6TH - NOTES OF LESSON - MARCH - 2ND WEEK

 நாள்                 :           07-03-2022 முதல்  12-03-2022         

மாதம்                           மார்ச்            

வாரம்               :           மார்ச்   - இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :             ஆறாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. பாதம்

கருபொருள்                            :

Ø  பிறர் பொருளை விரும்பாமை ஓர் அறம் என்பதனை உணர்தல்.

உட்பொருள்                           :

Ø  கற்பனை கதையின் நுட்பத்தை அறிதல்

Ø  ஒற்றைக் காலணி அதிசயத்தை வியத்தல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காணொலிகள்,

கற்றல் விளைவுகள்                 :

Ø  பிறர் பொருளை விரும்பாமை ஓர் அறம் என்பதனை உணர்தல்.

ஆர்வமூட்டல்                          :

Ø  மாணவர்கள் தாங்கள் அறிந்த கதையினைக் கூற வைத்து பாடப்பொருளை ஆர்வமூட்டல்

படித்தல்                                  :

Ø  கதை சொல்லி போக்கில் பாட்ததைப்  படித்தல்

Ø  நிறுத்தற் குறி அறிந்து குரலில் ஏற்றத்தாழ்வுக் கொண்டுப் படித்தல்.

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய சொற்களின் பொருளை அகராதிக் கொண்டு அறிதல்.

நினைவு வரைபடம்                 :

பாதம்

 

தொகுத்து வழங்குதல்             :

 

பாதம்

Ø  கதை மாந்தர்கள் : மாரி, சிறுமி

Ø  கதையின் மையப் பொருள் : காலணி

Ø  மையக் கருத்து: பிறர் பொருட்களுக்கு ஆசைப்படாமல் வாழும் போது தமது நிலை தாமாக உயரும்.

Ø  ஆசிரியர் : எஸ்.இராமகிருஷ்ணன்

Ø  எழுதிய நூல்கள்: உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள்

Ø  கதை அமைந்த நூல் : தாவரங்களின் உரையாடல்

Ø  கற்பனைக் கதைகளில் வரும் அறத்தை உணர்த்துதல்

வலுவூட்டல்                             :

Ø  மாணவர்களை பங்கேற்று நடிக்க வைத்து அதன் வழியாக அறச்சிந்தனையை மாணவர்களுக்கு ஊட்டி பாடப்பொருளை வலுவூட்டல்.

 

மதிப்பீடு                                 :

Ø  காலணி தைக்கும் தொழிலாளி பெயர் என்ன?

Ø  அவர் எந்த பாதத்தின் காலணியை தைத்துக் கொடுத்தார்?

Ø  அந்த காலணியின் தன்மை எப்படி இருந்தது?

Ø  இந்த கதையை எழுதிய ஆசிரியர் யார்?

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

Ø   கற்பனை கதையின் வழியே அறச்சிந்தனையை வளர்த்தல்.

தொடர் பணி                          :

Ø  இதே காலணி உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்பது குறித்து எழுதி வருக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post