10TH - NOTES OF LESSON - MARCH - 2ND WEEK

  நாள்                 :           07-03-2022 முதல்  12-03-2022          

மாதம்               :             மார்ச்          

வாரம்               :           மார்ச்-  இரண்டாம்   வாரம்                                        

வகுப்பு              :            பத்தாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :    1. தேம்பாவணி

கரு பொருள்:

Ø  மனித மாண்புகளையும்,விழுமியங்களையும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல்

உட்பொருள்:

Ø  ஆசிரியர் குறிப்பு அறிதல்

Ø  பாடல் பொருள் அறிதல், மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்.

கற்றல் விளைவுகள் :

Ø  மனித மாண்புகளையும்,விழுமியங்களையும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல்

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø     உனக்குத் தெரிந்த சமயங்களின் பெயர்களையும், அவற்றின் புனித நூல்களின் பெயர்களையும் கேட்டறிந்து அதன் மூலமாகப் பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

                              வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள் முதலியன.

முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:

·        சாதாரண உயிரினங்களின் துயரத்தைப் பகிர்ந்துக் கொள்ளும் மனிதம்

·        தேமாவணி – நூற் குறிப்பு

·        தேம்பா + அணி = தேம்பாவணி – வாடாத மாலை

·        தேன் + பா + அணி – தேம்பாவணி – தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு

·        ஆசிரியர் : வீரமாமுனிவர்

·        இயற் பெயர் : கான்சுடான்சு சோசப் பெசுகி

·        எழுதிய நூல்கள் : சதுரகராதி, தொன்னூல் விளக்கம், சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குரு கதைகள்,மொழிபெயர்ப்பு நூல்கள்

·        இஸ்மத் சன்னியாசி – தூய துறவி

·        கருணையன் தாயார் எலிசபெத் அவர்களுடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார்.

·        அச்சூழலில் அவரின் தாயார் இறந்து விட கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்கு கொள்கிறது.

ஆசிரியர் செயல்பாடு:

Ø    வீரமாமுனிவர் பற்றி அறிமுகம் செய்தல்

Ø    தேம்பாவணி பற்றி கூறல்

Ø    பாடல்களை சீர்ப்பிரித்து வாசித்துக் காட்டி, மாணவர்களையும் வாசிக்க வைத்தல்.

Ø    மனப்பாடப்பாடலை மனனம் செய்யும் திறன் வளர்த்தல்.

மாணவர் செயல்பாடு:

Ø    வீரமாமுனிவர் பற்றி தெரிந்துக் கொள்ளுதல்.

Ø    தேம்பாவணி பற்றிய குறிப்புகளை அறிதல்.

Ø    பாடல்களை சீர் பிரித்து வாசித்தல்

Ø    புதிய சொற்களை அடையாளம் காணுதல்

Ø    பாடல் பொருளை இன்றைய வாழ்வியல் சூழல்களோடு ஒப்பிடல்

கருத்துரு வரைபடம்

தேம்பாவணி

 

 

வலுவூட்டல்:

                                            விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

                                              மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை

மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு:

Ø  வீரமாமுனிவர் பற்றி அறிதல்

Ø  வண்ண எழுத்துகளில் உள்ள தொடர்களை படித்தல்

Ø  எளியத் தொடர்களைப் படித்தல்

Ø  ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தல்

Ø  மனப் பாடலை மனனம் செய்தல்

மதிப்பீடு:

Ø  இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள் யாது?

Ø  வீரமாமுனிவர் படைத்த நூல்கள் யாவை?

Ø  கருணையன் என அழைக்கப்படுவபவர் யார்?

Ø  இயேசுவின வருகையை அறிவித்த முன்னோடி யார்?

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post