நாள் : 07 - 03 -2022 முதல் 12 - 03 - 2022
மாதம் : மார்ச்
வாரம் : மார்ச் - இரண்டாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. எச்சம்
2. கல்வி அழகே அழகு
கருபொருள் :
Ø எச்சச்
சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.
Ø நீதி
நூல்களைப் படித்து அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுதல்.
உட்பொருள் :
Ø எச்சச்
சொற்கள் பற்றியும், அதன் வகைகள் பற்றியும் அறிதல்
Ø குமரகுருபரர்
பற்றியும், அவர் தம் பாடல் வழி புலப்படும் அறக்கருத்தினை உணர்தல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகள்
கற்றல் விளைவுகள் :
Ø எச்சச்
சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.
Ø நீதி
நூல்களைப் படித்து அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுதல்.
ஆர்வமூட்டல் :
Ø வினைமுற்று
சொற்களை கரும்பலகையில் எழுதி அவற்றிலிருந்து வினாக்கள் கேட்டுப் பாடப்பொருளை ஆர்வ மூட்டல்
Ø ஊரடங்கு
காலத்தில் நீ எப்படி கல்வி கற்றாய்? என மாணவர்களிடம் வினவி பாடப்பொருளை ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø ஆசிரியர் படித்தல், பின்
தொடர்ந்து மாணவர்களும் படித்தல்.
Ø பாடலை இனிய இராகத்தில்
பாடுதல்
Ø முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைக்கான
பொருள் அறிதல்
நினைவு வரைபடம் :
எச்சம்
கல்வி
அழகே அழகு
தொகுத்து வழங்குதல் :
எச்சம்
Ø முற்று பெறாத வினைச்சொல்
- எச்சம்
Ø எச்சம் பெயரைக் கொண்டு
முடிந்தால் பெயரெச்சம்
Ø பெயரெச்சம் இரண்டு வகை
: 1. தெரிநிலைப் பெயரெச்சம் 2. குறிப்பு
பெயரெச்சம்
Ø எச்சம் வினையைக் கொண்டு
முடிந்தால் – வினையெச்சம்
Ø வினையெச்சம் இரண்டு வகை
: 1. தெரிநிலை வினையெச்சம் 2. குறிப்பு
வினையெச்சம்
கல்வி அழகே அழகு
Ø ஆசிரியர் : குமரகுருபரர்
Ø காலம் : 17ம் நூற்றாண்டு
Ø இயற்றிய நூல்கள் : கந்தர்
கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,முத்துக்குமாரசுவாமி
பிள்ளைத் தமிழ்
Ø மக்களுக்கு தேவையான நீதிகளைச்
சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.
Ø அணிகலன்களுக்கு அழகு
கூட்ட அணிகலன் தேவை இல்லை,
Ø கற்றவர்களுக்கு அவர்கள்
கற்ற கல்வியே அழகு
வலுவூட்டல் :
Ø காணொளி காட்சிகள் மூலம்
பாடப்பொருளை வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø முற்று பெறாத வினைச்சொல்
___________
Ø அழகிய மரம் என்பது
_________
Ø குறிப்பு வினையெச்சம்
எவ்வாறு வரும்?
Ø கற்றவர்களுக்கு அழகு
தருவது ____________
Ø குமரகுருபரர் இயற்றிய
நூல்கள்?
Ø இப்பாடலில் காணப்படும்
நயங்களைச் சுட்டுக.
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்
பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை
மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø
பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø எளிய வகை செயல்களின் சொற்களை எழுதுதல்.
Ø மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தல்
Ø அன்றாடம் மாணவர் செய்யக் கூடிய எளிய வகை செயல்பாடுகளை
வகைப்படுத்துதல்
தொடர் பணி :
Ø “ வந்த “ என்னும் சொல்லைப்
பயன்படுத்தி வெவ்வேறுத் தொடர்களை எழுதுக.
Ø கல்வி குறித்த பழமொழிகளை
திரட்டி எழுதி வருக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை