10TH - NOTES OF LESSON - FEBRUARY - 4TH WEEK

 நாள்                 :           21-02-2022 முதல்  26-2-2022          

மாதம்               :             பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி-  நான்காம்   வாரம்                                        

வகுப்பு              :            பத்தாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :    1. இராமானுசர் நாடகம்

                                        2. பா - வகை அலகிடல்


 கருபொருள்:

@ கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வடிவங்களைப் படித்துணர்ந்து சொல்லப்படும் கருத்தை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்படுத்துதல்.

@ தமிழில் நான்கு பா வகைகள் குறித்த அறிமுகம் பெற்று மேலும் கற்க ஆர்வம் கொள்ளுதல்.

உட்பொருள்:

# தலைமுறைக்கு ஒரு முறை மூங்கில் மலர்வது போல, தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்கள் ஞானிகள். அத்தகைய நாடுகளில் குறிப்பிடத்தக்கவர் ஆகிய ராமானுஜரைப் பற்றி நாடக வடிவில் அறிதல்

பல்வகைப் பாக்களையும் அவற்றிற்கான ஓசைகளையும் அறிதல்.

# தரப்பட்ட திருக்குறளை அலகிட்டு வாய்ப்பாடு எழுது அறிதல்.

பாட அறிமுகம்

Ø  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ எது தெரியுமா? என்ற வினாவை மாணவர்களிடையே எழுப்பி அவர்கள் கூறும் விடை மூலம்,” அரிதாக மலரும் குறிஞ்சி மலர் போல அரிதாக மலர்பவர்களே ஞானிகள் என்று கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்

Ø  நாம் அன்றாடம் பேசும் சொற்களில் ஒவ்வொரு சொல்லுக்கும் எத்தனை அசைகள் உண்டு தெரியுமா? என்ற வினாவை கேட்டு, விளக்கம் அளித்து பாடத்தை அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்:

      வலையொளிப்பதிவுகள்,உயர்தொழில்நுட்ப ஆய்வகம்,பாடநூல்,சுண்ணக்கட்டி, கரும்பலகை,கல்வியிற் சிறந்த பெண்களின் புகைப்படங்கள் முதலியன.

முக்கிய கருத்துகள்:

    இராமானுசர் நாடகம்:

@ இராமானுசர் அவரது சீடர்களும் தன்னுடைய குருவான பூரணரைச் சந்திக்கச் செல்கிறார்.

@ நீண்டகாலமாக இராமானுசர் பூரணரிடம் கேட்டுக் கொண்டிருந்த கூடிய புனிதத் திருமந்திரத்தை அன்று இராமானுசருக்குச் சொல்வதாகப் பூரணர் உறுதியளித்தார்.ஆனால் திருமந்திரத்தை  யாருக்கும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையை விதித்தார்.

@  திருமந்திரத்தை மற்றவருக்குச் சொன்னால் தனது குரு தன்னை தண்டிப்பார் என்று தெரிந்தும் மக்களின் நலன் வேண்டி திருமந்திரத்தை மக்களுக்கு இராமானுசர் எடுத்துக்கூறினார்.

@  தனது சீடருடைய பரந்த மனப்பான்மையை எண்ணி பூரணர் பெருமகிழ்ச்சி அடைந்தார்

   பாவகை, அலகிடுதல்:

ü  பா  வெண்பா, ஆசிரியப்பா ,கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைப்படும்

ü அவை முறையே  செப்பலோசை, அகவலோசை ,துள்ளலோசை, தூங்கலோசை என்ற ஓசைகளை உடையன.

ü எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன செய்யுள் உறுப்புகள் ஆகும்.

ü   எழுத்து, அசை, சீர் ஆகிய உறுப்புகளைப் பற்றி அறிந்திருத்தல் மூலம் அலகிட்டு வாய்பாடு எழுத முடியும்.

ஆசிரியர் செயல்பாடு:

§  நிகழ்காலச் சான்றுகள் மூலம் இராமானுசர் எத்தகைய அற நோக்கு உடையவர் என்பதை விளக்குதல்

§  கரும்பலகை பயன்படுத்தி செயல் உறுப்புகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக தெளிவுர எழுதி விளக்கியும், அலகிட்டு வாய்ப்பாடு எழுதத்  தேவையான குறிப்புகளை விளக்கிக் கூறியும் மாணவர்களுக்கு அலகிட்டு வாய்ப்பாடு எழுத கற்றுத் தருதல்.

மாணவர் செயல்பாடு:

Ø  மானுடம் தழைத்து அறம் மேலோங்கவே, சமயங்கள் உருவாக்கப்பட்டன என்பதை உணர்தல்.

Ø  இராமானுசர் போன்ற சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிவதன் மூலம் ,பிறருக்குப் பயன்பட்டு வாழ்வது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ளுதல்.

Ø யாப்பிலக்கணத்தின் முக்கிய கூறாகிய அலகிட்டு வாய்ப்பாடு எழுதக் கற்றுக் கொள்ளுதல்

கருத்துரு வரைபடம்:

இராமானுசர் நாடகம்

பாவகை,அலகிடுதல்


வலுவூட்டல்:

      விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

  •     இராமனுசர் நாடகத்தின் மையக் கருத்தினை அறிதல்
  • நற்பண்புகளை அறிதல்
  • பா - வகை அறிதல்
  • திருக்குறளை சீர் பிரித்து அசை பிரிக்கும் முறை அறிதல்

மதிப்பீடு:

Ø  இராமானுசரின் குரு யார்?

Ø  இராமானுசரின் சீடர் பெயர்கள் யாவை?

Ø  நாடகத்தின் கதைக்களம் எந்த ஊரில் அமைந்துள்ளது?

Ø  பா எத்தனை வகைப்படும்?

Ø நேர்+நிரை என்ற ஈரசைச்சீரின் வாய்பாடு என்ன?

தொடர்பணி:

#      இராமானுசர் நாடகத்தை உரையாடல் வடிவில் எழுதிவரச் செய்தல்.

#     2 திருக்குறள்களைக் கொடுத்து வீட்டில் அலகிட்டு வாய்பாடு எழுதி வரச்செய்தல்


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post