமீப காலமாகத்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. சரி இந்திய அளவில் புகழ்பெற்ற சில பெண்களைப் பற்றியும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டுமல்லவா? இங்கே இந்து தமிழ் திசை நாளிதழ் மூலம் கொடுக்கப்பட்ட முதல் இந்திய பெண்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் நாம் அறிந்துக் கொண்டு பெண்களை நம் நாட்டின் கண்களாகப் போற்றுவோம்.
ஆணுக்குப் பெண் சரி நிகர் என்பதை அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து சாதனைகளை நிகழ்த்துவதன் மூலம் பெண்கள் நிரூபித்துவருகிறார்கள். கலை, இலக்கியம், அரசியல், விளையாட்டு, பாதுகாப்புப் பணி, சாகசங்கள் செய்வது என அனைத்திலும் சாதித்த இந்தியப் பெண்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அதில் சில முக்கியத் துறைகளில் முதல் முறையாக ஒரு விஷயத்தைச் செய்து இறவாப் புகழடைந்த பெண்கள் இவர்கள்:
>> புலா செளத்ரி
மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் 1970-ல் பிறந்தவர். கில்ப்ரல்டார் ஜலசந்தி, திர்ரீனியன் கடல், குக் ஜலசந்தி, டொரோனிய வளைகுடா, கட்டாலின கால்வாய் ஆகிய ஐந்து கண்டங்களில் உள்ள கடல் கால்வாய்களை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண். உலக அளவில் ஏழு கடல்களை நீந்திக் கடந்த முதல் பெண்ணும் இவரே. பத்மஸ்ரீ, அர்ஜுனா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
>> பச்சேந்த்ரி பால்
உத்தராகண்ட் மாநிலத்தில் 1954-ல் பிறந்தவர். 1984-ல் மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் இந்தியப் பெண் என்ற புகழை அடைந்தார். பத்மஸ்ரீ, தேசிய சாகச விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
>> அதிதி பந்த்
நாக்பூரில் பிறந்த கடலியல் நிபுணரான அதிதி, 1983-ல் ‘அண்டார்டிகா கண்டத்தை அடைந்த முதல் இந்தியப் பெண்’ ஆனார். இதற்காக இந்திய அரசு வழங்கும் ‘அண்டார்டிகா விருது’ அவருக்கு வழங்கப்பட்டது.
>> ராதிகா மேனன்
இந்தியக் கடற்படையின் மெர்செண்ட் நேவி கேப்டனான முதல் பெண். வங்காள விரிகுடாவில் மூழ்கும் நிலையில் இருந்த படகிலிருந்து ஏழு மீனவர்களை மீட்டதற்காக, ஐ.நா. சார்பு நிறுவனமான சர்வதேசக் கடல்சார் அமைப்பு (International Maritime Organisation) 2016-ல் இவருக்கு ‘கடலில் அரிதான துணிகரச் செயலுக்கான’ விருதை வழங்கியது. அந்த விருதைப் பெற்ற முதல் பெண் இவர்தான்.
>> டயானா எடுல்ஜி
1956-ல் மும்பையில் பிறந்தவரான டயானா ஏடுல்ஜி இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் ஆவார். டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருந்த இவர் மகளிர் டெஸ்ட் வரலாற்றில் அதிகப் பந்துகளை வீசிய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
>> முனைவர் ஆஷா பாண்டே
ஃபிரெஞ்சு மொழியை இந்தியாவில் பிரபலப்படுத்தியவரான இவர் 2010-ல் ஃபிரெஞ்சு அரசின் மிக உயரிய விருதான செவாலியே விருதைப் பெற்றார். செவாலியே விருது வாங்கிய முதல் இந்தியப் பெண் இவர்தான்.
>> நீரு சத்தா
டெல்லியைச் சேர்ந்த சட்ட நிபுணரான இவர் ஐ.நா. சார்பு அமைப்பான சர்வதேசக் கடல் சட்டத் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண். 2017-ல் தொடங்கிய இவரது பதவிக் காலம் 2026-ல் நிறைவடைகிறது.
>> சித்ரா ராமகிருஷ்ணா
தேசிய பங்குச் சந்தையின் தலைமை இயக்குநர், தலைமை நிர்வாக இயக்குநர் பதவிகளை வகித்த முதல் பெண். தேசியப் பங்குச் சந்தையைத் தொடங்குவதற்கான குழுவில் இடம்பெற்று அதில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
>> டெஸ்ஸி தாமஸ்
கேரளத்தைச் சேர்ந்த இந்த வானியல் அறிவியலாளர் அக்னி-IV ஏவுகணைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கியதன் மூலம் இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் என்ற புகழைப் பெற்றார். இந்தியாவின் ‘ஏவுகணை மனிதி’ என்று அழைக்கப்படுபவர்.
>> பக்தி ஷர்மா
மும்பையில் பிறந்து உதய்பூரில் வளர்ந்தவரான பக்தி ஷர்மா, அண்டார்டிக் பெருங்கடலில் ஒரு டிகிரி கடும் குளிரில் 41.4 நிமிடங்களில் 2.25 கிலோமீட்டர் தூரம் நீந்தி சாதனை புரிந்த முதல் ஆசியப் பெண். உலகின் ஐந்து பெருங்கடல்களிலும் நீந்தியவர். டென்சிங் நார்கே தேசிய சாகச விருதைப் பெற்றவர்.
>> ஆரதி சாஹா
1940-ல் கல்கத்தாவில் பிறந்த நெடுந்தூர நீச்சல் வீராங்கனை. 1959-ல் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் ஆசியப் பெண் ஆனார். 1960-ல் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை ஆனார்.
>> மேரி பூணன் லூகோஸ்
பிரிட்டிஷ் இந்தியாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1886-ல் பிறந்த மகப்பேறு மருத்துவரான இவர் இந்தியாவின் முதல் பெண் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினரும் இவரே. 1975-ல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
>> சி.பி.முத்தம்மா
கர்நாடகத்தின் கொடகு மாவட்டத்தில் பிறந்து சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்த இவர் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற்ற முதல் பெண். இந்திய அயலுறவு சேவைத் துறையில் சேர்ந்த முதல் பெண்ணும் இவரே. 1970-ல் ஹங்கேரிக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் தூதர் என்ற புகழையும் அடைந்தார்.1986-ல் இந்தியாவின் முதல் சோதனைக் குழாய்க் குழந்தை பிரசவிக்கக் காரணமாக இருந்த மகப்பேறு மருத்துவர். 2011-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
>> கமலா சோஹோனி
மத்தியப் பிரதேசத்தில் 1912-ல் பிறந்த இவர் உயிரி வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றதன் மூலம் இந்தியாவில் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற புகழை அடைந்தார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மையத்தில் (Indian Institute of Science) படித்த முதல் பெண்ணும் இவர்தான்.
நன்றி : விக்கிபீடியா,மற்றும் இந்து தமிழ் திசை இணைய செய்தித்தாள் தகவல்கள்
வினாடி - வினா வில் பங்கேற்க
இங்கே சொடுக்கவும்
this quiz is very easy and very helpful gentral knowledge improve my self thank you
ReplyDelete