நாள் : 21-02-2022 முதல் 26-02-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி - நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : தாய்மைக்கு வறட்சி இல்லை
கரு பொருள்:
·
மனிதம் சார்ந்த படைப்புகளைப் படைப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புடன்
வாழக் கற்றுக்கொள்ளுதல்.
உட்பொருள்:
·
எது வறண்டாலும் மனிதம்
வறண்டுவிடக் கூடாது என்பது பன்னெடுங்கால விழைவாகவும் செய்தியாகவும் திகழ்கிறது.
தமிழ்ச் சிறுகதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை,
சு.சமுத்திரம் அவர்களின் சிறுகதை வாயிலாக அறிதல்
·
சு.சமுத்திரம்
அவர்களின் படைப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
கற்றல் விளைவுகள் :
·
மனிதம் சார்ந்த படைப்புகளைப் படைப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புடன்
வாழக் கற்றுக்கொள்ளுதல்
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø தங்கள் தாயாரின் பணிகளை குறித்து கூறுக.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள் முதலியன.
முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:
தாய்மைக்கு
வறட்சி இல்லை:
·
கர்நாடக மாநிலம்,
குல்பர்கா நகர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு வறுமையான குடும்பம்
வாழ்ந்து வந்தது.
·
ஒருநாள் அங்கு வந்த அரசு
அதிகாரி அந்த வறுமையான குடும்பத்திற்கு உணவளித்து உதவி செய்ய முற்பட்டார்.
·
ஆனால் பசியை விட மானம்
பெரிது என்று எண்ணிய அந்த குடும்பத்தினர் இந்த உணவை வாங்குவதற்குத் தயங்கினர்.
·
ஒரு வழியாக அவர் அளித்த
உணவை வாங்கியதும், அவர்களுடைய குழந்தைகளோடு வளர்ந்து வந்த
நாய்க்குட்டிகளும் பசியால் ஒலியெழுப்பின.
·
அந்த ஏழைத் தாய் தன்னிடம்
இருந்த உணவை அந்த நாய்க் குட்டிகளுக்கு ஊட்டிவிட்டாள்.
·
அவனது தட்டில் உணவு குறைய
குறைய தாய்மை கூடிக்கொண்டே சென்றது.
ஆசிரியர் செயல்பாடு:
§ ஆசிரியர்,
தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற இந்த சிறந்த கதையை உடல் மொழிகள்
மூலமும் மெய்ப்பாடுகள் மூலமும் மாணவர்களுக்குப் பொருள் விளங்குமாறு எடுத்துக்
கூறுதல்.
§
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப
மாணவர்களைத் தேர்வு செய்து தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற கதையை நாடகமாக நடித்துக்
காட்டச் செய்தல்
மாணவர்
செயல்பாடு:
Ø
மாணவர்கள் வறுமையை விடத் தன்மானம் பெரிது என
உணர்தல்.
Ø
தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை அறிந்துகொள்ளுதல்.
கருத்துரு வரைபடம்
தாய்மைக்கு வறட்சி இல்லை
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி
கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு:
o
கதையின் சுருக்கத்தை கூறல்
o
கதையின் முக்கிய கருத்தை
உணர்தல்
மதிப்பீடு :
Ø கதை நடக்கும் களம் எந்த மாநிலத்தில் இருந்தது?
Ø
ஏழை குடும்பத்திற்கு உதவி செய்த அதிகாரி என்ன மொழி பேசினார்?
Ø
அதிகாரி அந்த குடும்பத்திற்கு என்ன உணவு கொடுத்தார்?
Ø
”தாய்மைக்கு வறட்சி இல்லை” என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
தொடர்பணி:
·
தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற சிறுகதையை உரையாடல் வடிவில் எழுதி வரச் செய்தல்.
________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை